பரலோகம் என் இலக்கா?

கணவன் மனைவி பிள்ளைகள் என ஒரு குடும்பத்தினர், கனடா-அமெரிக்கா எல்லையைக் கடக்க முயன்று, பனிப் புயலில் சிக்கி, உறைந்து இறந்தனர் (இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜனவரி 23, 2022). அவர்களின் கனவு தேசத்திற்கு அருகில் இருந்தனர், ஆனால் அவர்கள் விரும்பிய இலக்கை அடைய முடியவில்லை. இது போல கனவுலகைக் கடக்க முயன்று கடலில் மூழ்கி அழிந்தவர்கள் பலர். சிலர் எல்லைகளைத் தாண்டி கண்டெய்னர்களில் கடத்தப்படுகின்றனர். அதுமாத்திரமல்ல, தாங்கள் பிறந்த இடங்களிலேயே துன்பப்படுபவர்கள் ஏராளம். சில நேரங்களில், வாழ்க்கைத் தரத்தில் அதிருப்தி அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலைமை மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான நல்விருப்பங்களை அடைய முடியாத நிலைமை என பல சூழல் காணப்படுகிறது. சொர்க்கமாக கருதப்படும் அந்த நாடுகளை அடைய, இந்த மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். சட்டப்பூர்வமாக இடம்பெயர்ந்த மற்றவர்களும் உள்ளனர், ஆனால் அவர்கள் நரகம் என எதை நிராகரித்தார்களோ அதன் மற்றொரு வடிவமாக உணரப்பட்ட சொர்க்கத்தையேக் காண்கிறார்கள்.

கற்பனைகள்:
பரலோகத்தைப் பற்றி மக்களுக்கு கனவுகள் அல்லது கற்பனைகள் இருக்கும். சிறந்த தெரிவுகளையும் வசதிகளையும் தேடுவது மனித இயல்பு. பரலோகம் என்பது கண்ணீர், நோய், மரணம், துக்கம், வலி இல்லாத இடம்; மற்றும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் அன்பு நிறைந்துள்ளது. நிஜமாகவே பூமி பரலோகம் (சொர்க்கமாக) போலவா இருக்கிறதா?

நொறுங்கிய கனவுகள்:
எலிமெலேக்கும், அவனுடைய மனைவி நகோமியும், மகன்களான மக்லோனும், கிலியோனும் இஸ்ரவேலின் பஞ்சத்திலிருந்து தப்பிக்க மோவாப்பிற்கு குடிபெயர்ந்தனர். நகோமியைத் தவிர அனைவரும், தாங்கள் சிறந்தது என்று கண்ட தேசத்தில் இறந்தனர் (ரூத் 1:1-2). லோத் சோதோம் மற்றும் கொமோராவின் பசுமையான மேய்ச்சல் நிலங்களுக்கு குடிபெயர்ந்தான், ஆனால் அது பேரழிவில் முடிந்தது.

வாழும் கனவுகள்:
பரலோகமும், வாக்களிக்கப்பட்ட நகரமான, புதிய எருசலேம் நோக்கி தேவ பிள்ளைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். "இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்" (எபிரெயர் 11:13). சீஷர்களைப் பொறுத்தவரை, பரலோகம் என்பது தேவனால் ஆயத்தம் செய்யப்பட்ட ஒரு இடம், என்றென்றும் உறுதியளிக்கப்பட்ட இடம் (யோவான் 14:1). "அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே" (எபிரெயர் 11:16). 

விசுவாசப் பயணம்:
ஜான் பனியனின் மோட்ச பயணத்தைப் போலவே, கிறிஸ்தவ வாழ்க்கையும் நித்திய நகரமான பரலோகத்தை நோக்கிய விசுவாசப் பயணமாகும். இது கல்வாரி சிலுவையில் தொடங்குகிறது. ஒரு நபர் தான் ஒரு பாவி என்பதை உணர்ந்து, மனந்திரும்பி, கர்த்தராகிய இயேசுவை இரட்சகராகப் பெறும்போது, பாவங்கள் மன்னிக்கப்பட்டு, பரலோகத்தில் இடம் பெறுவது உறுதி.

பரலோகத்தை நோக்கிய என் பயணத்தில் என் ஆரம்பம் சிலுவையில் இருந்து உள்ளதா? சிந்திப்போமா. 

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download