'நசரேய விரதம்' என்பது தேவனுடன் நெருங்கி வருவதற்கும், உலக இன்பங்களிலிருந்தும், இந்த உலகத்தின் சுகபோகங்களிலிருந்தும் பிரிந்து அல்லது விலகி செல்வதற்கும், ஆண்களும் பெண்களும் செய்யக்கூடிய விசேஷித்த பொருத்தனையாகும் (எண்ணாகமம் 6). வேதாகமத்திலிருந்து சொல்லப் போனால் சிம்சோனும் யோவான் ஸ்நானகனும் சிறந்த எடுத்துக்காட்டுகள் எனலாம். இதை கிறிஸ்தவர்கள் பின்பற்றலாமா? பவுலும் இந்த பொருத்தனையை செய்தார் (அப்போஸ்தலர் 18:18). கர்த்தராகிய இயேசு பரிசேயர்களிடம் "நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும் அவைகளையும் விடாதிருக்கவேண்டும்" (மத்தேயு 23:23) என்றார். சிம்சோன் மற்றும் யோவான் ஸ்நானகன் போன்ற சில முக்கிய நசரேயனியர்கள் உள்ளனர். இருப்பினும், ரேகாபியரைப் போலவே, இன்று விசுவாசிகள் நிரந்தர நசரேயனிர்களாக அழைக்கப்படுகிறார்கள் (எரேமியா 35:1-7).
1) பரிசுத்தத்திற்கான அழைப்பு:
ஆவிக்குரியத் தேடலில், தேவனோடு ஐக்கியம் கொள்ள மகா பரிசுத்தத்தை விரும்பும் தேவ ஜனங்கள் உள்ளனர். அவர்கள் நசரேனிய விரதத்திற்கு மிகச் சரியானவர்கள். தேவன் நம் அனைவரையுமே பரிசுத்தத்திற்கு அழைக்கிறார் (1 பேதுரு 1:15-16).
2) பரிசுத்தத்திற்கான அர்ப்பணிப்பு:
இன்று இப்படி ஒரு நசரேனிய பொருத்தனை செய்பவர்களுக்கு தேவையான மூன்று முக்கிய கூறுகள்; அது எல்லா கிறிஸ்தவர்களுக்கும் ஆவிக்குரிய வாழ்வில் பிரயோஜனமாக இருக்கும். முதலில், முடி வளர்க்கவேண்டும், தங்கள் தலையில் சவரக்கத்தியை (razor) அனுமதிக்கக் கூடாது. நசரேய விரதம் நிறைவடையும் போதுதான் முடி வெட்ட முடியும். இந்த நபர் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர் என்பதை சுற்றியுள்ள மக்கள் அறிந்து கொள்வதற்காக இது இருந்தது. நாம் சாட்சிகளாக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம். இரண்டாவதாக, அவர்கள் திராட்சைரசம் போன்ற எந்தப் பொருளையும் எடுக்க முடியாது. சௌகரியத்தைக் குறைத்து, பகுதி உபவாசம், எளிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் சரீரத்தை ஒடுக்கி ஒழுங்குபடுத்துவது அனைத்து சீஷர்களுக்கும் உரியது. மூன்றாவதாக, இறந்த சரீரங்களுக்கு அருகில் சென்று துக்கம் அனுசரிக்க நசரேயர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக ஜீவிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமேயன்றி செத்த கிரியைச் செய்யக்கூடாது.
3) பரிசுத்தத்திற்காக உறுதிப்படுத்தப்பட்டது:
நசரேய விரதம் முடிந்ததும், எருசலேம் ஆலயத்திற்குச் சென்று மூன்று பலிகளைச் செலுத்த வேண்டும். "சர்வாங்க தகனபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும் பாவநிவாரணபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், சமாதானபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு கூடையில் எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் கர்த்தருக்குத் தன் காணிக்கையாகச் செலுத்தக்கடவன்".
நான் கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நிரந்தர நசரேயனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்