வேதாகமத்தில் இலக்கணம்

 நம் கையில் வைத்திருப்பதும் நாம் அன்றாடம் பயன்படுத்துவதுமாகிய இந்த வேதாகமம் கடவுள் நம்மோடு பேசும்  உயிரோட்டமுள்ள புத்தகம் மட்டுமல்ல இலக்கியப் புத்தகம் என்றும் சொல்லலாம் 
      ஆங்கிலத்தில் (Bible  பைபிள்  என்று அழைக்கிறோம் இதற்கு அர்த்தம் புத்தகம் (Book) என்பதே ஆகும்
    ஒரு லைப்ரரியில் எல்லா புத்தகங்களும் இருக்கும் அதே போல் தான் இந்த வேதாகமத்தில் எல்லா புத்தகங்களும் இருக்கும்
     இதில் சரித்திரப் புத்தகங்கள், தீர்க்கதரிசன புத்தகங்கள், கவிதை புத்தகங்கள், உவமைகள், சிறுகதைகள், விஞ்ஞானங்கள், வரலாறுகள் என எல்லாம் அடங்கிய இருக்கிறது
     அதுமட்டுமல்ல இறந்தகாலம், நிகழ் காலம், எதிர்காலம் என எல்லா காலத்தின் நிகழ்வுகளையும் சொல்கின்ற ஒர் அற்புதமான இறையியல் இலக்கிய புத்தகம்
ஆகும்  
        இந்த அற்புத வேதாகமத்தில் கவிதை நடையில் இருக்கும் இலக்கிய புத்தகங்கள்
     1.யோபு 
     2.சங்கீதங்கள் 
     3.உன்னதபாட்டு 
     4.புலம்பல்   
  ஆக வேத புத்தகத்தில் இலக்கியம் இல்லை இலக்கியவாதிகள் இல்லை கவிஞர்கள் இல்லை என்று யாரும் சொல்லிவிட இயலாது
   இந்தப் புத்தகங்களை எழுதின யாவருமே கடவுளின் கவிஞர்கள் ஆவார்கள்
    நாம் வாழ்கின்ற நமது நாட்களில்  இலக்கியத்தின் மூலமாய் கடவுளை பறைசாற்றியவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே போகும்
   நேரம் கிடைக்கும் பொழுது எடுத்து வாசியுங்கள்
   தமிழ் மொழியின் இலக்கியங்களிலும் தமிழ் மொழியை செம்மைப் படுத்துவதிலும் கிறிஸ்துவ பாதிரிமார்களின் பங்குதான் அதிகம் என்பது கிறிஸ்தவர்களான நமக்கே எட்டாத செய்தியாய் மாறிக்கொண்டிருக்கிறது ஞாபகப்படுத்த வேண்டியது அவசியமாகிறது
  தமிழ் மொழியை ஆரிய இலக்கியத்தின் ஆதிக்கமாய்  மாற்றிவிட முயல்கிறது ஒரு கூட்டம்
   தமிழ் மொழியின் இலக்கியம்  அது திராவிட இலக்கியம் என்பதே உண்மை திராவிட இலக்கியத்தில் கிறிஸ்துவ பாதிரிமார்களின் பங்கு அதிகம் ஆகவே திராவிட இலக்கியத்தை சார்ந்தவர்கள் கிறிஸ்தவ தமிழ் பாதிரியார்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கிறார்கள் முக்கியத்துவம் தந்து இருக்கிறார்கள்
   தமிழில் தேம்பாவணி  எழுதின இத்தாலி தேசத்தை சேர்ந்த பெஸ்கி எனும் வீரமாமுனிவர்
   தமிழ் மொழிக்கு அணி இலக்கணம் கொடுத்து தமிழ் சீர்திருத்தம் செய்த கால்டுவெல், ஜி.யு.போப்  என தமிழில் சீர்திருத்தம் செய்தவர்களை குறித்து நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகிறது
   அடுத்து இலக்கியம் என்றால் என்ன என்பதை குறித்ததான விளக்கங்களை நாமறிவோம் 
     அறிந்து கொள்ளும் பொழுது நாமும் இலக்கியம் படிப்பதற்கு ஏதுவாக அவைகள்  இருக்கும் 
     முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா இலக்கியம் என்பதெல்லாம் நமக்கு எட்டாத உயரமான எவரெஸ்ட் என ஒதுங்குவர்களை ஒன்றுமில்லை இலக்கியம் யாரும் படைக்கலாம்  என அழைப்பதுதான் இந்தக் கட்டுரை    

   1. இலக்கியம் என்றால் என்ன?
 
   இலக்கியம் - இலக்கு+இயம்
   இலக்கம் (இலக்கு) எனும் சொல் தொல்காப்பியத்தில் காணப்படுகிறது 

   இலக்கு என்பதற்கு அர்த்தம் 

   a.விளக்கம் 
   b.நோக்கம் 
   c.கொள்கை 
   d.குறிக்கோள் 

   இயம் என்பதற்கு அர்த்தம் 

   a.ஒலிப்பது 
   b.கூறுவது 
   c.வெளிப்படுத்துவது 

    நம் குறிக்கோள்களையும் கொள்கைகளையும் இயம்புவது அதாவது விளக்குவதே இலக்கியமாகும்

   2.எது இலக்கியம்?

   மனிதனின் மொழியோடு தொடர்புடைய மனிதனின் சிந்தனைக்கு, கற்பனைக்கு, உணர்வுக்கும் விருந்தாக அமையும் ஒர் குறிப்பிட்ட வடிவம் கொண்டதாக உள்ளது எதுவோ அதுவே இலக்கியமாகும் 
   கற்பனையோடு தொடர்புடையதும் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்களின் பண்பாட்டு கருவூலத்தை தாங்கி  வருவதையும் இலக்கியம் எனலாம் 
   
 3.இலக்கியத்தின் வடிவங்கள் எது?

  கவிதைகள் 
  கதைகள் 
  கட்டுரைகள் 
  நாடகங்கள் 
  என எழுத்து வடிவத்தில் இருக்கும் கலையே இலக்கியமாகும்    

4.ஏன் இலக்கியம் அவசியம்?
  இலக்கியம் என்பது அழகுணர்ச்சியின் வடிவங்கள்  அனுபவ வாழ்வின், பண்பாட்டின், நாகரீகத்தின், மக்கள் வாழ்வின் அழகு தொகுப்பின் எழுத்து வடிவம்
  உணர்ச்சிகளை உள்ளடக்கி வைப்பதினால் மருத்துவரீதியாக மன  அழுத்தம் ஏற்படும் அவைகளில் இருந்து விடுபட அகப்பையில் இருக்கும் கருத்தோட்டங்களை எழுத்து வடிவங்களில் வெளிப்படுத்துவதன் மூலம் அதை வெளிப்படுத்துபவற்கும் வாசிப்பவற்கும் உள்ளத்தில் சமாதானம் உருவாகிறது
  வார்த்தையில் வெளிப்படுத்துபவன் எழுத்தாளனாகிறான் வாசிப்பவன் வாசகன் ஆகிறான்     
   சுருக்கமாகச் சொன்னால் உள்  மனிதனின் ரசனைக்கும் ருசிப்பதற்கும் தேவையானதே இலக்கியம் எனும் உணவு ஆகும்
   இதில் எந்த உணவு யாருக்கு தேவையோ அவரவர்கள் அந்தந்த உணவை ருசிக்கலாம்
இலக்கியம் மனதுக்கு ஆரோக்கியத்தையும் சந்தோஷத்தையும் சிந்தனை ஓட்டத்தையும் கொடுக்கக்கூடியது
  சரி இனி வேதாகமத்தில் இலக்கியங்களை எடுத்து வாசியுங்கள் அதன் மூலமும் கடவுள் உங்களோடு பேசுவார்

  கவிமுகில் சுரேஷ்
   தர்மபுரிTopics: Bible Literature

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download