அறிவு பெருகும்

கடைசி நாட்களில் அறிவு பெருகும், மக்கள் அங்கும் இங்கும் ஓடுவார்கள் என்று தானியேல் தீர்க்கதரிசி கூறினார் (தானியேல் 12:4). மைக்ரோசிப்களின் தொழில்நுட்ப முன்னேற்றம், தகவல்களின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் இணையம் ஆகியவை மனிதன் அறிவைப் பெருக்கி பெரும் முன்னேற்றம் அடைய உதவியுள்ளன.  உலகில் மிகவும் வசதியான மற்றும் வளமான வாழ்க்கையைப் பெற அறிவைத் தேடி மக்கள் உலகம் முழுவதும் பரவலாகப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். தொற்றுநோய் காரணமாக, இப்போது டிஜிட்டல் தேடல் பல மடங்கு அதிகரித்துள்ளது.  மக்கள் ஒரு இணையதளத்தில் இருந்து மற்றொரு இணையதளத்திற்கும், ஒரு பயன்பாட்டு செயலியில் இருந்து மற்றொரு பயன்பாட்டு செயலிக்கும், ஒரு சேனலில் இருந்து மற்றொரு சேனலுக்கும், ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கும் என ஜனங்கள் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். 

1) உலக அறிவு:
எளிதான முறையில் அறிவை பெருக்கிக் கொள்ளும் செயல்முறையில் வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களை மறைத்துவிடும் நிலைக் காணப்படுகிறது.  

2) உணர்வு:
டிஜிட்டல் உலகம் பெரிய அளவிலான சிற்றின்ப தகவல், அறிவு மற்றும் ஆபத்தான இணையதளங்களை உருவாக்கியுள்ளது. அதிலும் ஒழுக்கக்கேடான, ஆபாசமான மற்றும் குழந்தைகளுடனான உடலுறவு என தவறானதை ஊக்குவிக்கும் நிலை இன்று டிஜிட்டல் உலகில் காணப்படுகிறது. வருந்தத்தக்க விஷயம் என்னவெனில், பலர் அதற்கு அடிமைகளாகிவிட்டனர்.

3) உலகப்பிரகாரமானவை:
உலகியல் செல்வங்களையும் வளங்களையும் கொண்டு எப்படி செழிப்பாக வாழ்வது, முன்னேற்றம் அடைவது மற்றும் அனுபவிப்பது என்பது பற்றிய ஒரு பெரிய அறிவுக் கடல் டிஜிட்டல் உலகில் உள்ளது.

4) உல்லாசம்:
பொழுதுபோக்கு அம்சம் டிஜிட்டல் உலகில் ஒரு பெரிய இடத்தை ஆக்கிரமித்துள்ளது.  அனைத்து வகையான, வெவ்வேறு வயதினரை, கலாச்சாரம், மற்றும் மொழி போன்ற பல்வேறு இணைய பயனர்களை கவர்ந்துள்ளது.  அவர்கள் ஒதுக்கக்கூடிய ஒவ்வொரு நிமிடமும் இந்த பொழுதுபோக்கில் பயன்படுத்தப்படுகிறது.

5) உண்மையான மதம்:
இரண்டு வகையான மதங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று சத்தியம் அதாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பிரசங்கிக்கும் சுவிசேஷம்.  மற்றவை சத்தியத்தையும் ஞானத்தையும் தேடும் மதங்கள். மனிதகுலத்தை அடிமைப்படுத்தும் வழிபாட்டு முறைகளும் உள்ளன.

6) உலகளாவிய தகவல்:
பெரிய அளவிலான தகவல்கள் நம் விரல் நுனியில் உள்ளன.  அது அரசியல், சமூகம், கலாச்சாரம், மொழி, நாடுகள், பயணம், ஓய்வு, சமையல், அழகு குறிப்புகள், உடற்பயிற்சி, உடல்நலம், கல்வி, மேலாண்மை, உறவுகள், புத்தகங்கள், திரைப்படங்கள், காலநிலை, வரலாறு, ஆளுமைகள், பிரபலங்கள்... எனப் போன்ற அனைத்து தகவல்களும் கிடைக்கும்.

7) உலகளாவிய சபை:
உலகம் முழுவதையும் பாதித்துள்ள இந்த கொரோனா தொற்றுநோய், தயக்கமும் சந்தேகமும் ஆன டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஆராய உலகளாவிய சபையை உந்தியது. உலகெங்கிலும் உள்ள பல உள்ளூர் சபைகள் தங்கள் பணி மற்றும் ஊழியத்தை சுவிசேஷம் அறிவிக்கவும், தகுதிப்படுத்தவும் மற்றும் நீட்டிக்கவும் டிஜிட்டல் மீடியாவைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.  இது ஆண்டவரின் பெரிய கட்டளையை நிறைவு செய்யத் துரிதப்படுத்தலாம்.

என்னை விடுவிக்கும் சத்தியத்தை நான் தேடுகிறேனா?  (யோவான் 8:32)
Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download