"என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்குப்புறம்பே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்", என்று மணவாட்டி தன்னைவிட்டுப் பிரிந்துபோன மணவாளனைப் பற்றி பாடுகிறாள் (உன்னதப்பாட்டு 2:9). வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிர இயேசு கிறிஸ்து, உனது மேய்ப்பன் மிகவும் எளிமை தோற்றமுடையவராகவும் சாந்தகுணமுள்ளவராகவும், உன்மேல் பழிவாங்கவேண்டுமென்று வைராக்கிய கோபத்தில் இல்லாமல், உன்னுடைய பாவங்களையும் பின்வாங்கிப்போன நிலையையும் மன்னித்து உன்னை அரவணிக்கும்படியாக ஒரு அப்பாவி மான் குட்டியைப்போல மதிலுக்குப்புறம்பே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார். ஒரு தடுப்புச் சுவரின் பின்பு, இப்போது நின்று கொண்டிருக்கிறார். உனது பின்மாற்றம், பாவங்கள் தான் இந்த சுவரை உண்டாக்கியது. ஆனால் இந்த மதிலுக்குப்புறம்பே கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார். உங்களது இருளான வாழ்க்கையில் ஒரு தடுப்புச் சுவர் இருந்தாலும், ஒரு கிராதி இருக்கிறது. இதுதான் அவர் உன்மேல் வைத்திருக்கும் தொடர்பு. இந்த தொடர்பை சாத்தானால் துண்டிக்க முடியவே முடியாது.
Author: Dr. Job Anbalaga