உபாகமம் 4:31 உன் தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள தேவனாயிருக்கிற படியால், அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட் டார்; உன் பிதாக்களுக்குத் தாம் ஆணையிட்டுக் கொடுத்த உடன் படிக்கையை மறக்கவுமாட்டார். சங்கீதம் 86:15; சங்கீதம் 103:4; சங்கீதம் 145:8; யாத்திராகமம் 20:6; யாத்திராகமம் 34:7; லூக்கா 1:50
1. அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை
புலம்பல் 3:22 நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
2. அவருடைய இரக்கங்கள் பெரியது
2சாமுவேல் 24:14 அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான். 1நாளாகமம் 21:13
3. அவருடைய இரக்கங்கள் மிகுதி
சங்கீதம் 119:156 கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியா யிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.
தானியேல் 9:10 எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு
4. அவர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர்
எபேசியர் 2:4,5 தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்த வர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையி னாலே இரட்சிக்கப்பட்டீர்கள்
நீங்களும் இரக்கமுள்ளவராயிருங்கள்
லூக்கா 6:36 உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவராயிருங்கள்.
மத்தேயு 5:7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்
லூக்கா 10:30-37 குற்றுயிராய் கிடந்தவனுக்கு இரக்கஞ்செய்த சமாரியன்
ரோமர் 12:8 இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடன் செய்யக்கடவன்
Author: Rev. M. Arul Doss