கிறித்தவ விசுவாசம் என்பது ‘குருட்டு நம்பிக்கையா என்ன?’ குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்கள் (மத்தேயு 15:14) என்பதாக இயேசு கற்பித்துள்ளார். அப்படியென்றால் கிறிஸ்தவ விசுவாசம் ‘குருட்டு நம்பிக்கையாக’ இருக்க முடியாது அல்லவா. சரி அப்படியானால், கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை என்ன?
1) வெளிப்படுத்தப்பட்ட விசுவாசம்:
கிறிஸ்தவ விசுவாசம் என்பது பரிசுத்தவான்களுக்கு ஒப்படைக்கப்பட்ட ஒன்றாகும் (யூதா 1:3). உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது, அதற்கு யாரும் சாட்சியும் இல்லை. எல்லையற்ற மற்றும் நித்தியமான தேவனை வரையறுக்கப்பட்ட மனித மனத்தினால் புரிந்து கொள்ள முடியாது. ஆதியாகமத்தின் முதல் அத்தியாயத்தை எழுதிய மோசேக்கு படைப்பின் மர்மத்தை வெளிப்படுத்த தேவன் கிருபையுள்ளவராய் இருந்தார். படைப்பு, தேவ வார்த்தை மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என மனிதகுலத்திற்கு குறைந்தபட்சம் மூன்று ஆதாரங்களின் மூலமாக தேவன் வெளிப்படுத்தியுள்ளாரே.
2) பகுத்தறிவு விசுவாசம்:
கிறிஸ்தவ விசுவாசமும் ஒரு பகுத்தறிவு நம்பிக்கைதான். வேதாகமத்தில் விவரிக்கப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகள் மற்ற ஆதாரங்கள் மூலம் சரிபார்க்கப்படலாம். சில ஆதாரங்கள் கலாச்சார ரீதியாகவும் இருக்கலாம். உதாரணமாக, நோவா காலத்து வெள்ளக் கதை உலகில் 300க்கும் மேற்பட்ட கலாச்சாரங்களில் காணப்படுகிறது. வாய்மொழியாக கடத்தப்பட்டதால் சில வித்யாசங்கள் இருக்கலாம். பல தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகள் வேதாகமத்தின் கதைகள் சத்தியம் மற்றும் உண்மையானவை என்பதை நிரூபித்துள்ளன.
3) நியாயமான விசுவாசம்:
அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அடிப்படை மனித நற்பண்புகள் உள்ளன. அந்த நற்பண்புகளின் அடிப்படையில், வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவன் உண்மையான கடவுள். மனித பகுத்தறிவுடன், கிறிஸ்தவ விசுவாசம் நிகரற்றது, நோக்கமுடையது. கிறிஸ்தவ நம்பிக்கையானது தேவனுடனான சரியான உறவு, ஜெபங்களுக்கான பதில், தேவனை பற்றி அறிவதில் மகிழ்ச்சி மற்றும் இந்த உலகில் சமாதானம் ஆகியவற்றால் அனுபவிக்கப்படுகிறது.
4) தொடர்புடைய விசுவாசம்:
கிறிஸ்தவ விசுவாசம் தத்துவம் அல்லது ஒரு ஆய்வறிக்கை அல்லது புராணம் அல்லது கட்டுக்கதை அல்லது கோட்பாடுகள் அல்லது கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல. விசுவாசம் என்பது தேவனுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவை அடிப்படையாகக் கொண்டது. தேவன் இஸ்ரவேல் புத்திரரோடு; " உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே" (யாத்திராகமம் 20:2) என தன்னை தொடர்புபடுத்திய ஒரு உறவாக பேசினார்.
5) மகிழ்ச்சியான விசுவாசம்:
கிறிஸ்தவ விசுவாசம் என்பது மந்தமான அல்லது சலிப்பானது அல்ல. இது ஒரு மகிழ்ச்சியான உறவாகும், அந்த சந்தோஷம் தேவனை நன்கு துதித்து ஆராதித்து அவர் நம் வாழ்வில் செய்த நன்மைகளுக்கு நன்றிபலி செலுத்தவும், மற்றவர்களுக்கு அவருடைய கிருபையை பிரகடனப்படுத்துவதற்கும் வழிவகுக்கிறது.
இந்த வெளிப்படுத்தப்பட்ட விசுவாசத்தை நான் கனப்படுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்