யோனா ஒரு கோபமான தீர்க்கதரிசி

ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று பொதுவாக ஒரு பேச்சு உண்டு. தேவ ஜனங்களும் கூட இது போன்ற பைத்தியக்காரத்தனமான செயலை செய்வதுண்டு.  துரதிர்ஷ்டவசமாக, யோனா தீர்க்கதரிசியும் தனக்குள் இருக்கும் பொல்லாத ஆதாமிய இயல்பை  பிரதிபலிக்கிறான். தயங்கி தயங்கி இருந்த யோனா, கடைசியாக நினிவே சென்றான்.  எதிர்பாராத விதமாக யோனாவால் நகரம் மனந்திரும்பி, அரசன் தொடங்கி ஜனங்கள் அனைவரும் தங்களைத் தாழ்த்தினர், மூன்று நாட்கள் உபவாசம் இருந்தனர்.  இருப்பினும், யோனா உற்சாகமோ மகிழ்ச்சியோ அடையவில்லை.  மாறாக, நினிவே நகரம் கவிழ்க்கப்படுவதைக் காண காத்துக்கொண்டு நகரத்திற்கு வெளியே உட்கார்ந்திருந்தான் (யோனா 4:5).

 தீர்க்கதரிசனம்:
 யோனாவைப் பொறுத்தவரை, அவனுடைய தீர்க்கதரிசன வார்த்தைகள் தேவ வாக்குறுதிகள், பண்புகள் மற்றும் கிரியை விட முக்கியமானவை.  அவன் நினிவேயில் பிரசங்கிக்க நியமிக்கப்பட்டான், மேலும் அழிவைப் பற்றி எச்சரித்ததால், நகரம் அழிக்கப்பட வேண்டும் என்பது அவன் எண்ணம்.  மனந்திரும்புபவர்களுக்கான தேவ வாக்குறுதிகள், தேவ அன்பு மற்றும் அவரது மீட்பின் செயல் ஆகியவை யோனாவை பொறுத்தமட்டில் எந்த அர்த்தத்தையும் கொண்டிருக்கவில்லை.

 நற்பெயர்:
தேவ மகிமை அல்லது அழிந்து போகும் ஆத்துமாக்களை விட யோனா தனது நற்பெயரைப் பற்றி அதிகம் அக்கறை கொண்டிருந்தான்.  ஒரு தீர்க்கதரிசியாக அவன் தீர்க்கதரிசனம் கூறியது நிறைவேற வேண்டும் அவ்வளவுதான், அதன் விளைவுகள் பற்றி எவ்வித அக்கறையும் இல்லை.   பாவிகளை மீட்பதன் மூலம் தேவன்  மகிமைப்படுத்தப்படுகிறார், ஆம், மனந்திரும்பாத பாவிகளைத் தண்டிப்பதன் மூலம் அல்லது தீர்ப்பை நிறைவேற்றுவதன் மூலம் அவர் மகிமைப்படுத்தப்படுகிறார்.  யோனா நியாயத்தீர்ப்பின் மூலம் வரும் மகிமையை புரிந்துகொண்டான், ஆனால் தேவ கிருபையின் மகிமையை புரிந்து கொள்ளவில்லை.

சுயநலத்தின் உச்சம்:
நீரோ மக்களின் துயரங்களைக் கண்டு மகிழ்ந்தான்.  நினிவேயில் சில கடுமையான அழிவையும் மரண அகோரங்களையும் காணக் காத்திருந்த யோனாவிலும் இதேபோன்ற ஒரு சுயநல மனநிலை தான் இருந்தது.

 அக்கறையின்மை:
 அவனுடைய அக்கறையின்மை பற்றி தேவன் அவனிடம் வினவினார்.  அதாவது செடியின் நிழலை அனுபவித்து மகிழ்ந்த அவன், பூச்சி அரித்தததால் செடி காய்ந்த போது மனமுடைந்தான்.  யோனா ஒரு தாவரத்தைப் பற்றி கவலைப்பட்டான் ஆனால் 120000 மக்கள் தொகையைப் பற்றி கவலைப்படவில்லை; அந்த ஜனங்களுக்கோ வலது கைக்கும் இடது கைக்குமே (நல்லது மற்றும் தீமை) வித்தியாசம் தெரியாது (யோனா 4:9-11).

 கோபம்:
 யோனாவுக்கு கோபம் வந்தது.  தான் இறக்கும் அளவுக்கு கோபமாக இருப்பதாக தேவனிடம் பதிலளித்தான்.  அவனிடம் எதிலும் எல்லாவற்றிலும் ஒரு கட்டுப்பாடற்ற, தேவையற்ற கோபம் இருந்தது.

சுயநலம்:
யோனா தேவனை சேவிப்பதற்குப் பதிலாகத் தன்னைச் தானே சேவித்துக் கொண்டிருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.  தேவனின் இறையாண்மைக்கும் அதிகாரத்திற்கும் அடிபணிய அவன் விரும்பவில்லை.

 நான் யோனாவைப் போல் கோபமாகவும், தேவ உணர்வற்ற நபராகவும், சுயநலவாதியாகவும் இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்  



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download