"தெரியாத மூலங்களிலிருந்து வரும் எந்த இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள், உங்கள் பணம் திருடப்படும்" என்பது போன்ற விழிப்புணர்வு செய்திகளை காவல்துறை, வங்கி மற்றும் அரசு அதிகாரிகள் அனுப்புகிறார்கள். ஆனாலும், இதுபோன்ற மோசடிகளால் பலர் பணத்தை இழந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பணத்திற்கு மேல் பணம் என ஐசுவரியத்தைப் பெருக்கப் பேராசை கொண்டவர்களும் உண்டு. தந்திரமான வணிகர்கள் பெரும் வைப்பு நிதிக்கு அதிகமான வட்டியும் முதலுமாக திரும்ப கிடைக்கும் என உறுதியளிக்கிறார்கள், மக்களும் ஏமாறுகிறார்கள். இத்தகைய நிதி மோசடிக்கு எதிராக மோசே எச்சரித்தார் (லேவியராகமம் 6:1-7).
விசுவாச மீறல்:
மற்றவர்களுக்கு செய்யப்படும் அனைத்து நிதி மோசடிகளும் தேவனுக்கு எதிரான விசுவாசத்தை மீறுவதாகும். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, தேவனுக்கும் அவருடைய இறையாண்மைக்கும் எதிரானது.
வஞ்சகம்:
ஒரு நபர் நிதி நிறுவனங்கள் மூலம் (வங்கிகள் உட்பட) பெரும் வருமானத்தை பெற முடியும் என்ற வாக்குறுதியை நம்புகிறார். 'நிபந்தனைகளுக்கு உட்பட்டது' (conditions apply) என்பதாக சிறிய எழுத்துகளில் அச்சடிக்கப்பட்டிருக்கும், அப்படியென்றால் அது ஆபத்தை விளைவிக்கும் என்பதான எச்சரிப்பு. ஆனால் விற்பனை பிரதிநிதி அதைக் கூட குறிப்பிடவில்லை. முதலீடு வாக்குறுதியளிக்கப்பட்ட வருவாயைத் தருவதில்லை, அது ஏமாற்றுதல். வீடு, நில உடைமைகளின் தரகர்கள் பல விஷயங்களை உறுதியளிக்கிறார்கள், ஆனால் அவர்களின் விநியோகம் மோசமாக உள்ளது, இது மீண்டும் ஒரு ஏமாற்று வேலையாகும். கிறிஸ்தவ போதகர்கள் கூட தங்கள் ஊழியத்திற்கு நன்கொடை அளிக்கும் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் ஒரு கோடி ரூபாயாக திரும்ப கிடைப்பகும் என கூறி வஞ்சிக்கிறார்கள்.
வஞ்சக வலைகள்:
சில தொலைபேசி அழைப்புகள் இது போன்ற வஞ்சக வேலையை செய்கின்றன. மின்னணு பணமான கிரிப்டோகரன்சி என்பது வங்கிகளைக் கூட சிதைத்த ஒரு வஞ்சக வலையாகும்.
கொள்ளை:
உங்கள் தலையை நோக்கி துப்பாக்கியை வைத்துக்கொண்டு பாக்கெட்டில் இருப்பதைக் கேட்பது அல்லது ஏடிஎம்மில் பணம் எடுப்பது என எல்லாமே கொள்ளை தான். சில நாடுகளில், வசூலிக்கப்பட்ட வரியிலிருந்து குடிமக்களுக்கு எந்த தகுதியான சேவைகளும் வழங்கப்படுவதில்லை, அதுவும் கொள்ளைக்குச் சமம். வரிப்பணம் ஊழல் தலைவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
அடக்குமுறை:
சுரண்டலும் அடக்குமுறையும் ஒன்றாகவே செல்கிறது. மக்களின் அறியாமை பயன்படுத்தப்படுகிறது. படிப்பறிவில்லாத கிராம மக்களிடம் சிறுகடன் கொடுத்து வாழ்நாள் முழுவதும் வட்டி வசூலிப்பது ஈவிரக்கமற்ற சுரண்டல். செய்த வேலைக்கு ஏற்ப கூலி இல்லாத நிலை காணப்படுகிறது.
பொய் சத்தியம்:
பாதுகாப்பான வைப்புத்தொகை என்ற வார்த்தையை நம்பி வைக்கும் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. கொள்ளை அல்லது விபத்து அல்லது அவரது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளில் அதை இழந்ததாக நபர் பொய்யாக சத்தியம் செய்கிறார்.
மறுசீரமைப்பு:
இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் நபர் மனந்திரும்பி 20 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும். சகேயு நான்கு மடங்காக தந்து பாதிச் செல்வத்தை ஏழைகளுக்குக் கொடுத்தான். "சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்" (லூக்கா 19:8).
ஏமாறாமல் இருக்கவும், ஏமாற்றாமல் இருக்கவும் நான் பகுத்தறிவு கொண்டுள்ளேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்