பல்வேறு காரணங்களுக்காக ‘அடிமை வணிகம்' செழித்தது. ஐரோப்பிய நாடுகளின் போக்குவரத்து கப்பல்கள் வர்த்தக வழிகளை நன்கு அறிந்திருப்பதாலும், அதை கட்டுப்படுத்தமளவு அதன் ஆளுகையும் ஓங்கி இருந்தது. மேலும் அதிகப்படியான பேராசை காரணமாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மிக மோசமான அல்லது கடினமான சூழ்நிலைகளிலும் வேலை செய்ய ஆப்பிரிக்காவிலிருந்து ஜனங்களை அடிமைகளாக (கட்டாயமாகவும் பணத்திற்காகவும்) வாங்கத் தூண்டியது. உலகின் பிற பகுதிகளிலிருந்து வரும் பொருட்களைக் குறித்த ஆப்பிரிக்க உயரடுக்கினரின் பேராசை, தங்கள் சொந்த நாட்டு மக்களை அடிமைகளாக விற்கத் தூண்டியது.
மனித மாண்புகளும் மனிதநேய விழுமியங்களும் இதன் மூலம் அழிக்கப்பட்டன எனலாம். எகிப்திலிருந்து அடிமைகளை (இஸ்ரவேல் ஜனங்கள்) மீட்பதன் மூலம் தேவன் மனிதர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற தனது நோக்கத்தை வெளிப்படுத்தினார். வேதாகமத்தால் ஈர்க்கப்பட்ட வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் போன்றோர் இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களுக்கு எதிராக தங்கள் குரல்களை எழுப்பி தேசங்கள் மற்றும் உலகத்தின் சார்பான மனசாட்சியாக இருந்தனர். அவர் அடிமை வணிகம் மற்றும் அடிமைத்தனத்திற்கு எதிராக பேசினார். பின்பதாக சபை தலைவர்களால் ஊக்குவிக்கப்பட்ட வில்பர்ஃபோர்ஸ் அடிமை ஒழிப்புக் கோட்பாடு என்ற இயக்கத்தை வழிநடத்தினார், இதன் விளைவாக இந்த அடிமை வர்த்தகம் ஒழிந்தது. 1807ல் அடிமை வணிகம் ஒழிக்கப்பட்டது, 1833ல் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது. 1863 இல் உள்நாட்டுப் போருக்குப் பிறகு அமெரிக்காவில் அடிமைத்தனம் முற்றிலுமாக முடிவுக்கு வந்தது.
தேவ பயம் கொண்ட சமூகம் அவர்களின் வரலாற்று மற்றும் சமூக தவறுகளையும் மனிதகுலத்திற்கு எதிரான பாவங்களையும் ஒப்புக்கொள்கிறது. "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்" (நீதிமொழிகள் 28:13). இரு தேசத்தாரும் தேவனின் பார்வையில் நீதியானதைச் செய்தார்கள். பிரிட்டனுக்கு அது ‘பொருளாதார தற்கொலை’, அதாவது பெரும் வியாபாரங்களை முடக்குவதை பொருளாதார தற்கொலை” என்பர். அமெரிக்காவைப் பொறுத்தவரை இது ஒரு உள்நாட்டுப் போர்.
சர்வதேச அடிமை அருங்காட்சியகம், ஆப்பிரிக்கர்களுக்கு எதிராக நடந்த அனைத்து அட்டூழியங்களையும் படங்களாக, வீடியோக்களாக, கலை வடிவங்களாக சித்தரிக்கிறது. புகைப்படங்கள் மற்றும் பெயர்களின் பட்டியல் முழு வரலாற்றையும் சொல்கிறது. இந்த அருங்காட்சியகம் 'இருண்ட கடந்த காலத்தை' அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், சமூகத்தை சரியான திசையில் செல்ல ஊக்குவிக்கிறது. இதுபோன்ற வரலாற்று பாடங்களை இளைய தலைமுறையினர் கற்க வேண்டும், நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும். பல இளைஞர்கள் இப்படிப்பட்ட கசப்பான உண்மையைக் கற்றுக்கொள்வதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, இதன்மூலம் ஒருவேளை இதுபோன்ற மனிதாபிமானமற்ற பாவங்களை சமூகத்தில் அனுமதிக்கக்கூடாது என்று இளைஞர்கள் தீர்மானித்திருக்கலாம்.
ஒரு முதிர்ந்த நாகரீகம் என்பது வெளிப்படையாக அறிக்கையிடுவதின் மூலம் முன்னேறுகிறது, கடந்த காலத்தை நியாயப்படுத்துவதன் மூலமோ அல்லது மூடி மறைப்பதன் மூலமோ அல்ல. ஆக சமூக தீமைக்கும் அநீதிக்கும் எதிரான தீர்க்கதரிசனக் குரல் திருச்சபை என்பதை மறவாதிருப்போம்.
நான் எனது சமூகத்தின்/தேசத்தின் மனசாட்சிக்கான காவலனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்