மனந்திருந்திய (ஊதாரி) மைந்தன் உவமையில், இளைய மகன் வருங்கால வாரிசு மற்றும் தற்போதைய உக்கிராணக்காரன் என்ற அந்தஸ்தில் திருப்தி அடையவில்லை (லூக்கா 15:11-32). அவன் தனது செல்வத்தின் உரிமையாளராக அல்லது முதலாளியாக மாற விரும்பினான். எனவே, அவன் தனது பரம்பரைப் பகுதியைக் கோரினான். தந்தையின் கட்டுப்பாடு அல்லது வழிகாட்டுதலிருந்து விடுதலை, முழுமையான அதிகாரம் ஆகியவை அவனது தேடலாக இருந்தன. ஒரு உக்கிராணக்காரனாக, சில குறைபாடுகள் இருப்பதாக அவன் நினைத்தான்.
கண்காணித்தல்:
ஒரு உக்கிராணக்காரனாக, இரண்டு மகன்களும் தந்தையின் மேற்பார்வையில் இருந்தனர். இளைய மகன் ஒருவேளை இதை வெறுத்திருக்கலாம். அவனைப் பொறுத்தவரை, கண்காணிப்பு அவனது வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிறதாகவும் மற்றும் எல்லாவற்றிலும் தலையிடுகிறதாகவும் தோன்றியிருக்கும்.
மீறப்படல்:
முடிவுகள் நல்லவையாகவோ அல்லது புத்திசாலித்தனமாகவோ இல்லாதபோது அவற்றைத் தடுக்கும் அதிகாரம் தந்தைக்கு இருந்தது. இப்படி தனது முடிவுகள் மாற்றத்திற்குள்ளாவதால் இளைய மகன் கோபமடைந்தான். ஒரு முழுமையான அதிகாரத்துடன் தான் மாத்திரமே தனக்கு அதிகாரியாக இருக்க விரும்பினான்.
தடுக்கப்படல்:
உக்கிராணக்கார்கள் உரிமையாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட சில குறிப்பிட்ட எல்லை மற்றும் அளவுருக்களுக்குள் வேலை செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட தரத்தை மீறும் போது கண்டிக்கப்படுவார்கள். இளைய மகன் கண்டிப்பை விரும்பவில்லை. அவன் அறிவுரை அல்லது ஆலோசனையை எதிர்த்தான். அனைத்து செலவுகளும் அனுமதிக்கப்பட்ட பட்ஜெட்டுக்குள் இருக்க வேண்டும். அதிகப்படியான செலவுகளை உரிமையாளர், அவனது தந்தை ஆய்வு செய்ய வேண்டும்.
பொறுப்புகூறல்:
ஒரு உக்கிராணக்காரனாக இருப்பது என்பது கணக்குகள், அறிக்கைகள் மற்றும் முடிவுகளை வழங்குவதாகும். பொறுப்புக் கூறுவதில் பலருக்கு வெறுப்பு இருக்கிறது. அதாவது, ஒரு பெருமை, தங்களை விட யாரும் மேலானோர் இல்லை என்பதும், தவறுகள் இருப்பின் அதை ஏற்கும் மற்றும் சரிசெய்யும் பணிவு இல்லை, . பலர் ஊழியத்தில் உள்ளனர்; வளங்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும், ஆனால் அறிக்கைகள் கோரக்கூடாது.
இரண்டாம் நிலை இல்லை:
இளைய மகன் தனது நிலையைக் குறித்து சோர்வடைந்தான். அவன் முக்கியமான பொறுப்பில் இருக்க முடியாது, அடிமட்ட வேலைகளை மட்டுமே செய்கிறான்.
பொது நிலையியல்:
அவனது தந்தை மட்டுமே குடும்பத்தின் மதிப்பிற்குரியவராக அங்கீகரிக்கப்பட்டார். எல்லா பொது இடங்களிலும், அவருக்கு மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. இளைய மகன் பொது இடங்களில் ஒரு நிலைப்பாட்டையும் மற்றும் சமூக வட்டங்களில் ஒரு முக்கிய பதவியையும் விரும்பினான்.
வெளியேறுதல்:
தந்தை உயிருடன் இருக்கும் வரை, அவர் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டியிருக்கும் என்ற உண்மை அறிந்தவுடன் தன் வீட்டை விட்டும், தந்தையின் செல்வாக்கிலிருந்தும், பெரிய சகோதரனின் ஆதிக்கத்திலிருந்தும் வெளியேறுவதே ஒரே வழி என்று தீர்மானித்தான்.
இறையாண்மையுள்ள தேவன் எல்லாவற்றின் அறுதிஇறுதி உரிமையாளராக இருக்கிறார், நாம் உக்கிராணக்காரர்கள். உரிமையாளர்களாக இருக்க ஆசைப்படுவது ஆபத்தானது மற்றும் பேரழிவு தரும்.
நான் நல்ல உக்கிராணக்காரனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்