ஒரு வளர்ந்து வரும் தலைவர் தனக்கு வழிகாட்டியாக இருக்கும் ஆலோசகர் வசிக்கும் நகரத்திற்குச் சென்றார். மூன்று நாட்கள் அந்த ஊரில் இருந்தார்; ஆனால் அவருக்கு உள்ளூர் மொழி தெரியாததால் மிகவும் சிரமப்பட்டார். அந்த நகரத்தை விட்டு வெளியேறும் முன், தனது வழிகாட்டியிடம் பேசினார், உடனடியாக அவரும் அங்கு வந்தார். அந்த வழிகாட்டி தன்னை ஏன் அழைக்கவில்லை என்றும் ஏன் வருகையை பற்றிய திட்டமிடல் இல்லை என்றும் அதட்டினார். அப்போது வளர்ந்து வரும் இளம் தலைவருக்கு மடிக்கணினி ஒன்றை பரிசாக வழங்கினார். வளர்ந்து வரும் தலைவரிடம் சரியான திட்டமிடல் மற்றும் தயார் நிலை என இல்லாததால் மூன்று நாட்களை வீணடித்து தேவையற்ற கஷ்டங்களையும் எதிர்கொண்டார்.
சிலர் கோலம் போடுவதற்கு முன் புள்ளிகளாக வைப்பதுண்டு, பின்பு அப்புள்ளிகளை இணைப்பார்கள், அழகான படமாக அல்லது கோலமாக மாறி விடும். அதுபோல, தலைமைத்துவக் கொள்கைகளில் ஒன்று புள்ளிகளை இணைப்பதாகும்.
எழுச்சியூட்டும் மற்றும் சவாலான தலைவர்களுடன் இணைவதற்கு தலைவர்கள், ஆதரவளிக்கும் நண்பர்கள்; வளங்கள்; வாய்ப்புகள்; அறிவுத் தளம் (புத்தகங்கள், நூலகங்கள், மின்புத்தகங்கள், இணையதளங்கள்) மற்றும் பயிற்சி என வளர்ந்து வரும் தலைவர்களுக்கு இணைந்து அல்லது கற்றுக் கொண்டு பணியாற்ற உதவுகிறார்கள். இவ்வாறு இணைப்பதும் இணைத்துக் கொண்டு பணியாற்ற செய்வதும் ஆரோக்கியமான உக்கிராணத்துவம் ஆகும்.
1) வளங்களுடன் இணைத்தல்:
கர்த்தராகிய இயேசு, தோல்வியுற்ற மற்றும் சோர்வடைந்த பேதுருவை வளங்களுடன் இணைத்தார், அதாவது திரளான மீன்களைப் பிடிக்குமளவு கர்த்தர் உதவி செய்தார் (லூக்கா 5:4; யோவான் 21:6). பயன்படுத்தப்படாத, துஷ்பிரயோகம் செய்யப்பட்ட அல்லது கொடுக்க விரும்பாத பல வளங்கள் நம்மை சுற்றிக் காணப்படுகின்றன. ஒரு கிராமத்தில் ஒரு தேவாலய கட்டிடம் மூடப்பட்டுள்ளது, ஆனால் ஸ்தாபனமோ அந்த கட்டிடத்தை செயல்படும் விதமாக மாற்றுவதை விட்டு விட்டு புதிய ஒரு கட்டிடத்தை தேடி அலைகின்றனர்.
2) வாய்ப்பை இணைத்தல்:
மொர்தெகாய் எஸ்தரை ராணியாக மாற்ற வாய்ப்பு என்னும் புள்ளிகளை இணைத்தார் (எஸ்தர் 2:1-18). ஒரு சிலர் மற்றவர்கள் முன்னேறுவதைத் தடுக்க வாய்ப்புகளைப் பதுக்கி வைக்கும் வேலையைச் செய்வார்கள்.
3) மறுசீரமைப்புக்காக இணைத்தல்:
ஒநேசிமுவை பிலேமோனுடன் மீண்டும் இணைத்தார் பவுல் . இதனால் அடிமையான ஒநேசிமுவிற்கும் பிலேமோனுக்கும் இடையில் மன்னிப்பும் ஒப்புரவாகுதலும் நடைபெற்றது. நல்ல தேவபக்தியுள்ள ஆலோசகர்கள் இருந்தால், பல தம்பதிகள் விவாகாரத்திற்குப் பதிலாக ஒப்புரவாகுதலில் இணைவார்களே.
4) குழுவுடன் இணைத்தல்:
இஸ்ரவேலரை விடுவிக்கும் பணியில் அதனை நிறைவேற்ற மோசேயையும் ஆரோனையும் தேவன் இணைத்தார் (யாத்திராகமம் 4:27). மோசே தான் தகுதியற்றவன் என்று உணர்ந்தபோது, அந்த பணியை இணைந்து செய்து முடிப்பதற்கு ஏதுவான உறுப்பினரைக் கொடுத்தார். திறமையான உறுப்பினர்களை தங்கள் குழுவில் ஏற்றுக்கொண்டால் பல தலைவர்கள் சிறந்து விளங்க முடியும்.
5) திறன்களை மூலோபாயத்துடன் இணைத்தல்:
கோலியாத்தை தோற்கடிக்க ஒரு பயங்கரமான உத்தியை உருவாக்க தாவீது தனது திறமைகளை கவண், மேய்ப்பனின் அனுபவம் மற்றும் கூழாங்கற்களுடன் இணைத்தார் .
நாம் இணைக்கப்பட்டுள்ளோமா அல்லது துண்டிக்கப்பட்டோ, திசைதிருப்பப்பட்டோ உள்ளோமா?
Author : Rev. Dr. J. N. Manokaran