வேறு நாட்டைச் சேர்ந்த சிலர். தங்கள் உயிரைக் காப்பாற்ற முயன்று, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, படகுகளில் ஆழ்கடல் நீரையும் கடந்தார்கள். போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை விட, வரவேற்கும் நாடு சிறப்பாக இருந்தது. இருப்பினும், இந்த நாடு அகதிகள் புகலிடம் கோருவதை விரும்பவில்லை மற்றும் அரசாங்கம் அவர்களை நியாயமாக நடத்தவில்லை. அவர்கள் அகதிகள் முகாம்களில் விடப்பட்டனர். தங்கள் எதிர்காலத்தைப் பற்றி அறியாமல், அவர்கள் நாட்கள், வாரங்கள் மற்றும் இப்போது மாதங்களாக அங்கேயே வாழ்ந்தனர். அந்த பகுதியில் உள்ள சில நல்ல மனிதர்களின் நல்லெண்ணத்தின் அடிப்படையில் உணவு வழங்கப்பட்டது. பிஸ்கட், தேநீர் அல்லது தண்ணீருடன் ரொட்டி மட்டுமே வழங்கப்பட்டது. அவர்கள் ஊட்டச் சத்து குறைபாடு உள்ளவர்களானார்கள் மற்றும் பலவீனமடைந்தனர். ஒரு வருடத்திற்குப் பிறகு, சில மனித உரிமைகள் அமைப்பு இதை கவனித்தது; அவர்களுக்கு சிறந்த உணவு, தங்குமிடம் மற்றும் பிற நாடுகளுக்கு இடம்பெயர்வதற்கு உதவியது.
என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக:
பல சபைகளில், தேவ பிள்ளைகள் இந்த அகதிகளைப் போல ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக காணப்படுகிறார்கள். அர்ப்பணிப்பும் உறுதியும் கொண்ட மேய்ப்பன் இல்லாமல் அவர்கள் தொய்ந்து போனவர்களாகவும், ஆதரவற்றவர்களாகவும், துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள் (மத்தேயு 9:36). கர்த்தராகிய இயேசு பேதுருவுக்கு, "என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக" என்று கட்டளையிட்டார் (யோவான் 21:15). சபை தலைவர்களுக்கான தகுதிகளில் ஒன்று கற்பிக்கும் திறமை என்று பவுலும் 2 தீமோத்தேயு 2:23ல் குறிப்பிடுகிறார்.
சுயநல மேய்ப்பர்கள்:
எசேக்கியேல் தீர்ககதரிசி இஸ்ரவேலின் தலைவர்களை இப்படியாக எச்சரிக்கிறார்; "மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரை; நீ தீர்க்கதரிசனம் உரைத்து அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார்; தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்கவேண்டும். நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்கிறீர்கள்; கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமற்போகிறீர்கள்" (எசேக்கியேல் 34:2-3).
பிழைப்பிற்காக:
அகதிகள் வாழ்வதற்கு தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்பட்டது. அதே வழியில், பலர் நற்செய்தியை மிகுந்த நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்கின்றனர். உள்ளூர் சபைத் தலைமையால் மக்களுக்கு தேவனுடைய வார்த்தையை சரியாக அளிக்க முடியவில்லை. பாவம் பல விசுவாசிகள் ஆரோக்கியமான உணவு இல்லாமல் பிஸ்கட் அல்லது ரொட்டியுடன் தான் உயிர்வாழ்வது போல் தெரிகிறது!
முழுமையான உணவு:
எபேசு சபை மூப்பர்களுக்கு தேவனின் முழு ஆலோசனையையும் கொடுத்ததாக பவுல் தைரியமாக சொல்ல முடியும் (அப்போஸ்தலர் 20:27). மூப்பர்களும் சபைக்கு கற்பிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார்.
பகிர்ந்த உணவு:
பவுல் தீமோத்தேயுவுக்கு வார்த்தையை சரியாகப் பிரித்து வழங்க அறிவுறுத்துகிறார் (2 தீமோத்தேயு 2:15). வீட்டில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் ஆகியோரின் வயதுக்கு ஏற்ப ஒவ்வொருவரின் ஊட்டச்சத்து தேவைக்கேற்ப அம்மா உணவைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.
தேவன் என் பராமரிப்பில் கொடுத்த ஆட்டுக்குட்டிகளுக்கு நான் உணவளிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்