என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர்.. சங்கீதம் 71:21
மேன்மை என்பது உயர்வு, மதிப்பு, மேல் நோக்கி செல்லுதல், பிரமோஷன்,இந்த நிலையிலிருந்து அடுத்த உயர்ந்த நிலைக்கு செல்லுதல் என்று பல விதங்களில் மேன்மைக்குறித்து சொல்லலாம்..மேன்மை மகிழ்ச்சியை தரும்.
உங்கள் வாழ்க்கையில் மேன்மை இல்லாமல் இருக்கலாம்..மேன்மையை இழந்த நிலை காணப்படலாம்..உங்கள் குடும்பத்தில் மேன்மை உயர்வு ஆசீர்வாதத்தை காணாமல் இருக்கலாம்..
உங்களுக்கு ஆண்டவர் உயர்வை தந்து மேன்மைப்படுத்துவார்..குடும்ப எல்லையை பெருக்கி உங்களை மேன்மைப்படுத்துவார்...வேலையில், தொழிலில், படிப்பில் எல்லாவற்றிலும் மேன்மையை காண்பீர்கள்... இருக்கிற ஆசீர்வாதங்களை பெருகப்பண்ணுவார்..மேன்மை இழந்த நிலையில் நீங்க இருந்தாலும் ஆண்டவர் உங்களை தேற்றி உங்களை கனப்படுத்துவார்..மேன்மையை காண்பீர்கள்... உங்களை தேற்றி மேன்மைப்படுத்துகிற ஆண்டவரை நம்புங்கள்.
Author: Pr.Sampaul. M.Div., M.A., M.S.W.,