சமீபத்தில், சமூகப் பணிகளைச் செய்யும்போது தங்கள் கிறிஸ்தவ அடையாளங்களைக் காண்பிப்பது என்பது அவசியமற்றது என்று சிலர் வாதிட்டனர். அதற்கு கொடுக்கப்பட்ட வேதாகம உதாரணம் என்னவென்றால், நாம் கரைகின்ற உப்பு போல இருக்க வேண்டும். வெறுமனே உப்பு கரைவதில்லை, ஆனால் அது உள்ளிருந்து மாற்றத்தை ஏற்படுத்தும். மலைப்பிரசங்கத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ‘உப்பு மற்றும் ஒளி’ இரண்டையும் பற்றி பேசியுள்ளார் (மத்தேயு 5: 13-16). ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்களைப் போல, இரண்டும் முக்கியமானவை. ஒரு சீஷன், ‘உப்பாகவும் ஒளியாகவும்’ இரண்டாகவுமே இருப்பது அவசியமானது. ஒரு கத்தோலிக்க பாதிரியார் அந்த விவாதத்தில்: “நீங்கள் மட்டன் சந்தையில் இருந்து காய்கறிகளை வாங்க முடியாது. கிறிஸ்தவர்களாகிய நமது நம்பிக்கை நாம் வாழ்வதிலும் நடந்துக் கொள்வதிலும் உள்ளது மேலும் எதுவாக இருந்தாலும், ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முத்திரை’ நமக்கு இருக்கும்” என்பதாக பதிலளித்தார்.
இருளின் எந்த இடத்தையும் மாற்றும் சக்தி ஒளியிடம்உள்ளது. அடர்த்தியான இருளில் குறைந்த ஒளியும் சக்தி வாய்ந்தது. ஆகவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நன்மைகளைச் செய்யும் போது ஆவிக்குரிய, சமூக, பொருளாதார இருள் மற்றும் நம்பிக்கையற்ற தன்மை ஆகியவற்றில் சீஷர்களின் செயல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. நீதியின் நாகரிகத்தை உருவாக்க உப்பு ஒரு கலாச்சாரத்தை உருவாக்குகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்களால் வடிவமைக்கப்பட்டபடி, மக்களின் நடவடிக்கையை ஒளி மாற்றுகிறது. உள் மாற்றம் இல்லாமல், வெளிப்புற நடைகளை மாற்றுவது தற்காலிகமாக இருக்கும். எல்லா வழிகளிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதும், அதன்படி வாழ்வதும் நிரூபிப்பதும் எல்லா சூழ்நிலைகளிலும் ‘பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவுக்கு மகிமை’ அளிப்பதும் உலகை சுவிசேஷ பாதையில் தூண்டுவதும் அவசியமானது. உப்பாகவும் ஒளியாகவும் வாழும்போது மக்கள் ஆராதிப்பவர்களாக மாறுகிறார்கள். இதன் மூலம் இறுதியாக நாம் என்ன மாதிரியான கண்ணோட்டம் கொண்டிருக்கிறோம் என்பதும், மேலும் நாம் உருவாக்க வேண்டிய ‘கனி’ என்ன என்பதைப் புரிந்துகொள்வதும் ‘தேவனை ஆராதிப்பவர்கள் உண்மையோடும் ஆவியாடும் தொழவேண்டும்’ என்பது மிக அவசியமானது (யோவான் 4: 23,24)
எனது சமூகத்தில் நான் உப்பாகவும் வெளிச்சமாகவும் இருக்கிறேனா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்