ஆதாம் மற்றும் ஏவாளின் IQ

அறிதிறன் ஈவு (IQ) என்பது மனித நுண்ணறிவை மதிப்பிடும் மதிப்பெண்ணாக வரையறுக்கப்படுகிறது.  இதை முதலில் ஜெர்மனியின் வில்லியம் ஸ்டெர்ன் என்ற உளவியலாளர் செய்தார்.  மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு IQ புள்ளிகளான 85 ஐயும் மற்றவர்கள் 115யும் கொண்டுள்ளனர் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது;  2.5 சதவீதம் பேருக்கு மட்டுமே 130 புள்ளிகள் இருக்கின்றது, அப்படிப்பட்டவர்கள்  கல்வி அல்லது அறிவியலில் சிறந்து விளங்குகின்றனர். அதுபோல, 2.5 சதவீதம் பேர் 70 புள்ளிகளுக்கு கீழே இருக்கிறவர்கள், அவர்கள் மனவளர்ச்சி குன்றியவர்களாக காணப்படுகின்றனர்.  நம் மூதாதையரான ஆதாமிற்கும் ஏவாளுக்கும் அறிவுத்திறன் ஈவு என்னவாக இருந்திருக்கும்?

மனிதர்கள் தங்கள் மூளைத் திறனில் 10 சதவிகிதத்தை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று நம்பப்படுகிறது.  சராசரி மனிதனின் IQ 100 ஆக இருந்தால், ஆதாம் IQ 1000 அல்லது 1500 ஆக இருந்திருக்கலாம்.  ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, ​​அது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பாதித்தது.  ஆவிக்குரிய ரீதியில், அவர்கள் தேவனுடனான உறவை இழந்தனர்;  உணர்வுபூர்வமாக அவர்கள் பயந்தனர், அச்சமடைந்தனர் மற்றும் குற்றவாளிகளாக உணர்ந்தனர். மரணத்தை தழுவுமளவு நலிந்தனர்,  அவர்களுக்கான உறவு முறையில் சுயம் (ஈகோ மோதல்) வெளிப்பட்டது, பொருளாதார ரீதியாக, அவர்கள் தங்கள் வீட்டை இழந்தனர்;  பூமி சபிக்கப்பட்டது மற்றும் அறிவுபூர்வமாக அவர்கள் IQ திறனையும் இழந்தனர்.

அனைத்து விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பெயர் வைக்குமளவு ஆதாமுக்கு வியக்கத்தக்க அறிவுத்திறன் இருந்தது (ஆதியாகமம் 2:20).  ரிச்சர்ட் பிளாக், பிபிசியின் சுற்றுச்சூழல் நிருபர் கூறுகையில், உலகில் 8.7 மில்லியன்  இனங்கள் இருக்கும் என்கிறார்.  அதாவது ஆதாம் பல இனங்களை அடையாளம் காணவும், வகைப்படுத்தவும், விவரிக்கவும் மற்றும் பெயரிடவும் முடியும்.  அதிலும் சுவாரஸ்யம் என்னவெனில், அவர்களுக்கு அனைத்தையும் நினைவில் வைத்திருக்குமளவு நல்ல நினைவாற்றலும் இருந்தது.  காகிதத்திலோ டிஜிட்டல் சாதனத்திலோ எழுதப்பட வேண்டியதோ அல்லது புகைப்படங்களோ குறிப்புகளோ என இல்லை.

சாத்தான் மனிதர்களின் மனதைக் குருடாக்கிவிட்டான் (2 கொரிந்தியர் 4:4).  எனவே, குறைந்த அறிவுத்திறன் கொண்ட மனிதர்கள் தங்களுக்கும் பூமிக்கும் ஞானமான உக்கிராணக்காரர்களாக இருக்க முடியாது.  மனிதர்கள் இரண்டு வழிகளில் மட்டுமே முன்னேற முடியும்:  கூட்டு முயற்சி மற்றும் திரட்டப்பட்ட (ஒருங்கிணைத்தல்) முயற்சி.  பத்து பேர் சேர்ந்து வேலை செய்தால் ஆதாமின் புத்திசாலித்தனத்தைப் பெறலாம்.  ஒருங்கிணைத்த முயற்சியின் அறிவு என்பது அறிவியல் முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் நடக்கிறது.  பாபேல் கோபுரத்தின் கட்டிடத்தில், கட்டிடக்கலை அதிசயங்களை உருவாக்கக்கூடிய ஒரு கூட்டு முயற்சி இருந்தது (ஆதியாகமம் 11).

சாலொமோன் 3000 நீதிமொழிகள், 1005 சங்கீதங்கள் எழுதினார், மரங்கள், கொடிகள், மிருகங்கள், பறவைகள், ஊர்வன மற்றும் மீன்கள் பற்றிய அறிவாற்றல் கொண்ட உயர் IQ ஐக் கொண்டவர் (1 இராஜாக்கள் 4:32-33).  ஆனால் விசுவாச பயணத்திற்கு IQ மட்டும் போதாது என்பதால் அவர் தோல்வியடைந்தார்;  தேவையானது ஆவிக்குரிய அறிவல்லவா!

தேவனை அறிகிற அறிவு எனது IQவை மேம்படுத்தும் ஆவிக்குரிய ஞானம் என்பதை நான் உணர்கிறேனா?

Author: Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download