குற்றம்சாட்டுதல் (பிலி. 2:15-16)
ஊர் தூற்றும்படி இல்லாமல் உலகோர் போற்றும்படி வாழ்வது!
“கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.”
உணவைக்குறித்து, உடைமைகளைக்குறித்து, உடன்இருப்பவரைக்குறித்து முறுமுறுப்பு.
பவுல் நம்மை எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும், தர்க்கிப்பில்லாமலும் செய்ய அழைக்கிறார்.
இப்படி செய்யும்போது, நாம்:
• குற்றமற்றவர்களாய் இருக்க முடியும்
• கபடற்றவர்களாய் இருக்க முடியும்
• மாசற்ற பிள்ளைகளாய் இருக்க முடியும்
ஒருவரில் இருக்கும் குறையை குறித்தே சொல்லிக் கொண்டே இராமல், குற்றத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்காத வாழ்க்கையையும், குற்றம் இல்லாத வாழ்க்கையையும் வாழவேண்டும்! குற்றம் சாட்டி, குறையோடு வாழாமல், நிறைவாய் வாழ ஜெபிப்போம்.
இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!
Author: Bro. Dani Prakash