ஒரு புதிய ஸ்மார்ட்போன் விற்பனைச் சந்தைக்கு வருகிறது, அது பற்றிய விளம்பரங்களும் மற்றும் சமூக ஊடகங்கள் அதை குறித்தான குருட்டுத்தனமான சான்றளிப்புகளும் அதிகமாக இருந்தது. அந்த புது ஸ்மார்ட்போனின் விலையோ ஆறு இலக்க எண்ணிக்கையாகும். அது ஒரு ஏழை நபரின் குடும்பத்தின் ஒரு வருட வருமானமாகும். அதைப் பற்றிய முக்கிய அம்சங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன. ஈர்க்கும் வகையிலான விளம்பர வாசகமாக; 'உரிமையாளரின் பெருமை அயலானுக்கு பொறாமை' என்பதாக காணப்பட்டது. வேதாகமம் "உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக" என்பதாக போதிக்கின்றது. ஆனால் சந்தை மற்றும் சமூக ஊடகங்கள் உங்கள் அண்டை வீட்டாரை உங்களிடம் இருக்கும் உடைமைகளைக் கண்டு பொறாமை கொள்ளச் செய்யுங்கள் என கற்பிக்கிறது. ஒரு சீஷன் உலகின் போக்குகளோடு உடன்படாமல் வேத ஒழுங்கிற்கு கட்டுபடுவான். நுகர்வோர் என்பது நமக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்குவதை குறிப்பிடலாம்; அதிலும் பணம் கொடுத்து அல்ல, கடன் அட்டையை உபயோகப்படுத்தி பொருட்கள் வாங்கப்படுகிறது. ஆனால் "போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்" (1 தீமோத்தேயு 6:6).
1) பேராசையிலிருந்து தப்பிக்க:
போதும் என்கிற மனது பத்தாவது கட்டளையை மீறுவதிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது. நமக்குச் சொந்தமில்லாததை விரும்புவது ஆபத்தான படுகுழி. ஆசைப்படும் மக்கள் திருடவும், கொள்ளையடிக்கவும், ஏமாற்றவும், உடைக்கவும், கொல்லவும் கூட தங்களை தரம் தாழ்த்திக் கொள்கின்றனர். அது திருப்தி அடையாத ஜீவன்.
2) எலும்புருக்கி நோயிலிருந்து தப்பிக்க:
போதும் என்கின்ற மனம் நம்மை பொறாமையிலிருந்து பாதுகாக்கிறது, இது நமது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது, "சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி" (நீதிமொழிகள் 14:30). மற்றவர்களின் உடைமைகளை கண்டு பொறாமைப்படுவது, நமக்கு நாமே சிறிது சிறிதாக விஷத்தை எடுத்துக்கொள்வது போலாகும், பின்னர் அது நம்முடையதல்லாத பொருட்களை நெறிமுறையற்ற வழிமுறைகள் மற்றும் தப்பான வழிகளில் கைப்பற்ற வழிவகுக்கிறது.
3) கவலையிலிருந்து தப்பிக்க:
போதும் என்கின்ற மனம் இருக்கும் போது அது நம் தேவைகளை சந்திக்கும் தேவன் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது, மனநிறைவு கவலை மற்றும் பதட்டத்திலிருந்தும் நம்மை விடுவிக்கிறது (மத்தேயு 6:33). தேவையற்ற கவலைகள் நம் விசுவாசத்தை சிதைத்து விடுகிறது. பூமிக்கு தேவனான அவரை விசுவாசிக்கும் போது நமது தேவைகள் அவரால் பூர்த்தியடைகிறது, அது இந்த உலகில் நமக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகவும் உண்மையான ஆசீர்வாதமாகவும் அமைகின்றது.
4) நன்றியற்ற தன்மையிலிருந்து தப்பிக்க:
மனநிறைவு நம்முடைய தேவனுக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்பதற்கான ஒரு நன்றியுள்ள இருதயத்தை அளிக்கிறது (1 தெசலோனிக்கேயர் 5:18). சந்தை விற்பனை நுகர்வோரை ஊக்குவிக்கிறது, அதே நேரத்தில் வேதாகமம் மனநிறைவை அளிக்கிறது. மனித இயல்பு நன்றிக்கெட்டத்தனமும் மற்றும் மேலும் மேலும் இச்சிப்பதாகும், அது ஒரு திருப்தியற்ற நிலை. நன்றியுள்ளவர்களாக இருக்க கற்றுக்கொள்வது வாழ்நாள் முழுமைக்கான ஒழுக்கம் அதற்கு அன்றாட பயிற்சி நிச்சயம் தேவை.
கண்மூடித்தனமான நுகர்விற்கும், போட்டி மனப்பான்மையுள்ள கல்லான இதயத்திற்கும் மற்றும் அமைதியற்ற ஆத்துமாவிற்கும் தேவையானது ஆவிக்குரிய போதும் என்கின்ற மனம், அதுவே சரியான மருந்தாகும். மனநிறைவை வெளிப்படுத்துவதன் மூலம், நாம் நம் அண்டை வீட்டாரை நேசிக்கிறோம், அவர்களை பொறாமை கொள்ளத் தூண்டுவதில்லை.
எனக்கு போதுமென்கின்ற மனதுடன் கூடிய தேவபக்தி இருக்கிறதா?
Author : Rev. Dr. J. N. Manokaran