உலகில் பல மக்கள் குழுக்கள் உள்ளன, அவை குலங்கள், சாதிகள், பழங்குடிகள்... போன்றவையாக இருக்கலாம். அவர்கள் அனைவரும், குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழைகள், தங்கள் அவமானத்தை பெருமைக்குரியதாக மாற்ற விரும்புகிறார்கள்; தங்களுக்கான கண்ணியத்தை விரும்புகிறார்கள். அதற்காக சில கலாச்சார சின்னங்களை தகவமைத்து தங்கள் மூதாதையர்கள் பற்றிய புராணக்கதைகளை உருவாக்குவார்கள். இந்தியாவில் ஒரு சாதியில், கீழ்த்தரமான பணிகள் வழங்கப்படுகின்றன, அவர்கள் வரலாற்றில் ஒரு முக்கிய மன்னரிடமிருந்து வந்த கற்பனை ஹீரோக்களைக் கொண்டுள்ளனர். பிரபலமான அல்லது புனிதமான புத்தகங்கள் அல்லது கவிதைகளை எழுதியவர் தங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்று மற்றொரு சாதி கூறுகிறது. அவர்களின் அவமானத்திலும் கூட, அவர்கள் கற்பனைகள், புராணங்கள் மற்றும் இதிகாசங்களிலிருந்து அடையாளத்தையும், கண்ணியத்தையும், பெருமையையும் தேடுகிறார்கள். எனினும், தேவன் தம்மை நம்புகிறவர்களுக்கு ஐந்து விஷயங்களை வாக்களிக்கிறார், "சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்" (ஏசாயா 61:3) என்பதாக ஏசாயா எழுதுகிறார். எகிப்தில் இருந்த அடிமைகள் பெரிய தேசமாக மாறவில்லையா என்ன?
1) கண்ணியம்:
சிங்காரம் என்பது கண்ணியத்தைக் குறிக்கிறது, அவமானப்படுத்துதல் என்பது சாம்பலை குறிப்பிடுகிறது. ஆக தேவன் சாம்பலுக்குப் பதில் சிங்காரத்தை அளிக்கிறார். ஆம், "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" (யோவான் 1:12).
2) ஆனந்தம்:
உலகத்தில் வாழ்வதற்கான உழைப்பு, நம்பிக்கையின்மை மற்றும் நோக்கமின்மை ஆகியவற்றின் காரணமாக ஏற்படும் தினசரி துக்கம் மகிழ்ச்சியாக மாற்றப்பட வேண்டும். கர்த்தருக்குள் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் இருக்கிறது. ஆம், துயரத்திற்குப் பதிலாக ஆனந்தத்தால் தேவன் நம்மை நிரப்புகிறார்.
3) துதியின் ஆடை:
நம்மை ஒடுக்குகின்ற (மங்கலான) ஆவிகளால் நாம் மூழ்கிவிடப்படுவதில்லை, மாறாக உற்சாகத்தால் நாம் உயர்த்தப்படுகிறோம் என்று தேவன் வாக்களிக்கிறார்.
4) நீதி:
விசுவாசிகள் நல்லதைச் செய்ய மாற்றப்படுகிறார்கள், அதனால் சமூகத்தில் அவர்களின் நற்பெயர் மேம்படும். அவர்கள் சத்தியத்தின் சாட்சிகளாக அழைக்கப்படுவார்கள். எனவே, அவர்கள் நீதியின் விருட்சங்கள் என்று அழைக்கப்படுவார்கள். இந்த விருட்சங்கள் கர்த்தரால் நடப்பட்டு செழிப்பார்கள், ஆம், "நீதிமான் பனையைப் போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்" (சங்கீதம் 1:3; 92:12).
5) கர்த்தருக்கு மகிமை:
தம்மீது நம்பிக்கை வைத்து, அவரை நேசிக்கும் மற்றும் அவருக்கு ஊழியம் செய்யும் மனிதர்களுக்காக தேவன் கிருபையுடன் இதைச் செய்கிறார். இதன் விளைவாக, தேவன் அவரது அன்பு, இரக்கம் மற்றும் கிருபைக்காக மகிமைப்படுத்தப்படுகிறார் அல்லது மாட்சிமையடைகிறார்.
எனக்கு கண்ணியத்தையும், மகிழ்ச்சியையும், நீதியையும் கொடுத்ததற்காக நான் தேவனை மகிமைப்படுத்துகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran