மனிதனுடைய சொல்கராதியிலோ ஒரு வரையறுக்கப்பட்ட மனித மனத்தினாலோ தந்தை, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்ற திரித்துவத்தையோ அல்லது இறைமையையோ புரிந்து கொள்ள முடியாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு 'பரிபூரண நித்திய மனித அவதாரம்’ என வேதாகமம் தெளிவாகக் கற்பிக்கிறது. சாது சுந்தர் சிங் அவர்கள் இதற்கு ஒரு பரவளாவிய கற்பனையுடன் புரிந்துகொள்ள முயன்றார்; அது என்னவெனில் தேவன் தான் சூரியன் எனில், சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, உலகின் ஒளி; சூரிய கதிர்களிலிருந்து பெறப்படும் வெப்பம் அல்லது ஆற்றல் தான் பரிசுத்த ஆவியானவர். சூரியனிடமிருந்து கதிர்களையோ மற்றும் வெப்பத்தையோ பிரிக்க முடியாது அல்லது அவையெல்லாம் ஒன்றுதான், ஆக அதே போலதான் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர்.
சத்தியத்தில் தடுமாறும் பலர் உள்ளனர்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ‘தேவனுடைய குமாரன்’, அவர் திரித்துவத்தின் இரண்டாவது நபர். ஒரு போதகர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தேவனுடைய செல்ஃபி என்று கூறி அதை விளக்கினார். அது என்னவென்றால்; தேவன் ஆவியானவர், ஆதலால் அவரை பார்க்க முடியாது, ஆகவே தேவன் தன்னுடைய செல்ஃபியான இயேசு கிறிஸ்து மூலமாய் வெளிப்படுத்தியுள்ளார், என்று கூறினார். எபிரேய மொழியில், கரத்தராகிய இயேசு அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் என்று எபிரெயர் 1: 3 மற்றும் கொலோசெயர் 1:15 ல் பவுலும் விவரித்துள்ளார். இது பிரித்தறிய முடியாத, சரியான வெளிப்பாடுடைய, சாராம்சமான, முத்திரையுள்ள அல்லது ‘அவருடைய இயல்பான சரியான முத்திரை’ எனலாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விவரிக்க 'அவரையே மாதிரி' மற்றும் 'ஒன்று போலவே' என பயன்படுத்தும் வார்த்தைகள் சரியானவை அல்ல. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தனது கடிதங்களில் விவரிக்க பவுல் 'தேவனுடைய உருவம் மற்றும் தேவனுடைய சாயலாயிருக்கிற' என்ற சொற்களைப் பயன்படுத்துகிறார் (II கொரிந்தியர் 4: 4; கொலோசெயர் 2: 6).
நிசேயா விசுவாசப் பிரமாணம் இந்த சத்தியத்தை எப்படி குறிப்பிடுகிறதென்றால்; 'வானத்தையும் பூமியையும் காணப்படுகிறதும் காணப்படாததுமான எல்லாவற்றையும் படைத்தவராயிருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய ஒரே தேவனை விசுவாசிக்கிறேன். ஒரே கர்த்தருமாய், தேவனுடைய ஒரே பேறான குமாரனுமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்; அவர் சகல உலகங்களும் உண்டாவதற்கு முன்னே தமது பிதாவினாலே ஜெனிப்பிக்கப்பட்டவர்; தெய்வத்தில் தெய்வமானவர், ஜோதியில் ஜோதியானவர், மெய்த்தேவனில் மெய்த்தேவனானவர், உண்டாக்கப்படாமல் ஜெனிப்பிக்கப்பட்டவர், பிதாவோடே ஒரே தன்மையுடையவர், சகலத்தையும் உண்டாக்கினவர்; மனிதராகிய நமக்காகவும் நமக்கு இரட்சிப்பு உண்டாகவும் பரமண்டலத்திலிருந்து இறங்கி, பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் அவதரித்து மனிதனானார்; நமக்காக பொந்தியுபிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு, அடக்கம் பண்ணப்பட்டார்; வேத வாக்கியங்களின் படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்; பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்; உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க மகிமையோடே திரும்ப வருவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவில்லை'.
இயேசு கிறிஸ்துவைப் பற்றிய மக்களுடைய அணுகுமுறை என்னவெனில் அவர் ஒரு நபரின் நித்தியத்தை தீர்மானிக்கும் ஒரு ‘மூலைக் கல்’ (மத்தேயு 21: 42). “இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான், இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்" (மத்தேயு 21:44). ஆம், கர்த்தராகிய இயேசுவுக்கு எதிராக அவநம்பிக்கையுடன் போராடுவது எந்தவொரு நபரையும் சிதைத்துவிடும், தொடர்ச்சியான கிளர்ச்சி அணுகுமுறை தேவனுடைய நியாயத்தீர்ப்பில் முடிவடையும், அது விசுவாசம் இல்லாத எவரையும் நசுக்கும்.
இரட்சிப்பின் பாறையான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நான் விசுவாசிக்கிறேனா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்