கவலை (மத். 6: 19-27)
கவலை எனும் வலை
“ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?”
பரலோகத்திலே பொக்கிஷங்களை சேர்த்து வைத்தால் நாம் இங்கே உப்பாக இருக்கலாம். இங்கே சேர்த்து வைத்தால் லோத்தின் மனைவி போல உப்புத் தூணாக மாறிவிடும் நிலை ஏற்படும்
உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்– மத். 6;21
அற்ப விசுவாசிகளாய் இல்லாமல் அஞ்ஞானிகளாய் இல்லாமல் அதிக நிச்சயத்தோடு இருங்கள்.
நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா ஏன் இந்த கவலை இந்த வலைக்கு தப்பித்திடுங்கள்
இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!
Author: Bro. Dani Prakash