ரயில்வே பிளாட்பாரத்தில் வைத்து பிரசங்கம் செய்ததற்காக ஒருவர் அடிக்கப்பட்டார், மற்றொரு பெண் கிறிஸ்தவ இலக்கியங்களை விநியோகித்ததற்காக காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார் மற்றும் வேனில் பயணித்த ஒரு குழுவை நிறுத்தி தாக்கினர். இந்தியாவில் பல இடங்களில் நற்செய்தி அறிவிப்பதற்குச் சாதகமாக இல்லை. ஒரு கிறிஸ்தவத் தலைவர், திருச்சபை தானாக முன்வந்து நற்செய்தியைப் பிரசங்கிக்க தற்காலிக தடை விதிக்க வேண்டும் என்று கூறினார். ஆணை ஒன்றுதான், செய்தி ஒன்றுதான் ஆனால் சூழலுக்கு ஏற்ப முறைகள் மாறுகின்றன.
பிரசங்கம்:
இந்த வார்த்தையின் அர்த்தம் உறுதியுடனும், நம்பிக்கையுடனும் மற்றும் தைரியத்துடனும் சத்தியத்தை அறிவிப்பதாகும். "சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்லு" (2 தீமோத்தேயு 4:2) என்பதாக தீமோத்தேயுவை பவுல் அறிவுறுத்துகிறார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரசங்கிப்பது வாய்மொழியாகவோ அல்லது எழுத்தாகவோ அல்லது ஒலி ஒளி வடிவில் இருக்கலாம். திருச்சபைகளில், மேடைகளில், கூடாரங்களில், வீடுகளில் அல்லது தெருக்களில் இருந்து பிரசங்கம் செய்யலாம். ஜான் வெஸ்லி தேவாலயங்களில் பிரசங்க மேடைகளை மறுத்தபோது, மக்கள் கேட்க வந்தபடி இருந்ததால் கல்லறைகளில் இருந்து பிரசங்கித்தார். யோவான் ஸ்நானகனோ வனாந்தரத்தில் பிரசங்கித்தார், அங்கும் அவர் சொல்வதைத் கேட்க மக்கள் திரண்டனர் (மத்தேயு 3:1).
பிரசன்னம்:
அசிசியின் புனித பிரான்சிஸ்ன் தவறான மேற்கோள் உள்ளது; அதாவது எப்போதும் பிரசங்கியுங்கள், தேவைப்பட்டால் வார்த்தைகளை பயன்படுத்துங்கள் என்பதாக; ஆனால் அவர் தான் இந்தக் கருத்தை கூறியதற்கான ஆதாரம் இதுவரை இல்லை. தேவனின் அன்பு செயல் வடிவிலும், கிரியைகளிலும், சேவையிலும் உலகுக்குக் காட்டப்பட வேண்டும் என்று பலர் கூறுகின்றனர். பிரகடனம் இல்லாமல், சமூக சேவை மட்டுமே செய்ய வேண்டும் என்று சிலர் நம்புகிறார்கள். பூமிக்கு உப்பாகவும், உலகத்திற்கு வெளிச்சத்தைக் கொடுக்கும் செயல்களைப் பார்க்கும் ஜனங்கள் பரலோகத் தந்தையை மகிமைப்படுத்துவார்கள் (மத்தேயு 5:13-16) என்பது உண்மை தான்.
வல்லமை:
மற்றவர்கள் தேவனுடைய வார்த்தை அடையாளங்கள், குணப்படுத்துதல், அதிசயங்கள் மற்றும் விடுதலை மூலம் நிரூபிக்கப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகிறார்கள். பிரசங்கம் எப்போதும் அற்புதங்களுடன் இருக்க வேண்டும் என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது.
பிரகடனம்/அறிக்கை:
இந்த வார்த்தையின் அர்த்தம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது, முறையாக உச்சரிப்பது, வெளிப்படையாக அறிவிப்பது, பகிரங்கமாக வெளிப்படுத்துவது மற்றும் எதிர்ப்புடனும் அறிவிப்பது அல்லது பிடிவாதமாக வலியுறுத்துவதைக் குறிக்கும். பிரகடனம் என்பது வார்த்தைகள், செயல்கள், அதிகார சந்திப்புகள், இலக்கியம், ஆடியோ மற்றும் வீடியோ தளங்கள் மூலமாகவும் இருக்கலாம்.
உபத்திரவம்:
"ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்" (2 கொரிந்தியர் 5:20). ஆம், தேவனுடன் ஒப்புரவாக அனைவரையும் அழைப்பதன் மூலமும் வேண்டுகோள் விடுப்பதன் மூலமும் அனைத்து நாடுகளையும் சீஷர்களாக ஆக்குவது மாபெரும் ஆணை. எல்லா வழிகள் மற்றும் முறைகளின் விளைவு சீஷர்களை உருவாக்குவதில் தான் முடிவடைகிறது.
சீஷர்களை உருவாக்க நான் முயற்சி செய்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்