யோசேப்பு யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவைச் சேர்ந்தவன் (லூக்கா 23:50). இந்த நகரம் எருசலேமுக்கு வடமேற்கே 20 மைல் தொலைவில் அமைந்திருந்தது.
1) ஐசுவரியவான்:
மத்தேயுவின் கூற்றுப்படி யோசேப்பு ஒரு பணக்காரன் (மத்தேயு 27:57). அவன் பெரிய செல்வந்தனாக இருந்த போதிலும் அவன் தேவ பக்தியுள்ளவனாகவும், உத்தமனும் மற்றும் நீதிமானுமாயிருந்தான்.
2) சீஷன்:
யோசேப்பு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷன் என மத்தேயு மற்றும் யோவான் இருவராலும் வரையறுக்கப்படுகின்றான் (மத்தேயு 27:57; யோவான் 19:38).
3) பயந்தவன்:
அவன் செல்வந்தனாக இருந்தும், ஆலோசனை சங்கத்தின் உறுப்பினராக இருந்தும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு எதிரான யூதர்களுக்கு அவன் பயந்தான் (யோவான் 19:38).
4) ஆலோசனைச் சங்க உறுப்பினன்:
யோசேப்புமரியாதைக்குரிய மற்றும் கனத்திற்குரிய யூத சங்கமான ஆலோசனைச் சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்தான் (மாற்கு 15:23, லூக்கா 23:50) அவன் நீதிமான் என்றும் அழைக்கப்படுகிறான், இதற்கு குற்றமற்றவன் என்றும் பொருள்.
5) பொந்தியுபிலாத்துவோடான உறவு:
யோசேப்பு யூத மக்களிடையே மரியாதைக்குரியவன் மட்டுமல்ல, ரோமானிய ஆளுநரான பொந்தியுபிலாத்தை எளிதாக அணுக கூடியவனாகவும் இருந்தான் (லூக்கா 23:52).
6) ஊழியப் பணி:
யோசேப்பு பொந்தியுபிலாத்துவிடம் தைரியமாகச் சென்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உடலை அடக்கம் செய்ய அனுமதி பெற்றான். யோசேப்பும் நிக்கொதேமுவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரத்தை எடுத்து, "யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள். கைத்தறி மற்றும் நறுமணப் பொருட்களால் அதைக் கட்டினார்கள்" (யோவான் 19:39-40).
7) கல்லறையை கடன் கொடுத்தான்:
யோசேப்பு "தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப்போனான்" என மத்தேயு குறிப்பிடுகிறான் (மத்தேயு 27:60). இஸ்ரவேலில் உள்ள செல்வந்தர்கள் அநேகர், தங்களுக்கன்று பிரேதக்குழியை நியமித்திருந்தனர். அது ஏசாயா தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் (ஏசாயா 53:9) எனலாம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உடலைக் கையாள அரிமத்தியாவைச் சேர்ந்த யோசேப்புக்கு தேவன் ஒரு முக்கியமான பணி அல்லது பாக்கியத்தைக் கொடுத்தார். இந்த இரண்டு புகழ்பெற்ற மனிதர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால், கர்த்தராகிய இயேசு இறக்கவில்லை என்ற கோட்பாட்டை ஆலோசனைச் சங்கத்தினரால் அவர் கல்லறை அல்லது குகையின் குளிர்ச்சியில் மட்டுமே மயங்கி விழுந்தார் என்று சொல்ல (சமாளிக்க) முடியாது. தேவன் தம்முடைய குமாரனை அடக்கம் செய்ய யோசேப்பின் கல்லறையைத் தேர்ந்தெடுத்தார். ஆம், அவர் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார், ஆனால் ஒரு பணக்காரரின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார், ஆனால் மீண்டும் உயிர்ந்தெழுந்தார். நாம் அனைவரும் தேவ நோக்கம் மற்றும் அவரின் திட்டத்தில் கூர் ஆயுதங்களாக இருக்க முடியும்.
நான் யோசேப்பு போல அவருடைய பணிச் செய்ய காத்திருக்கிறேனா/ தயாராக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokaran