தாழ்த்தப்பட்ட ஏழை தலித் ஒருவர் கூறியதாவது; “கல்வான் ராணுவ வீர தியாகியின் குடும்பத்தினர் ஓரிரவுக்குள் எல்லை சுவர்கள் கொண்ட அரசு நிலத்தில் சிலை அமைத்தனர். இது எனது நிலத்தை அணுக முடியாததாகிவிட்டது. குடும்பம் தேசத்தின் நிலத்தைப் பாதுகாக்கிறது, ஆனால் எனது நிலத்தைப் பறிக்கிறது (தி பிரின்ட், மார்ச் 8, 2023). பணக்காரக் குடும்பம், தங்களுக்குச் சொந்தமானவற்றில் திருப்தியடையாமல், மற்றவர்களின் நிலத்திற்கு ஆசைப்படுகிறது.
ஆகாப்:
இஸ்ரவேலின் ராஜா தனக்கு இருந்த தேசத்தை வைத்து திருப்தி அடையவில்லை. தன் மூதாதையர்களிடமிருந்து பெற்றிருந்த நாபோத்தின் திராட்சைத் தோட்டத்திற்கும் அவன் ஆசைப்பட்டான் (1 இராஜாக்கள் 21:1-29). ஆகாப் திராட்சைத் தோட்டத்தை கீரைக் கொல்லையாக்கும்படி அல்லது காய்கறி தோட்டமாக மாற்ற விரும்பினான். மோசேயின் பிரமாணத்தின்படி அதை விற்க நாபோத் மறுத்துவிட்டான் (லேவியராகமம் 25:23; எண்ணாகமம் 36:7).
மனச்சோர்வு:
ஆகாப் தனக்கு இருந்த இவ்வளவு நிலத்தில் திருப்தியடையவில்லை, ஆனால் நாபோத்தின் தோட்டம் கிடைக்காததற்கு மனச்சோர்வடைந்தான். குழந்தைகள் தாங்கள் கேட்டது கிடைக்கவில்லை என்றால் சாப்பிடாமல் அடம்பிடிக்குமே அதுபோல இருந்தான். யேசபேல், ஆகாப் ராஜாவிடம் இதற்காகவா இவ்வளவு சோகம் எனக் கேட்டாள்; அது மாத்திரமல்ல ஒரு ராஜா போல நடந்து கொள்ளாததற்காக அவரை கிண்டல் கேலியும் மற்றும் அதிகாரத்தைக் காட்டாததற்கு கண்டிக்கவும் செய்தாள். தான் அந்த நிலத்தை வாங்கி தருவதாக உறுதியும் அளித்தாள்.
சதி:
யேசபேல் தேவபக்தியற்றவள், அநீதியுள்ளவள், இரக்கமற்றவள். அவள் உள்ளூர் அதிகாரிகளுக்கு ஆகாபின் முத்திரையுடன் கடிதங்கள் எழுதினாள். நாபோத் தேவனையும் ராஜாவையும் சபித்ததாக இரண்டு அயோக்கியர்கள் பொய் சாட்சியம் அளித்தனர், நாபோத் அநியாயமாக கல்லெறிந்து கொல்லப்பட்டான் (உபாகமம் 17:6). ஒருவேளை, நாபோத்தின் மகன்களும் கொலை செய்யப்பட்டிருக்கலாம், அப்போது தானே அவர்கள் சொத்துக்கு உரிமை கோர மாட்டார்கள்.
உடைமை:
யேசபேல் ஆகாபிடம் சொத்தின் மீது உரிமை கோர யாரும் இல்லாததால், சொத்தை தங்களுக்கு உடைமையாக்கும் வேலையைச் செய்தாள். ஆகாப் புதிதாகச் சம்பாதித்த முறைகேடான சொத்தைப் பார்க்கச் சென்றபோது, எலியா தீர்க்கதரிசி அவனை எதிர்கொண்டார்.
தீர்க்கதரிசனம்:
எலியா தீர்க்கதரிசி ஆகாபை கொலைகாரன் என்று குற்றம் சாட்டினார். கணவன், ராஜா மற்றும் பயனாளியாக அவன் முதல் குற்றவாளி. நாபோத்தின் இரத்தத்தை நாய்கள் நக்கியது போல் உன் இடத்தில் வைத்து உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்றார் எலியா. அவனுடைய மனைவி யேசபேல் புதைக்கப்படமாட்டாள், ஆனால் நாய்கள் யேசபேலை யெஸ்ரவேலின் மதில் அருகே தின்னும் என்றார். இதையெல்லாம் கேட்ட
ஆகாப் மனந்திரும்பினான், ஆனால் அவனுடைய மகனுக்கு அந்த தண்டனை வந்தது, அவனுடைய சந்ததியினர் அனைவரும் கொல்லப்பட்டனர் (2 இராஜாக்கள் 9:24-26). யேசபேலை நாய்கள் தின்று விடும் (2 இராஜாக்கள் 9:10).
நீதியான நியாயாதிபதி:
"மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்" (கலாத்தியர் 6:7).
நான் பேராசைக் கொள்கிறேனா அல்லது இருப்பதில் திருப்தியடைகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்