சோம்பலான மனது

தாலந்தைப் பற்றிய உவமையில், ஐந்து தாலந்துகள் பெற்றவனும் மற்றும் இரண்டு தாலந்துகள் பெற்றவனும் எஜமானாரால் அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டப்பட்டு மேலும் மெச்சிக் கொள்ளப்பட்டனர், ஆனால் ஒரு தாலந்து பெற்ற மனிதன் கண்டனத்துக்கு ஆளானான் (மத்தேயு 25: 14-30). இதில் எஜமானன் இரண்டு வலுவான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பார். அது என்னவென்றால்; பொல்லாதவன் மற்றும் சோம்பலான வேலைக்காரன்.

 ஒரு தாலந்தை கொண்ட மனிதன் தனது சிந்தனை, தனது நடத்தை மற்றும் அணுகுமுறையில் பொல்லாதவன்.  எப்படியெனில் எஜமானனை நோக்கி, 'நீர் கடினமான மனிதர்’ என்று கூறினான் (மத்தேயு 25:24) அதாவது, இரக்கமற்ற அல்லது கருணையற்ற அல்லது தாராள மனப்பான்மை இல்லாத கடினமான வேலைகளைக் கொடுக்கும் ஒரு எஜமானன் என்று அவரைக் குற்றம் சாட்டினான். அது அக்கதாபாத்திரத்தை படுகொலைச் செய்வதற்கு சமம்.  உண்மையில் அந்த எஜமானன் ஒரு நல்ல மனிதன், ஆதலால் தான் தன்னுடைய இருபது வருட வருமானத்தை சாதாரண வேலைக்காரனுக்கு (ஒரு தாலந்து) எதையும் பிணையாக பெற்றுக் கொள்ளாமல் அவனை நம்பி கொடுத்தார், எஜமானன் அவனை ‘பொல்லாதவனே’ என்று அழைத்தார், ஏனெனில் அவன் நன்மைகளைப் பெற்றுக் கொண்டு, தேவையற்று ஊழியர்களைச் சுரண்டுவதாகவும் ஒடுக்குவதாகவும் கூறினான்.  அவனது தோல்வியையும் முட்டாள்தனத்தையும் ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக அவன் எஜமானரைக் குற்றம் சாட்டினான்.

 எஜமானன் அவனை ‘சோம்பேறி’ அல்லது ‘சுறுசுறுப்பற்ற’ வேலைக்காரன் என்று கண்டித்தார். அது ‘சோம்பலான மனமுடையவன்’ என்பதாகும்.  ஒரு தாலந்தைக் கொண்ட மனிதன் புத்திசாலித்தனமாக வேலை செய்யாமல் கடினமாக வேலைச் செய்தான். மக்கள் அடிக்கடி வராத ஒரு வயலை தேர்வு செய்து அதை தனியாக தோண்டினான், கிடைத்ததை கொண்டுபோய் அங்கு புதைத்து வைத்தான்.  அநேகமாக, மற்றவர்களின் சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக அவன் இரவில் அதைச் செய்தான்.  மேலும், யாருமே அதை திருடி விடாதபடி இரவில் விழித்திருந்து அவன் அதைக் கவனித்திருப்பான்.   உடல் ரீதியாக, அவன் கடினமாக உழைத்தான், ஆனால் சிந்திக்கவும், பிரதிபலிக்கவும், திட்டமிடவும், ஆராயவும், பகுப்பாய்வு செய்யவும் பின்னர் செயல்படவும் மறுத்துவிட்டான்.

மற்றவர்கள் அனைவருமே அவனது எஜமானன் உட்பட அவனை ஏமாற்றுவதாகவும், சுரண்டுவதாகவும், ஒடுக்குவதாகவும் ஒரு அவநம்பிக்கையான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தான். தாலந்துள்ள ஒரு மனிதன் சந்தேகத்திற்குரிய மனிதனான்.  அவனால் யாரையும் நம்ப முடியவில்லை.  மனம் என்பது தேவனளித்த பரிசு, இது நேர்மறையான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். அவன் தாலந்தைப் பயன்படுத்தி எவ்வாறு பெருக்க முடியும் என்று யோசிப்பதற்குப் பதிலாக, அதை ‘பாதுகாக்கவும்’ அல்லது ‘காப்பாற்றவும்’ விரும்பினான். அவன் தவறாகப் பயன்படுத்துவோமோ அல்லது துஷ்பிரயோகம் செய்வோமோ அல்லது அதை இழப்போமோ என்று பயந்தான்.  எஜமானன் சொன்னது சரிதான், வங்கியில் டெபாசிட் செய்திருக்கலாம், கொஞ்சம் வட்டி கிடைத்திருக்கும்.  ஆனால் அவனது மனதில், வங்கிகள் கூட திவாலாகக்கூடும் என்று நினைத்திருப்பான்.  எனவே அதையும் முயற்சிக்கவில்லை.  ஒரு செயலற்ற மனம் பிசாசின் பட்டறை, அவன் சோம்பேறியும் அவநம்பிக்கையுடைய மனம் கொண்டவனாக இருந்தான்.

 நேர்மறை மற்றும் உபயோகமான நோக்கங்களுக்காக நான் என் மனதை தீவிரமாக ஈடுபடுத்துகிறேனா? என சிந்திப்போம்.

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download