உலகில் ஆவிக்குரிய வழிகாட்டிகள் என்று கூறும் பல மதத் தலைவர்கள் உள்ளனர். சமூக ஊடகங்கள் பின்நவீனத்துவ ஆன்மீக சந்தையில் அவர்களின் குரல்களை பெருக்கும் தளங்களை அவர்களுக்கு வழங்கியுள்ளன. கோடிக்கணக்கான பின்தொடர்பவர்களுடன், அவர்கள் தங்களை ஞானியாகவும், தெய்வீகமாகவும், நம்பிக்கை அளிப்பவர்களாகவும் காட்டுகிறார்கள், மேலும் சாதாரண மக்களிடமிருந்து மறைக்கப்பட்ட அனைத்து ஆவிக்குரிய ரகசியங்களையும் அறிந்திருக்கிறார்கள். பரிசேயர்கள் கூட யூத மக்களுக்கு அத்தகைய உருவத்தைக் கொடுத்தனர். இருப்பினும், கர்த்தராகிய இயேசு அவர்களை எச்சரித்தார், கடிந்து கொண்டார், கண்டனம் செய்தார். “மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப்போலிருக்கிறீர்கள், அவைகள்மேல் நடக்கிற மனுஷருக்கு அவைகள் தெரியாதிருக்கிறது” (லூக்கா 11:44) என்றார் ஆண்டவர்.
குறியிடப்படாத கல்லறைகள்:
ஒரு கல்லறையின் மேல் நடப்பது ஒரு யூதரை சம்பிரதாயப்படி தீட்டுப்படுத்துகிறது. அது கல்லறை என்பது அவர்களுக்குத் தெரியாவிட்டாலும், அவர்கள் நடந்து சென்றால், ஏழு நாட்களுக்கு அவர்கள் தீட்டுப்பட்டிருப்பார்கள் (எண்ணாகமம்: 19:16). எனவே, யூதர்கள் கல்லறைகளை தெளிவாகக் குறித்தனர், பெரும்பாலும் வெள்ளையடிப்புகளைப் பயன்படுத்தினர், அப்போது மக்கள் கவனமாக அவற்றைத் தவிர்ப்பார்கள்.
மாசுபடுத்தப்பட்ட போதனை:
மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் போதித்துக்கொண்டிருந்த பரிசேயர்கள், அதைப் பின்பற்றுபவர்கள் பரிசுத்தமாகுவதற்குப் பதிலாக அசுத்தமானவர்களாக ஆனார்கள் என்று விளக்கினார்கள். தன்னுடைய உபதேசத்தினாலே சீஷர்கள் சுத்தமானதாக கர்த்தராகிய இயேசு கூறினார் (யோவான் 15:3). பரிசேயர்களுக்குச் செவிசாய்த்தவர்கள் மாசுப்பட்டு பரிசுத்தமான தேவனிடமிருந்து பிரியும்படி ஆனது. இதற்கு நேர்மாறாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு செவிசாய்ப்பவர்கள் அவருடைய இரத்தத்தால் சுத்திகரிக்கப்படுவார்கள், மேலும் தேவனின் பிள்ளைகளாக மாறுவார்கள்.
இரண்டாம் மரணம்:
பாவத்தில் சேர்க்கும்படியான, ஒரு நபரை பரிதாபத்துக்குரியதாக்கி மற்றும் சேற்றில் கொண்டு சேர்க்கும் படியான தாறுமாறான போதனைகள் உண்டு. அதன் விளைவு இருள் மற்றும் ஆன்மாவின் அழிவு. எனவே, அசுத்தமான போதனையைப் பின்பற்றுபவர்கள் அக்கினி கடலில் வீசப்பட்டு, தேவனிடமிருந்து நித்தியமான பிரிவை அனுபவிப்பார்கள், இது இரண்டாம் மரணம் என்று அழைக்கப்படுகிறது (வெளிப்படுத்துதல் 21:8).
சத்தியத்தை அறியாமல் இருப்பதற்கு மன்னிப்பு இல்லை:
உலகம் முழுவதும் போலிச் செய்திகள், தவறான விளக்கங்கள், போலி மதங்கள், ஆவிக்குரிய குருடர்கள் மற்றும் எண்ணற்ற வழிபாட்டு முறைகள் நிறைந்துள்ளன. இருப்பினும், சத்தியத்தைக் கண்டறியும் மற்றும் பகுத்தறியும் பொறுப்பு ஒவ்வொரு நபருக்கும் உள்ளது. தேவனின் நித்திய வல்லமையும் அவருடைய தெய்வீகப் பண்புகளும் படைப்பில் சுயமாகத் தெரியும் என்று பவுல் எழுதுகிறார், எனவே சாக்கு போக்குக்கு இடமே இல்லை (ரோமர் 1:20).
சத்தியமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நான் ஏற்றுக்கொண்டுள்ளேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்