விவாகரத்து குறித்து வருத்தம் இல்லையா?

இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, பரஸ்பர சம்மதத்தின் பேரில் விவாகரத்து கோரியதற்காக பெங்களூரில் பணியாற்றிய இளம் ஜோடியை;  "விவாகரத்துக்காக நீங்கள் வருத்தப்படவில்லை ஆனால் திருமணத்திற்காக வருத்தப்படுகிறீர்கள்" (என்டிடிவி ஏப்ரல் 23, 2023) எனக் கண்டித்தது. துரதிர்ஷ்டவசமாக, இந்த ஜோடி திருமணத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை, எனவே அவர்கள் திருமணத்திற்கு வருந்தினர், மேலும் விவாகரத்து குறித்து குற்ற உணர்வு அடையவில்லை.  “திருமணம் எல்லோராலும் மதிக்கப்பட வேண்டும்”  (எபிரெயர் 13:4) என வேதாகமம் சொல்கிறது. 

நம்பிக்கையின்மை ஒரு அவமதிப்பு:
மேற்கத்திய நாடுகளில் திருமணத்திற்குமுன் மண முறிவு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வழக்கம் ஒன்று உருவாகியுள்ளது.‌ இப்படிப்பட்ட ஒப்பந்தங்களில், ஒருவேளை விவாகரத்து செய்துகொண்டால் சொத்துக்களை எப்படிப் பங்கிட்டுக்கொள்ள வேண்டுமென விவரமாக எழுதிவிடுகிறார்கள். ஆக தேவன் மீதும் நம்பிக்கை இல்லை மற்றவர்கள் மீதும் நம்பிக்கை இல்லை.

துஷ்பிரயோகம் ஒரு அவமதிப்பு:
வாழ்க்கைத் துணைவர்கள் ஒருவரையொருவர் நேசிக்காமல், மாறாக துஷ்பிரயோகம் செய்யும்போது, ​​அவர்கள் தேவனையும், அவருடைய பிரமாணத்தையும், உடன்படிக்கையையும் அவமதிக்கிறார்கள்.  உடல்ரீதியான குடும்ப வன்முறை இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் பொதுவானது.  உணர்வு ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் அன்றாட தேவைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது மற்றும் பணத் தேவைகள் சந்திக்கப்படாமல் இருப்பது ஆகியவை துஷ்பிரயோகத்தின் பிற வடிவங்கள் ஆகும்.

 திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது ஒரு அவமதிப்பு:
 ஒரு ஜோடி ஒரு உடன்படிக்கையின் மூலம் ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும், ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும், ஒருவருக்காக ஒருவர் தியாகம் செய்ய வேண்டும், மேலும் ஒன்றாக இருப்பதில் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.  திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்வது, உறவு கொள்வது என்பது ஆவிக்குரிய ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தவறானது.

 விபச்சாரம் ஒரு அவமதிப்பு:
 பத்துக் கட்டளைகள் விபச்சார உறவுகளைத் தடை செய்கிறது (யாத்திராகமம் 20:14). பாலுறவு என்பது சட்டப்பூர்வமானது, ஆவிக்குரியது, ஒழுக்கமானது, திருமணமான கணவன் மனைவி இடையே மட்டுமே இருக்க வேண்டியது.  திருமணத்திற்கு அப்பாற்பட்ட எந்தவொரு உறவும் திருமண உடன்படிக்கையை மீறுவதாகும், அது தேவனுக்கு கீழ்ப்படியாமல் இருப்பதையும் மற்றும் திருமண நிறுவனத்திற்கு எதிரான கலகத்தையும் காண்பிக்கிறது.

அலட்சியம் ஒரு அவமதி‌ப்பு:
எதையும் பொருட்படுத்தாத மனைவி தன் கணவனை அலட்சியப்படுத்துகிறாள் மற்றும் மனைவியை கணவன் உதாசீனப்படுத்துவதன் மூலம் அலட்சியப்படுத்துகிறான்.  வாழ்க்கையை ஒன்றாக கொண்டாடுவதற்கும், சுமைகளை ஒன்றாக பகிர்ந்து கொள்வதற்கும் பதிலாக, ஒருவரையொருவர் அலட்சியப்படுத்துகிறார்கள்.

மறு விளக்கம் மூலம் அவமதிப்பு:
இப்போது, ​​​​திருமணத்தை இரண்டு சம்மதமுள்ள நபர்களுக்கு இடையிலான உறவு என மறு விளக்கம் செய்ய விரும்பும் பலர் உள்ளனர்.  சில தேசிய அரசாங்கங்கள் இரண்டு ஆண்கள் அல்லது இரண்டு பெண்களுக்கிடையிலான உறவுகளை திருமணமாக கூட சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன.  அவர்கள் உருவாக்காத ஒரு பந்தத்தை எப்படி வரையறுக்க முடியும்?

 விவாகரத்து ஒரு அவமதிப்பு:
 திருமணம் என்பது ஒரு உடன்படிக்கை மற்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபை இதை புனிதமானதாக பார்க்கின்றது.  விவாகரத்து ஒரு விதிவிலக்கு தானே தவிர, அது விதிமுறை அல்ல.

 தேவன் உருவாக்கிய திருமணம் என்னும் பந்தத்தை மதிக்கிறேனா, கனப்படுத்துகிறேனா, கொண்டாடுகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download