வேதாகமத்தை சுமந்து செல்வது அவ்வளவு கடினமா?

மிகப்பெரிய சபை, பார்ப்பதற்கு அது ஒரு ஆடிட்டோரியம் போல காணப்படும். சபையின் விசுவாசிகள் திரும்பி அவரைப் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு பாதையில் போதகர் மேடைக்கு வருகிறார். அவர் கூடவே துப்பாக்கி ஏந்திய மெய்க்காவலர்களுடன், அவர் மேடையை நோக்கிச் செல்கிறார், அதே சமயம் மரியாதையுடன் ஒரு வேதாகமத்தை ஏந்தியபடி ஒரு மனிதர் பின்தொடர்கிறார்.  போதகர் அமர்ந்திருக்கும்போது, ​​அந்த மனிதர் பிரசங்க மேடையில் வேதாகமத்தை வைக்கிறார்.  பின்னர் அந்த மனிதர் ஒரு பிரத்யேகமான இடத்தில் அமர்ந்தார். ஆராதனை முடிந்ததும் அதே சடங்குமுறை மீண்டும் தொடர்கிறது. வேதாகமத்தை சுமந்து வந்த அந்த நபர் மீண்டும் வேதாகமத்தை எடுத்துக் கொண்டு முதலில் வெளியேறுகிறார், அதைத் தொடர்ந்து போதகர் தனது பாதுகாப்பு துணையுடன் செல்கிறார்.  இதைப்பற்றி விசாரித்த போது, அப்போதகரின் உதவியாளர் இப்படியாக விளக்கினார்; "நாசரேத்தில் உள்ள ஜெப ஆலயத்தில் ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம்  கொடுக்கப்பட்டது (லூக்கா 4:17), அவர் வாசித்தார். அதுபோலவே, எங்கள் போதகரும் வேதாகமத்தை திரும்ப கொடுத்து விட்டார்; கையில் எடுத்துச் செல்லவில்லை" என்றார்.

வரலாற்று சூழல்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்தில் யூத ஜெப ஆலயம், பழைய ஏற்பாட்டின் சுருள்கள் சேமிக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியை ஒத்த வடிவத்தைக் கொண்டிருந்தது.  அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆம் நூற்றாண்டில்தான் அச்சிடப்பட்ட வேதாகமங்கள் கிடைத்தன.  அதுவரை வேதாகம புத்தகங்கள் சுருள்கள், காகிதத்தோல் மற்றும் ஆவணம் என கை நகல்களாக இருந்தன.  இத்தகைய பிரதிகள் ஜெப ஆலயங்களிலும், எருசலேம் ஆலயத்திலும், பணக்காரர்களுக்கும் மட்டுமே கிடைத்தன.  கர்த்தராகிய இயேசு வாசிக்க எழுந்தபோது, ​​அந்தச் சுருள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மனநிலை:
இத்தகைய நடத்தை படிநிலை மனநிலையை அம்பலப்படுத்துகிறது.  இது சிலரை உயர்ந்தவர்களாகவும் மற்றவர்களை தாழ்ந்தவர்களாகவும் நடத்துவதாகும்.  உயர் பதவியில் இருப்பவர்கள் சில வேலைகளைச் செய்வது தங்களின் கண்ணியத்திற்குக் கீழே இருப்பதாக நினைக்கிறார்கள்.  இத்தகைய வேலைகள் இழிவானதாகக் கருதப்படுகின்றன மற்றும் அடிமைகள் அல்லது வேலைக்காரர்கள் அல்லது கீழ் சாதியினர் மட்டுமே செய்ய வேண்டும்.

வெளிவளம்பெறல் (Outsource):
கடினமான பணிகளை மற்றவர்களுக்குக் கொடுத்து, பலன்கள் அல்லது முடிக்கப்பட்ட தயாரிப்புகளை பெறுவது அவுட்சோர்சிங் (வெளித் தரப்பிடமிருந்து தருவித்தல்) எனப்படும்.  வீட்டில் சமைப்பது சிரமமாக இருக்கும்போது, ​​உணவுகளை வெளியே உணவகங்களில் இருந்து வரவழைக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பல ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் அவுட்சோர்சிங் செய்ய முடியும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், தனிப்பட்ட முறையில் உபவாசமோ ஜெபமோ செய்யாத ஒரு தொலைக்காட்சி சுவிசேஷகருக்கு ஜெபக் கோரிக்கைகளை அனுப்புவது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

ஆவிக்குரியக் காரியங்களை அவுட்சோர்ஸ் செய்ய முடியாது என்பதை நான் உணர்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download