"என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள் பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன்" (உன்னதப்பாட்டு 1:9), என்று தன் மணவாளனை நோக்கி மணவாட்டி பாடுகிறாள். "என் பிரியமே" என்று கிறிஸ்து தன் சொந்த ஜனத்தை அழைக்கிறார்! நாம்தான் அவரின் எரியும் அக்கினியான அன்பின் சக்தியால் ஈர்ப்பிக்கும் பொருள்! அவரது அன்பின் ஜுவாலை எப்போதும் எரிந்துகொண்டிருக்கின்றது. ஆனால், நாம் அவர்மேல் வைக்கும் அன்பு ஊசலாடிக்கொண்டோ, குறைந்துகொண்டோ இருக்கின்றது. அவரது அன்போ அவரின் இருதயத்தின் அடியிலிருந்து புறப்பட்டு அவரது வார்த்தைகளால் வெளிப்பட்டு உங்களை "என் பிரியமே" என்று அழைக்கிறது. இந்த அக்கினிமயமான அவரது நேசம், அவரின் அன்பை புரிந்துகொள்ளாமல் உங்களின் அலட்சியமான நீடிய உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பி, வற்றாததும் எப்போதும் சுரக்கும் நீரோடையாக உங்கள் மேல் ஊற்றப்படுவதை உணரச்செய்யும்! உங்களின் கடந்தகால தோல்விகளை எண்ணி, உங்களை தானாகவே குற்றவாளியெனத் தீர்த்து, நீங்கள் உங்களின் ஆவிக்குரிய வாழ்க்கையில் பலவீனராகி இருக்கிறீர்கள். அல்லது சாத்தானின் மிகைப்படுத்தும் குற்றச்சாட்டுகளைக் கேட்டோ, நீங்கள் குற்ற மனப்பான்மையில் இருக்கலாம். ஆனால் மணவாளன் உங்களை பார்வோனுடைய இரதங்களுடன் ஒப்பிட்டு நீங்கள் பலவீனமான மனிதன் அல்ல என்று கூறுகிறார். உங்களால் பார்வோனுடைய இரதங்களை மேற்கொள்ளும் வல்லமை உங்களில் வாசமாயிருக்கும் பரிசுத்தாவியானவர் உங்களுக்குத் தருகிறார். ".....எகிப்தியர் உங்களைப் பின் தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி, பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன் (யாத்திராகமம் 14:17). பார்வோனாகிய சாத்தானின் சகல சக்திக்கும் நீங்கலாக்கி, அவனது இரதங்கள், குதிரைவீரர் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தையும் அழித்து உங்களையும் உங்களது குடும்பத்தையும் மீட்டுக்கொண்டாரே! சாத்தான் மூலம் வரும் நோயின் கொடுமையை உங்களிடமிருந்து அகற்றிப்போடுகிறாரே!
"....இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே...." (ரோமர் 8:37).