அனைத்து மனிதர்களும் சமம் ஆகவே கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று கடுமையாக ஒரு நாத்திகர் வாதிட்டார். அதற்கு பதிலளித்த ஒரு கிறிஸ்தவ நண்பர், “இத்தகைய சமத்துவத்திற்கான அடிப்படை என்ன? அனைவரும் சமமாக பிறந்தவர்களா?” என்று கேட்டவுடன் நாத்திக நண்பர் அதிர்ச்சியடைந்தார், ஆனால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, "இது ஒரு பொதுவான அறிவு" என்று கூறினார். அதற்கு பதிலளித்த கிறிஸ்தவ நண்பர், “இது‘ பொது அறிவு ’என்றால், உலகெங்கிலும், வரலாறு முழுவதிலும் ஏன் சமத்துவமின்மை உள்ளது?",என்றார். ஆம், பொது அறிவோ அல்லது கலாச்சார அறிவோ மனிதகுலத்திற்கு 'அனைவரும் சமம்" என்பதை அளித்திட முடியாது. ஆனால் படைப்பாளரான "தேவனால் மட்டுமே அதை வழங்கிட முடியும்”.
1) பொது அறிவு:
எல்லா மனிதர்களும் சமம் என்று பொது அறிவு கற்பித்தால், அடிமைத்தனம் என்பது உருவமைக்கப்பட்டது ஏன்? பண்டைய காலங்களில், தோற்கடிக்கப்பட்ட வீரர்களும் அந்த நாடும் வெற்றிப்பெற்ற தேசத்துக்கோ அல்லது அம்மக்களுக்கோ அடிமைகளாக மாறினர். பின்னர் அதற்கடுத்த காலக்கட்டங்களில் வெள்ளையினத்தினர் ஆப்பிரிக்கா மீதும் கறுப்பினத்தினர் மீதும் படையெடுத்து ‘கறுப்பின’ மக்களை அடிமைகளாக்கினர். அன்று நாம் அனைவரும் சமம், அடிமைத்தனம் என்பது அருவருப்பானது என பொது அறிவு அவர்களுக்கு கற்பிக்கவில்லையா அல்லது உணர்த்தவில்லையா?!
2) கலாச்சார உணர்வு:
இந்தியாவில், மக்களின் மனதில் பதிந்திருப்பது சாதி-அமைப்பு-வரிசைமுறை. அதில் தலையிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்றால் மேல் வர்க்கத்தினர் பிராமணர்களும் பின்னர் படிப்படியாக இறங்கி இறுதியில் தீண்டத்தகாதவர்கள் என்று தாழ்த்தப்பட்ட வகுப்பினரோடு முடிவடைகின்றது. நம் ‘கலாச்சார உணர்வு’ சமத்துவத்தையும் அன்பையும் கற்பிக்கவில்லையே, மாறாக பல்வேறு சாதியினரிடையே சமத்துவமின்மையும் வெறுப்பையுமே கற்பித்துள்ளதே. வித்தியாசமாகவும் வருத்தத்துடனும், சில கிறிஸ்தவர்கள் கூட கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களே ஒழிய, வேதத்தை அல்லவே.
3) படைப்பு வெளிப்படுத்துதல்:
ஆதாம் ஏவாள் என்ற ஒரே ஒரு ஜோடியை தான் தேவன் படைத்ததாக படைப்பின் வரலாறான ஆதியாகமம் தெளிவாகக் கூறுகிறது, இந்த ஜோடியிலிருந்துதான் எல்லா மனிதர்களும் தோன்றினார்கள். எனவே, எல்லா மனிதர்களும் சமம் என்று வேதாகம சத்தியம் வலுவான அடிப்படையை அளிக்கிறது.
4) கிறிஸ்துவின் மீட்பின் பணி:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எல்லா மனிதர்களுக்காகவமே மரித்தார், ஒருவர் கூட விடுபடவில்லை (II கொரிந்தியர் 5:15). பவுல் தெளிவாக கூறுகிறாரே: “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள் (கலாத்தியர் 3:28).
வேதாகமம், வேத வெளிப்பாடு, சத்தியமான நற்செய்தி இலலையென்றால், சமத்துவமும் கண்ணியமும் இந்த உலகத்திற்கு தெரியாமலே போயிருக்கும். மனித உரிமை புரட்சியாளர்கள், நாத்திகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க நினைப்பது கற்பனையில் தான் முடியுமேயன்றி அவர்களால் வெற்றிபெற முடியாது. நற்செய்தி மட்டுமே அனைத்து மனிதர்களுக்கும் சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவத்தை வழங்க முடியும்.
உலகில் உள்ள அனைத்து உன்னதமான ஒழுக்க விழுமியங்களுக்கும் வேதாகமம் தான் ஊக்கக்கருவி என்பதை நான் ஒப்புக்கொள்கிறேனா? என சிந்திப்போம், செயல்படுவோம்!
Author: Rev. Dr. J .N. மனோகரன்