மக்கள் பல்வேறு வகையான விடுதலையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
அரசியல்:
அடக்குமுறை அரசனின் கீழ் வாழும் மக்கள் விடுதலையை விரும்புகிறார்கள். படையெடுக்கப்பட்ட நாடுகள் உள்ளன, பாதிக்கப்பட்டவர்கள் சுதந்திரத்திற்காக ஏங்குகிறார்கள். அவர்கள் சர்வாதிகாரி அல்லது இரக்கமற்ற ஆட்சியாளரின் பாவங்களின் கொடுங்கோன்மையிலிருந்து தப்பிக்க விரும்புகிறார்கள்.
பொருளாதாரம்:
சிலர் செல்வந்தர்கள் மற்றும் செல்வாக்குமிக்கவர்களால் சுரண்டப்படுகிறார்கள். நியாயமான ஊதியம் இல்லை, பாதுகாப்பான பணியிடம் இல்லை, ஊக்க ஊதியம் இல்லை, ஊதிய உயர்வு இல்லை எனப் போன்றவை. இத்தகைய சுரண்டல்காரர்களின் பாவங்களிலிருந்து விடுதலையை அவர்கள் விரும்புகிறார்கள்.
சமூகம்:
சாதி, குல, வர்க்க அமைப்புகளின் சமூக ஒடுக்குமுறை எல்லா இடங்களிலும் உள்ளது. பலர் அடிமைகளாக அல்லது வாழ்நாள் முழுவதும் வேலை செய்பவர்களாக விற்கப்படுகிறார்கள். இந்த மக்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் கொண்டாடப்படும் பாவங்களிலிருந்து சமூக விடுதலையை விரும்புகிறார்கள்.
குடும்ப துஷ்பிரயோகம்:
சில குழந்தைகள் பேச்சின் மூலமாகவும், உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது மாற்றாந்தாய்களின் பாவங்களிலிருந்து விடுதலையை நாடுகின்றனர். குடும்ப வன்முறை, வாய்மொழி துஷ்பிரயோகம் மற்றும் உணர்வுகள் அடிப்படையிலான ஒடுக்குமுறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர்கள் தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களின் பாவங்களிலிருந்து விடுதலையை நாடுகின்றனர்.
குறுகிய மனப்பான்மை:
மற்றவர்கள் இனவெறி, பார்ப்பனியம், மொழியியல் பேரினவாதம், மத அடிப்படைவாதம் மற்றும் தோல் நிறம் என வித்தியாசம் காண்பதால் பாதிக்கப்படுகிறார்கள். இப்படிப் போன்றவர்கள் இத்தகையவர்களின் பாவங்களிலிருந்து விடுதலை பெற ஏங்குகிறார்கள்.
மற்றவர்களின் பாவங்கள்:
பிறர் மீது உணர்வற்ற, சுயநலம், பெருமை, மற்றவர்களின் உரிமைகளை அங்கீகரிக்காத பிறரது பாவங்களின் விளைவுகளை அனைவரும் அனுபவிக்கின்றனர். அது எந்த மூலத்திலிருந்தும் இருக்கலாம். அத்தகைய மக்கள் ஒரு அதிசயமான விடுதலைக்காக ஏங்குகிறார்கள் மற்றும் ஜெபம் செய்கிறார்கள். இருப்பினும், அவர்கள் தங்கள் சொந்த பாவங்களை அறிய மாட்டார்கள். அவர்கள் தங்கள் கண்களில் உள்ள துரும்பை புறக்கணித்து விட்டு, மற்றவர்களின் கண்களில் இருக்கும் உத்திரத்தை அகற்ற முயற்சிக்கிறார்கள் (மத்தேயு 7:5).
உண்மையான ஆவிக்குரிய விடுதலை:
யோசேப்பு மரியாளுடன் நிச்சயதார்த்த உடன்படிக்கையை திருமணத்தின் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்ல வேண்டுமா என்று உறுதியாக தெரியவில்லை. கர்த்தர் அவனிடம் பேசினார், பரிசுத்த ஆவியின் நிழலிடும் வல்லமையின் மூலம் மரியாள் கருவுற்றதைப் போல திருமணத்திற்கான காரியங்களைச் செய்யும்படி கட்டளையிட்டார். “அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்” (மத்தேயு 1:21). மற்றவர்களின் பாவங்களின் விளைவுகளிலிருந்து விடுபடுவதை விட பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவது மிகவும் முக்கியமானது.
என் பாவத்திலிருந்து விடுதலையை அனுபவிப்பதற்காக நான் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்