வெகு சிலர் ஆவேசமாக ஜெபத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர்: "தென் கொரியாவில் உள்ள ஜெப மலைகளில் இருந்து வட கொரியாவுக்காக தேவ பிள்ளைகளின் உருக்கமான ஜெபங்களுக்கு தேவன் ஏன் பதிலளிக்கவில்லை" என்று கூறினார். அதற்கு மிகுந்த மௌனம் நிலவியது. 1945 முதல், வட கொரியா ஒரு கம்யூனிஸ்ட் நாடாக இருந்து வருகிறது. வடகொரியாவில் வேதாகமம் வைத்திருந்ததற்காக இரண்டு வயது குழந்தையும் பெற்றோரும் சிறையில் அடைக்கப்பட்டனர் (டைம்ஸ் ஆஃப் இந்தியா 27 மே 2023). இறையாண்மையுள்ள தேவன் ஏன் கோடிக்கணக்கான மக்களின் ஜெபத்தைக் கேட்கவில்லை என்பது யாருக்கும் தெரியாது.
உண்மையான ஜெபங்கள்:
ஜெபத்தைப் பற்றி குழுவில் இருந்தவர்களுக்கு சில தவறான புரிதல்கள் இருந்தன. முதலில் , ஜெபம் வெற்றியைத் தரும். ஜெபத்திற்கு பதில் அளித்து வெற்றியை அளிப்பவர் தேவன். இரண்டாவது , அனைத்து நேர்மையான ஜெபங்களுக்கும் பதிலளிக்கப்படும். தேவன் தனது தெய்வீக சித்தம் மற்றும் நோக்கத்தின்படி ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார். மூன்றாவது , நாம் எந்த சந்தேகமும் இல்லாமல் விசுவாசத்தோடு ஜெபிக்கும்போது தேவன் பதிலளிக்கிறார். விசுவாசம் தேவனோடு தொடர்புடையது, அவருடைய தன்மை, விருப்பம் மற்றும் நோக்கம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேளுங்கள்:
ஜெபம் என்பது தேவனுடனான நெருக்கமான உரையாடல்கள். ஆயினும்கூட, தேவ பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும்படி கேட்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார். "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்" (மத்தேயு 7:7). தேவையையும் சூழலையும் தேவன் அறிந்திருக்கிறார், ஆனாலும் தெரிவு செய்து நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார். இயேசுவின் நாமத்தினால் கேட்கப்படாத ஜெபங்கள் விலாசம் இல்லாமல் அனுப்பப்படும் அஞ்சல் போன்றது (யோவான் 14:13).
விசுவாசம்:
ஜெபம் என்பது தேவன் ஜீவிக்கிறார் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது, அவர் நம் வேண்டுகோள்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து பதிலளிக்கிறார். விசுவாசம் என்பது தேவ பண்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது; ஆம், அவருடைய அன்பு, நன்மை, வல்லமை, அதிகாரம், இரக்கம், கிருபை, ஞானம் மற்றும் திட்டம் எல்லாம் சார்ந்தது. இது கண்மூடித்தனமான அல்லது குருட்டு விசுவாசம் அல்ல.
தேவ சித்தம்:
ஜெபம் என்பது தேவனின் விருப்பத்தை பகுத்தறிவதன் அடிப்படையில் இருக்க வேண்டும். ஜெபங்கள் தேவ சித்தத்தின் படி இருக்க வேண்டும் (1 யோவான் 5:14). முதலில், ஒவ்வொரு சூழலுக்கும் தேவனின் குறிப்பிட்ட சித்தமும் நோக்கமும் உள்ளது. தேவன் தனது ஞானத்தில் ஒவ்வொரு தனித்துவமான வரலாற்று சூழலுக்கும் அவரது சித்தத்தை வெளிப்படுத்துகிறார். இரண்டாவது, தேவனுக்கு ஒட்டுமொத்த திட்டம் அல்லது ஒரு வரைப்படமே உள்ளது. அந்த பெரிய புதிர் வரைப்படத்தில் நாம் ஒவ்வொருவரும் ஒரு ஒரு துண்டு பகுதியாக பொருந்துகிறோம். ஆனால் பெரிய வரைப்படத்தை அறிவது முக்கியம். மூன்றாவது, தேவனுக்கென்று ஒரு கால அட்டவணை உள்ளது. அவர் குறிப்பிட்ட நேரத்திற்கு முன் எதுவும் நடக்காது அல்லது தாமதிக்கவும் செய்யாது, அதினதின் காலத்தில் நேர்த்தியாய் நடக்கும். நான்கு, தேவன் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுகிறார், அதில் நமது ஜெபங்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும்.
எனது ஜெபம் தேவனின் மகிமையைத் தேடுகிறதா அல்லது சுயமகிமையைத் தேடுகிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்