உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.சங்கீதம் 37:18
உத்தமம் என்பது எல்லாவற்றிலும் சரியாக செய்தல்.இருதயத்தின் சிந்தை எண்ணம் உத்தமமாக இருக்கவேண்டும்..ஆண்டவருக்கு பிரியமானதை செய்வதுதான் உத்தமம்.
நீங்க உத்தமமாக இருக்கிற ஒவ்வொரு நிமிடத்தையும் நாட்களையும் கர்த்தர் அறிந்து இருக்கிறார்..உங்க சோதனை நாட்களில் உங்க உத்தமத்தை ஆண்டவர் அறிந்து இருக்கிறார்..உங்க இருதயத்தின் எண்ணம் உத்தமமாக இருக்கட்டும்..
நீங்க யாருக்கும் உத்தமம் இல்லாத காரியங்களை செய்யாதீங்க..அதையும் ஆண்டவர் அறிந்து இருக்கிறார்..உங்க செயல் உத்தமமாக இருக்கட்டும்..ஆண்டவருக்கு பிரியமான உத்தமானதை நீங்க செய்யும் போது உங்க சந்ததி என்றென்றும் இருக்கும்..
நீங்க உழைப்பது சம்பாதிப்பது எல்லாமே சந்ததிகள் கஷ்டமில்லாமல் வாழ வேண்டும் என்பதற்காக... நீங்க உத்தமமாக எல்லாவற்றையும் செய்யும் சாபம் உங்க சந்ததிகளை தொடாது..உங்க சந்ததிகள் வாழ்ந்திருப்பதை காண்பீர்கள்..ஆண்டவர் காண்கிறார் என்ற பயத்தோடு வாழுவோம்..ஆண்டவரை நம்புங்கள்..!!
ஜெபம்:
ஆண்டவரே, என் கோபத்தால் நான் என் உத்தமத்தை இழந்துவிடக்கூடாது.யாருக்கும் தீங்கு செய்ய கூடாது.என் சந்ததிக்கு நான் பணத்தையும் சொத்துக்களையும் சம்பாதித்து வைக்கிறனோ இல்லையோ யாருடையது சாபத்தையும் நான் சேர்க்கக்காதபடிக்கு என்னை பாதுகாத்து என் உத்தமத்தை காத்துக்கொள்ள இரக்கம் செய்யும்..ஒவ்வொரு நிமிடமும் நீர் விரும்புகிற உத்தமம் என் வாழ்வில் தாரும்..உமக்கு பிரியமாக நடந்து என் சந்ததிகளுக்கு ஆசீர்வாதங்களை சேர்க்க இரக்கம் செய்யும்.என்.சந்ததி என்றென்றைக்கும் இருக்கட்டும்..நன்றி இயேசுவே..ஆமென்.!!!
Pr.Mrs.Kirubai Anthony