தாவீது பிறந்தபோது கோலியாத் ஒரு சிப்பாயாக தனது பயிற்சியைத் தொடங்கியிருக்க வேண்டும். தாவீதின் வயது (16-19 வயது) கோலியாத்தின் அனுபவம். அந்த நேரத்தில் வீரர்கள் பயன்படுத்திய கவசத்தை தாவீது பரிசோதித்து பார்த்ததேயில்லை அல்லது பயிற்சி செய்ததில்லை (1 சாமுவேல் 17:39).
சவால்:
அவனது கம்பீரமான உடலமைப்பு, வலிமை, எதிர்க்கும்திறன் மற்றும் இடிமுழக்கமான குரல் ஆகியவற்றால், அவன் தோற்கடிக்க முடியாத ராட்சதராக காணப்பட்டான். பெலிஸ்தியனாகிய கோலியாத் ஆறு முழமும் ஒரு ஜாணுமாம், அதாவது 9 அடி 9 அங்குலம். சில மொழிபெயர்ப்பில் உயரம் 6 அடி மற்றும் ஒன்பது அங்குலம் என கொடுக்கப்பட்டுள்ளது. அவன் அக்காலத்திலே சமீபத்திய இராணுவ ஆயுதங்களுடன் நன்கு ஆயுதம் ஏந்தியிருந்தான். அவன் தன் தலையின்மேல் வெண்கலச் சீராவைப் போட்டு, ஒரு போர்க்கவசம் தரித்துக்கொண்டிருப்பான்; அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சேக்கலான வெண்கலமாயிருக்கும். அவன் தன் கால்களிலே வெண்கலக்கவசத்தையும் தன் தோள்களின்மேல் வெண்கலக் கேடகத்தையும் தரித்திருப்பான். அவனுடைய ஈட்டித்தாங்கு நெசவுக்காரரின் படைமரத்தின் கனதியும் அவன் ஈட்டியின் அலகு அறுநூறுசேக்கல் இரும்புமாயிருக்கும். இப்படிப்பட்ட கர்வம் மிகுந்த கோலியாத் தனக்கு எதிராக போரிட ஒருவனை வழங்குமாறு இஸ்ரவேல் தேசத்திற்கு சவால் விடுத்தான். வெற்றி பெறுபவரின் வெற்றி தேசத்தின் வெற்றியாக இருக்கும்.
சரியான தேர்வு:
கோலியாத்துடன் சண்டையிடுவதற்கான சரியான தேர்வு சவுல் தான். எப்படியெனில் இஸ்ரவேலில் எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான் (1 சாமுவேல் 9:2) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது சவுல் 6 அடி உயரம். இருப்பினும், கோலியாத்துடன் சண்டையிட சவுல் வேறொருவரை நியமிக்க முயன்றான்.
சமர்ப்பிக்கும் தாவீது:
சவுல் தாவீதைக் கண்டு ஈர்ப்படையவில்லை. இருப்பினும், காட்டு விலங்குகளுடன் தனக்கு வெவ்வேறு அனுபவங்கள் இருப்பதாகவும் அவைகளிடம் வெற்றி பெற்றதாகவும் தாவீது வலியுறுத்தினான். தயக்கத்துடன், சவுல் ஒப்புக்கொள்கிறான், ஆனால் தாவீதை போர் வீரன் போல காட்டுவதற்காக தன் வஸ்திரங்களையும் வெண்கலமான சீராவையும் கவசத்தையும் வழங்குகிறான், அது எதுவும் தாவீதிற்கு பழக்கம் இல்லை, சௌகரியமாகவும் இல்லை. தாவீதோ இவை அனைத்திற்கும் பதிலாக, ஒரு கவண் மற்றும் ஐந்து கூழாங்கல்லைத் தேர்ந்தெடுத்தான் (1 சாமுவேல் 17:40).
சல்லடை ஓட்டை:
கோலியாத் தாவீதை கேலி செய்தான்; இருப்பினும், தாவீது கர்த்தரின் நாமத்தினால் போருக்குச் சென்றான் (1 சாமுவேல் 17:45). கோலியாத்தின் நெற்றி மாத்திரம் எந்த கவசமும் இன்றி காணப்பட்டதை தாவீது கவனித்தான். கல் ஈட்டி அல்லது அலகு அல்லது வேல்கம்பு என அனைத்தையும் விட வேகமானது மற்றும் நீண்ட தூரத்தில் இருந்து வீசப்படலாம். உண்மையில், நீண்ட தூரத்திலிருந்து எறிவது, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். வெண்கல கவசம் மற்றும் கேடயம் ஒரு கவணில் இருந்து வேகமாக வரும் கல்லை நிறுத்த முடியவில்லை. நிச்சயமாக, ஒரு கல்லால் ஒரு திடீர் தாக்குதலை கோலியாத் எதிர்பார்க்கவில்லை.
தாவீதைப் போல எனக்கும் கர்த்தரிடத்தில் வைராக்கியமும், கர்த்தரிடத்தில் விசுவாசமும், கர்த்தரிடமிருந்து ஞானமும் இருக்கிறதா?
Author: Rev. Dr. J. N. Manokara