திறந்த கதவுகள்!

பெரிய பெரிய பிரபலமான உணவகத்தின் வாயிலில் ஒருவர் மகாராஜா போல் உடையணிந்து நின்று, ஹோட்டலுக்கு வருகின்ற வாடிக்கையாளர்களை கதவைத் திறந்து வரவேற்பதை நாம் கண்டிருப்போம். ஆம், உலகத்தில் பல வகையான கதவுகள் உள்ளன; சில நாமாகவே உள் நுழைவது மற்றும் சில நம்மை கதவை திறந்து வரவேற்பதாக காணப்படும். ஆனால் தேவனின்  வாக்குத்தத்தம் இப்படியாக இருக்கிறது; "உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்" (வெளிப்படுத்தின விசேஷம் 3:8).  

வாய்ப்புகள்:
திறந்த கதவுகள் நாம் சாட்சியாக இருப்பதற்கும் அவருடைய சித்தத்தைச் செய்வதற்கும் கர்த்தர் நமக்குக் கொடுக்கும் வாய்ப்புகள்.  சுறுசுறுப்பாகவும், அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தயாராகவும் இருப்பவர்களே வெற்றி பெறுவார்கள்.  வாய்ப்புகள் சில நேரங்களில் தற்காலிகமாக அல்லது பருவகாலமாக இருக்கும்.

கதவைத் திறத்தல்:
மக்கள் திறந்து வரவேற்கும் கதவுகள் உள்ளன.  பண்டைய காலங்களில், நகர வாயில்களில் காவல் காக்கும் நல்ல வலுமிக்க வீரர்களால் பெரிய உலோக கதவுகள் திறக்கப்பட்டன. தேவ பக்தியுள்ள பரிசுத்தவான்கள் அடுத்து வளர்ந்து வரும் தலைவர்களுக்கு கதவுகளைத் திறக்கிறார்கள்.

கதவை இழுத்தல் அல்லது தள்ளுதல்:
சில கதவுகள் இழுக்கப்படும் போது திறக்கும்.  கதவுகள் அவசரமாக இழுக்கப்பட்டால், அதிகாரத்தைப் பயன்படுத்துபவரை கதவு தட்டலாம்.  சில கதவுகள் தள்ளப்பட வேண்டும்.  கதவை இழுப்பது பயனற்றதாக இருக்கும், மேலும் சேதம் ஏற்படலாம்.  தேவன் தனது பிள்ளைகள் ஞானத்துடனும் வழிகாட்டுதலுடனும் செயல்பட வேண்டும், சில சமயங்களில் சோம்பேறியாக இருக்கக்கூடாது என்று விரும்புகிறார்.  சில நேரங்களில், ஒரு கதவு இருப்பதாக எந்த அறிகுறியும் இருக்காது, ஆனால் அது தள்ளப்பட வேண்டும். ஆக, அனைத்தும் பரிசுத்த ஆவியின் உதவியுடன் பகுத்தறிவோடு  நடந்து கொள்ள வேண்டும்.

சுழலும் கதவு:
சில கதவுகள் பார்ப்போமேயென்றால் சுற்றிக் கொண்டேயிருக்கும். அதை சரியாக கவனித்து உள்ளே செல்ல வேண்டும்.  நேரம் தாழ்த்தினால் மாட்டிக் கொள்ள நேரிடும்; விபத்து ஏற்படலாம்.  தாமதம் பேரழிவிற்கு வழிவகுக்கும்.  விசுவாசிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய வாய்ப்பாக ஒரு சாளரம் மட்டுமே உள்ளது.

 தானியங்கி உணர்கருவி (சென்சார்) கதவுகள்:
 ஒரு நபர் கதவுக்கு அருகில் வந்ததும், அது தானாகவே திறக்கும்.  யோசுவாவின் கீழ் இருந்த இஸ்ரவேலர்கள் நம்பிக்கையுடன் யோர்தானுக்குள் நுழைய வேண்டியிருந்தது, ஆம், கால் வைத்தவுடன் வழி திறந்ததே.

பாதுகாப்பான கதவுகள்:
நவீன பாதுகாப்பான கதவுகள் உள்ளன, எலக்ட்ரானிக் சாவி அல்லது குறியீடுகள் பயன்படுத்தும் போது மட்டுமே அவை திறக்கப்படும்.  கர்த்தரால் அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே கீழ்ப்படிதலின் திறவுகோல்களால் அதைச் செய்ய முடியும்.

 நான் பகுத்தறிந்த நபராக, சரியாய் தேர்ந்தெடுத்து திறந்த கதவுகளுக்குள் நுழைகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download