அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு சுவிசேஷகராகவும், கற்பிப்பவராகவும், போதகராகவும் சிறந்து விளங்கினார். அவருடைய மேய்ப்பன் உள்ளம் அவருடைய வார்த்தைகளிலும், செயல்களிலும், மனப்பான்மையிலும் வெளிப்படுகிறது. பவுல் எபேசுக்குச் செல்ல நேரமில்லாததால், எபேசுவின் தலைவர்களை மிலேத்துவுக்கு (36 மைல்கள் அல்லது 56 கிமீ தூரம்) அழைத்தார். அவரது வார்த்தைகளே அவரின் சுய மதிப்பீடு மற்றும் அறிக்கையாக வழங்கப்படலாம். “ஆனபடியால், நான் மூன்றுவருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள். இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாகப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்" (அப்போஸ்தலர் 20:31-32).
1) நீண்ட கால பராமரிப்பு:
கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷர்களுடன் இருந்ததைப் போல பவுல் சுமார் மூன்று வருடங்கள் மூப்பர்களுடன் இருந்தார். திறம்பட்ட மூப்பர்களாக ஆவதற்கு சீஷர்களை ஆயத்தப்படுத்துவதற்கும் அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் இது ஒரு நிலையான காலகட்டமாக எடுத்துக்கொள்ளப்படலாம்.
2) சிரத்தையுடன் கூடிய பராமரிப்பு:
அவர்களுக்குக் கற்பித்தல், அறிவுரை வழங்குதல், ஆலோசனை அளித்தல், அக்கறை காட்டுதல், எச்சரித்தல், கண்டித்து நினைப்பூட்டுதல் போன்றவற்றிலிருந்து அவர் இரவும் பகலும் நிறுத்தவில்லை என்பதை அவரது அறிக்கை காட்டுகிறது.
3) ஆலோசனையளித்து பராமரிப்பு:
பவுல் அவர்களுக்கு முறைப்படியான வேத கல்வியைக் கற்பித்தார். ஒருவேளை, மோசேயின் நியாயப்பிரமாணத்திலிருந்து விளக்கமான பிரசங்கமாக இருக்கலாம். நடைமுறை உதவிக்குறிப்புகளை வழங்குவதன் மூலம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையானதையும் கல்விக்கு அப்பாற்பட்டு கற்பித்தார். மேலும் பிரச்சினைகளையும் கையாண்டு அதற்கான தீர்வுகளையும் பவுல் வழங்கினார்.
4) உணர்திறன் பராமரிப்பு:
பவுல் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் ஊழியத்தில் ஈடுபட்டார். அவர் ஜனங்களை மிக நேசித்தார், உணர்வோடும் மிகுந்த சந்தோஷத்துடனும் கண்ணீரோடும் ஊழியங்களைச் செய்தார். ஆம், அவர்களின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் கண்டு வரும் ஆனந்தக் கண்ணீர்.
5) தகுதிப்படுத்த பராமரிப்பு:
மூப்பர்கள் கர்த்தருடைய அறிவிலும் ஞானத்திலும் கட்டியெழுப்பப்படுவார்கள் என்பதில் பவுல் உறுதியாக இருந்தார்.
6) அதிகாரமளிக்கும் பராமரிப்பு:
பவுல் மூப்பர்களை தேவனுக்கும், அவருடைய வார்த்தைக்கும், அவருடைய கிருபைக்கும் ஒப்புக் கொடுத்தார். பரிசுத்த ஆவியானவர் இந்த மூப்பர்களை பயனுள்ள மற்றும் விசுவாச சேவைக்கு அதிகாரம் அளிப்பார்.
7) பரிசுத்தத்திற்கான பராமரிப்பு:
பரிசுத்தமாக்கப்பட்டவர்களுடன், பரலோக பரிசுத்த சபையில் மூப்பர்கள் பங்கடைவார்கள் என்பதில் பவுல் உறுதியாக இருந்தார்.
வாழ்க்கைத் துணைவர்கள் அல்லது பெற்றோர்கள் அல்லது குழந்தைகள் மற்றும் சீஷர்களைப் பராமரிக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நான் பவுலைப் போல ஒரு மேய்ப்பனா?
Author: Rev. Dr. J. N. Manokaran