“நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுருமரம், நம்முடைய மச்சு தேவதாருமரம்” என்று தனக்கும் தன்னுடைய மணவாளனுக்கும் சொந்தமான வீட்டைப்பற்றி மணவாளன் பாடுகிறாள்" ( உன்னதப்பாட்டு 1:17).
இந்த வீட்டின் உத்திரங்கள் கேதுருமரத்தால் உண்டானது; மச்சு தேவதாருமரத்தால் உண்டானது. நாம் குடியிருக்கும் ஆவிக்குரிய கூடாரமானது பரிசுத்தவான்களுடைய விண்ணப்ப ஜெபங்களால் வலிமை பெற்றதாயிருக்கிறது. இது மாத்திரம் அல்ல. நமக்காக தேவனாகிய பிதாவின் முன்னால் தேவக்குமாரன் கிறிஸ்துவின் பரிந்து பேசும் ஜெபத்தாலும், நமது வீட்டின் உத்திரங்களும், மச்சும் பெலனடைந்து, சாத்தனாலும், அந்தி கிறிஸ்துவாலும் உள்ளே நுழைய முடியாமல் இருக்கிறார்கள். கள்ள போதகர்களின் உபதேசங்களிலிருந்து நமது ஆவிக்குரிய கூடாரத்தை அந்தி கிறிஸ்து தாக்குதல் செய்யாமல் காக்க, அநேக தேவ ஊழியர்கள் இருபுறம் கருக்குள்ள பட்டயமான தேவ வசனத்தை வைத்து நமக்காக யுத்தம் பண்ணி நமது வீட்டை காத்து வருகிறார்கள்.