"ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்" (நீதிமொழிகள் 16:7). இது ஒரு பெரிய வாக்குறுதி. உலகில் எப்போதும் பிரச்சனைகளும் உறவுகளோடு சச்சரவுகளும் இருக்கும். இது குடும்பங்களிடையே, சமூகங்களுக்குள்ளே இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், தேவனின் வாக்குறுதி சத்தியமானது. தேவனைப் பிரியப்படுத்துவதே சவால். விசுவாசிகள் தேவனுடைய சித்தத்தைச் செய்யும்போது, அவர்கள் கர்த்தரைப் பிரியப்படுத்துகிறார்கள் (ரோமர் 12:2). பவுல் இன்னுமே நடைமுறையான அறிவுரைகளை அளிக்கிறார்; "கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்" (ரோமர் 12:18).
1) சாத்தியமற்ற சூழ்நிலையா?:
பவுல் 'கூடுமானால்' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தும்போது, அதைச் சமாளிக்க முடியாத சூழ்நிலைகள் இருக்கும் என்று தானே அர்த்தம். அதில் ஜனங்களும் அடங்குவர்; சூழ்நிலைகளும் காரணமாக இருக்கலாம். சிலர் மிகவும் பிடிவாதமுள்ளவர்களாகவும், தாங்கள் தான் எல்லாமே என சுயத்தை மையம் கொண்டவர்களாகவும், எதற்கும் இசையாதவர்களாகவும் இருப்பார்கள். ஒரு விசுவாசி தேவனுக்கு மகிமையைக் கொண்டுவர எந்த சூழ்நிலையையும் மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும். அப்போது தான், அவர்களின் உழைப்புக்கு ஏற்ப வெகுமதி கிடைக்குமா என்பதை அவர்களால் பகுத்தறிய முடியும்.
2) என்ன வரம்பு?:
பவுல் 'கூடுமானால்' என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்; அப்படியென்றால் வரம்புகள் உள்ளன என்று தானே அர்த்தம். சிலருக்கு அதிக திறன் மற்றும் சகிப்புத்தன்மை இருக்கலாம், மற்றவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். அந்த உறுதிப்பாடு என்பது நபர்களின் திறன் மற்றும் முதிர்ச்சிக்கு ஏற்ப மாறுபடும். கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் சமாதானத்தைக் கொண்டுவர அனைத்து வளங்களையும், செல்வாக்கையும் பயன்படுத்துவது நல்லது. தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட அனைவரின் அணுகுமுறையிலும் மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய ஒருவரை அழைப்பது நல்லது.
3) எதை பொறுத்தது?:
ஒரு விசுவாசியின் நல்ல எண்ணமும் செயலும் வெற்றியடையும்; அது எப்போது என்றால் அவர்களின் செயல் நேர்மறையாக காணப்படும் போது மாத்திரமே. எல்லாருக்கும் அதே நம்பிக்கையோ பக்குவமோ இருக்காது. ஆயினும்கூட, ஒரு விசுவாசி சிறந்ததைக் கொடுக்கவே முடிந்தளவு முயற்சி செய்ய வேண்டும், ஆம் பணிவு காட்ட வேண்டும், நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும், ஒருபோதும் நம்பிக்கையை விட்டுவிடக்கூடாது.
4) நிம்மதியாக வாழ:
சமாதானமான வாழ்க்கை வாழ்வதே குறிக்கோள். தேவன் நம்மை சமாதானமாக இருக்கவே அழைத்துள்ளார் (I கொரிந்தியர் 7:15). எனவே, சமாதானத்தைப் பின்தொடர்வது நல்லது, ஆனால் கிறிஸ்துவில் உள்ள சுயாதீனத்தை இழப்பது அல்லது தேவ சித்தத்தை கைவிடுவது அல்ல.
"சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்" (மத்தேயு 5:9).
எனக்குள்ளும் பிறருக்குள்ளும் சமாதானம் காணப்பட நான் முயற்சி செய்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்