மக்கள் தங்கள் பாதுகாப்பு, உயிருக்கான உத்திரவாதம் மற்றும் அநுதின பிழைப்பு என கவனமாக இருக்கின்றனர். தனிப்பட்ட முறையில் தங்கள் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள், இயற்கைப் பேரழிவின் மத்தியில் பிழைப்பது, விபத்து போன்ற முக்கியமான காலங்களைக் குறித்து எண்ணி முன்னேற்பாடாக தயாராகிறார்கள். ஒரு நெருக்கடியைத் தீர்ப்பதை விட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் போதுமான முன்னெச்சரிக்கைகள் சிறந்தது.
எசேக்கியேலின் சாமான்கள்:
எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு சிறைபட்டுப் போகும் போது சாமான்களை ஆயத்தம் செய்யும்படி தேவன் கட்டளையிட்டார் (எசேக்கியேல் 12:7). பூர்வ காலங்களில், சிறைபிடிக்கப்பட்டவர்கள் தங்கள் தாயகத்திலிருந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் தங்கள் தோளில் நீண்ட காலம் உழைக்கக்கூடிய துணி அல்லது தோலால் செய்யப்பட்ட பெரிய பைகளை எடுத்துச் செல்கிறார்கள். அந்த பைகளில் உயிர்வாழ்வதற்கான தேவையான பொருட்கள் இருந்தன.
பிழைத்துக் கொள்ள தேவையான கருவிகள்:
மலையேறுபவர்கள், சாகசக்காரர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் பிழைப்பதற்கு தேவையான உபகரணங்களை எடுத்துச் செல்கின்றனர். அதில் உணவு, அடிப்படை விஷயங்களைச் செய்ய உதவும் கருவிகள், ஒரு டார்ச், கத்தி எனப் போன்றவை இருக்கும்.
அவசர கருவிகள்:
முதலுதவி பெட்டி போன்ற அவசரகாலப் பெட்டிகள் உள்ளன. இது வீட்டில் கூட வைக்கப்படுகிறது; யாருக்காவது அவசர மருத்துவ உதவி தேவைப்படலாமே. இயற்கை பேரழிவுகள் மற்றும் தொற்றுநோய்களின் போது, அத்தகைய கருவிகள் உயிர்வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.
தண்டனை:
இருப்பினும், எசேக்கியேல் தீர்க்கதரிசி யூதா தேசத்திற்கு, அவர்கள் மீது வரவிருக்கும் தேவனின் நியாயத்தீர்ப்பைக் காட்ட வேண்டியிருந்தது. யூதா தேசம் தோற்கடிக்கப்படும், மேலும் மக்கள் சிறைபிடிக்கப்படுவார்கள்; வெகுதூர தேசத்திற்கு சாமான்களை சுமந்துகொண்டு செல்வார்கள்.
வேரோடு பிடுங்கப்பட்டது:
மனிதர்களின் அக்கிரமத்தால், ஒரு நாடு அதன் குடிமக்களை கக்கிப் போடும் என்று வேதாகமம் கூறுகிறது (லேவியராகமம் 18:24-28). வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் வாழ்ந்த ஜனங்கள் தேவனுக்கு எதிராக பாவம் செய்தார்கள், அவர்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டனர். தேவன் இஸ்ரவேல் ஜனங்களை அந்த தேசத்தில் குடியமர்த்தினார். இப்போது, யூதா தேசம் தேவனுக்கு எதிராக தொடர்ந்து பாவம் செய்வதால், அவர்கள் சிறைப்பிடிக்கப்படுவார்கள்.
பாபிலோனிய சிறைப்பிடிப்பு:
யூதா தேசம் அந்நிய தெய்வங்களை நேசிக்கவும் சேவை செய்யவும் தேர்ந்தெடுத்தது. அயல்நாட்டு அரசர்களுக்கும் பேரரசர்களுக்கும் பணிவிடை செய்ய வனவாசம் செல்வதே தேசத்திற்கு உரிய தண்டனை. ஆக, யூதா தேசம் எழுபது ஆண்டுகள் பாபிலோனிய சிறையிருப்பிற்கு சென்றது.
இந்த உலகில் புலம்பெயர்ந்தவர்கள்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் இந்த உலகில் அரதேசிகளாகவும், அந்நியர்களாகவும், யாத்ரீகர்களாகவும் வாழ அழைக்கப்படுகிறார்கள், இது உலகத்திற்கு ஒரு தீர்க்கதரிசன உவமை, நாம் அவருடைய ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் (1 நாளாகமம் 29:15). நம் பையில் அன்பும், விசுவாசமும் மற்றும் நம்பிக்கையும் இருக்கிறது.
என் வாழ்க்கை இந்த உலகத்திற்கு ஒரு தீர்க்கதரிசன உவமையா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்