நீதியும் உரிமைகளும்

டெல்லியில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த பத்து வயது சிறுமியை சித்திரவதை செய்ததற்காக பிரபல விமான நிறுவனத்தில் பணிபுரியும் பெண் விமானி மற்றும் அவரது கணவர் ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர்.  பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் அவர் விமான நிறுவனத்தின் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார் (ஹிந்துஸ்தான் டைம்ஸ்,  ஜூலை 19, 2023). படித்த, நன்றாகச் சம்பாதித்து, உயர்ந்த சமூக அந்தஸ்தில் உள்ள ஒருவர், எப்படி இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கிறார்? "நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான்" (நீதிமொழிகள் 29:7).  வேதாகமத்தைப் பற்றிய அறிவு இல்லாதவர்களுக்கு ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள், விதவைகள், குழந்தைகள், அனாதைகள், ஆதரவற்றோர், நோயாளிகள் மற்றும் ஊனமுற்றோர் ஆகியோரின் உரிமைகளைப் பற்றித் தெரியாது.

குழந்தைகள்:
ஒவ்வொரு குழந்தையும் தேவனின் சாயலில் படைக்கப்படுகிறது.  அனைத்து குழந்தைகளுக்கும் வாழவும், வாழ்க்கையை அனுபவிக்கவும், கல்வி பெறவும், உணவு, உடை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைப் பெறவும் உரிமை உண்டு. "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்" (மத்தேயு 18:6). 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக் கூடாது, வீட்டுக் கடமைகளைச் செய்ய ஒரு குழந்தையை வேலைக்கு அமர்த்துவது நாட்டின் சட்டத்தை மீறுவதாகும், பிள்ளைகள் பணிகளில் அல்ல, பள்ளியில் இருக்க வேண்டும்.

சுரண்டல்:
இந்த படித்த தம்பதியினர் மலிவான உழைப்பை விரும்பினர். வேலை செய்யும் பெண்கள் அதிக சம்பளம் கேட்பார்கள், ஆனால் சிறுபிள்ளைகளுக்கு பெரியவர்கள் அளவிற்கு சம்பளம் கொடுக்க தேவையில்லை. அதனால் அவர்கள் ஒரு ஏழைப் பெண்ணை வேலைக்கு அமர்த்தினார்கள்.  படிக்க வைக்க முடியாத பெற்றோர்கள், குறைந்த பட்சம் தங்கள் பெண்ணிற்கு நல்ல உணவும் பாதுகாப்பும் கிடைக்குமே என்று நம்பி வேலைக்கு அனுப்பினர்.  பெற்றோரின் ஏழ்மை மற்றும் சிறுமியின் நம்பிக்கையற்ற நிலைமையை தம்பதியினர் பயன்படுத்திக் கொண்டனர்.

சித்திரவதை:
பிறருக்குத் தீங்கு விளைவிப்பது, உடல் வலி, உணர்ச்சிக் கொந்தளிப்பு, உளவியல் தழும்புகள் ஆகியவை தேவனுக்கு எதிரான பாவங்கள்.  சிறு குழந்தை சித்திரவதை செய்யப்பட்டதால், அவளது கைகளில், கண்களுக்குக் கீழே போன்றவற்றில் தழும்புகள் தெரிந்தன. சிறுபிள்ளைத்தனமான தவறுகளுக்காக ஒரு குழந்தையை மிக கொடுமையாக தண்டிப்பது பணக்கார தம்பதிகளின் நோய்வாய்ப்பட்ட மனநிலையை காட்டுகிறது.

வேறுபட்ட மனசாட்சி:
மனசாட்சி மக்களுக்கு வழிகாட்டவில்லையா?  மனசாட்சியில் சூடுண்டவர்கள் பொல்லாதவர்களாக இருப்பார்கள் என்று பவுல் எழுதுகிறார் (1 தீமோத்தேயு 4:2).  வேதாகமத்தில் இல்லாத உலகக் கண்ணோட்டங்களால் வடிவமைக்கப்பட்ட மனசாட்சி தவறானது மற்றும் மக்களை தவறாக வழிநடத்துகிறது.  குழந்தையின் கர்மவினையே வேலையாளாக மாறுவதற்குக் காரணம் என்று மனசாட்சியில் சூடுண்ட தம்பதிகள் நினைத்தார்கள்.  எனவே வேலையில் அடிமையாக்கி, சுரண்டி, சித்திரவதை செய்தனர்.

 மற்றவர்களின் உரிமைகளை நான் அங்கீகரிக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download