தற்கொலை செய்துகொண்ட இந்தி திரையுலக கதாநாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புட் தான் "மாரே மஷ்கோவியன்ஸ் (Mare Muscoviense) என்று அழைக்கப்படும் நிலவில் (Moon) உள்ள இடத்தை வாங்கி உள்ள ஒரே இந்தியர் என்று உலகளாவிய லூனார் ரெஜிஸ்ட்ரி(ILLR) கூறுகிறது. அது மட்டுமல்ல சனிக்கோளின் வாயுவலையங்களைப் பார்த்து ரசிக்க மிக சக்திவாய்ந்த தொலைநோக்கி (Meade 14 LX600) ஒன்றையும் வாங்கியிருக்கிறார். அதன் மதிப்பு 59 கோடி (590 மில்லியன்கள்), 20 கோடி (200மில்லியன்) மதிப்புள்ள பென்ட்ஹவுஸ் (மேல் வீடு) சொந்தமாக வைத்திருந்தார். ஒரு 34 வயது உள்ள வாலிபருக்கு இது மிகப்பெரிய சாதனை. ஆனால், இவை அனைத்தும் அவருக்கு வாழ்க்கையின் நோக்கத்தையும், அர்த்தத்தையும் அவருக்குக் கொடுக்கவில்லை.
“அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத்தேயு 16:24 -26).
இந்த உலகில் அந்த கதாநாயகன் செய்த அத்தகைய சாதனை பொருள்சார்ந்த ஆதாயம், இதில் துக்கம் என்னவெனில் தன் ஆத்மாவை இழந்தாரே.
அனாதைக்கு உணவளித்தல், ஏழைகளுக்கான பள்ளி போன்ற கல்வி நிறுவனத்தை உருவாக்குதல், ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை நிதியை உருவாக்குதல், ஆதரவற்றோருக்கான வீடு… போன்றவை சுஷாந்த்க்கு வாழ்க்கையில் அர்த்தம் தரக்கூடிய சில நல்ல செயல்பாடுகள். அதற்குப் பதிலாக அவர் சுய திருப்தியின் மனநிறைவைத் தொடரத் தேர்ந்தெடுத்த வாழ்க்கை மாயையாகவும், கானல் நீராகவும் மாறியது, ஏமாற்றமடைந்தது என்னவெனில் பொருள்சார் கேஜெட்களின் குவியல்களில் உட்கார்ந்து, அவர் பூமியில் இருப்பதற்கான அர்த்தத்தை புரிந்து கொள்ளத் தவறியது தான் அவரை விரக்திக்கும் இறுதியாக தற்கொலைக்கும் தூண்டியது.
கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷர்களுக்கு பரலோகத்தில் (சந்திரனில் அல்ல) புதையலைச் சேமிக்கக் கற்றுக் கொடுத்தார், அது நித்தியமானது. மேலும் நம்முடைய கவனத்தை சரியாக வைத்திருக்க உதவுகிறது. ஆம், உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும் (மத்தேயு 6: 19-21).
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இல்லாமலும் சுவிசேஷத்தை பயன்படுத்தாமல் வாழும் வாழ்க்கை அர்த்தமற்றது, பயனற்றது, நோக்கமற்றது மற்றும் வாழ்வும் பிரயோஜனமற்றது . தற்கொலை என்பது நம்பிக்கையற்ற ஒரு முடிவு.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னோடு இருப்பதன் காரணமாக என் வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளதா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்