Mr. வெறுப்பு - காயீன் (1 யோவா. 4:20)
கண்டதும், காணாததும்
வெறுப்பு எறியும் நெருப்பு போன்றது…
வெறுப்பானது நெருப்பைப் போல் அருகில் இருப்பதையும், இருப்பவர்களையும் எறித்து சாம்பலாக்கி விடும்
யோவான் தன்னுடைய எழுத்துக்களில் அன்பைக் குறித்து அழகாக ஆழமாக எழுதுகிறார் (யோவன் 3:16)
அன்பை காட்டுவதற்காக வெறுப்பைக் குறித்து எழுதுகிறார்:
யோவான் 3:20 - தீமைசெய்பவனிடத்தில் அன்பு இருக்காது
யோவான் 7:7- உலகம் தேவனை வெறுக்கிறது
யோவான் 15:23- இயேசு: உலகம் உங்களை வெறுத்தால் என் தகப்பனை வெறுக்கிறது
• இயேசு – எதிரிகளையும் நேசிக்க வேண்டும்
• பவுல் – அன்பை நாட வேண்டும்
• யோவான் – அயலானை/சகோதரனை வெறுக்க வேண்டாம்
தேவனை நேசிப்பேன் ஆனால் தேவ பிள்ளைகளை நேசிக்க முடியாது என்று சொல்ல கூடாது
நம் தேவன் இயேசு, அன்புக்கு எதிராக இருக்கிற வெறுப்பிற்கு தேவ அன்பை சொல்லியும், அதன் பிறகு மரித்து செய்தும் காட்டினார். நீங்கள் யாரையாவது வெறுக்கிறீர்களா? அது நியாயமான காரியத்திற்காகவே இருந்தாலும் அவர்களை நேசிக்கவும், வெறுக்காமலிருக்கவும் முயற்சியுங்கள். அவர்களுக்காக ஜெபியுங்கள்!
தேவன் நம் பாவத்தைத் தான் வெறுக்கிறார். நம்மை நேசிக்கிறார் அல்லவா?
இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!
Author: Bro. Dani Prakash