உணர்வற்ற நிலை

உலகளாவிய ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியமர்த்துபவர் ஒருவர், அந்த நிறுவனத்தில் பணிபுரிய ஒருவரை நேர்காணல் செய்து கொண்டிருந்தார்.  நேர்காணல் தொடர்பான கோப்பையை புதுப்பிக்க விரும்பியபோது, ​​​​நிறுவனத்தின் இணையதளத்தை அடைய முடியவில்லை என்பதை உணர்ந்தார்.  இதற்கிடையில், அவர் இனி அந்த நிறுவனத்தில் பணியாளராக இல்லை என்று நிறுவனத்தில் இருந்து அவருக்கு செய்தி வந்தது (28, ஜனவரி 2023 என்டிடிவி செய்திகள்). அச்செய்தி இடி விழுந்தது போல் இருந்தது: மிகப்பெரிய அதிர்ச்சி, நம்பமுடியா விட்டாலும் அது தான் உண்மை.  சிம்சோனும் தேவனுடைய ஆவி அவனை விட்டு வெளியேறியதை அறியாமல், தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முயன்றான் (நியாயாதிபதிகள் 16:20-21).

சூப்பர் ஹீரோ:
சிம்சோன், அவன் பிறப்பதற்கு முன்பே தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டான், அவனை நசரேயனாக வளர்க்கும்படி அவனது பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது.  அமானுஷ்யமான உடல் வலிமையுடன் வலிமைமிக்க இளைஞனாக வளர்ந்தான்.  அவனது சாதனைகள் மனித கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தோமேயானால் கற்பனை செய்ய முடியாதவை. ஆம், சிம்சோனால் பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடேகூடப் பெயர்த்து, தன் தோளின்மேல் வைத்து,  மலையின் உச்சிக்குச் சுமந்துச் செல்ல முடியும் (நியாயாதிபதிகள் 16:3). வலுவான நாண்கள் நெருப்பால் தொடப்பட்டால் உடைந்துவிடும்; அதுபோல இஸ்ரவேல் ஜனங்களைப் பாதுகாக்க தேவன் அவனைப் பயன்படுத்தினார்.

முட்டாள் ஹீரோ:
இப்படிப்பட்ட பலசாலியான இந்த ஆண்மகனுக்கு பெண்கள் விஷயத்தில் ஒரு பலவீனம் இருந்தது. எந்த மனிதனும் பலவீனத்திலிருந்து விடுபட்டவன் அல்லவே.  முதலில், அவன் நசரேய உடன்படிக்கையை முறித்தான்.  இரண்டாவதாக, அவன் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து அப்பாற்பட்டு வெளியே இரண்டு முறை திருமணம் செய்து கொள்கிறான்.  மூன்றாவதாக, அவன் ஒரு விபச்சாரியிடம் செல்கிறான்.  நான்காவதாக, அவன் தனது பலத்தின் ரகசியத்தை தெலீலாவிடம் வெளிப்படுத்துகிறான்.  ஐந்தாவதாக, அவன் தனது புனிதமான அழைப்பை மறந்துவிட்டான்.

போராடும் ஹீரோ:
அவன் சரீர ரீதியாக வலுவாக இருந்தான், ஆனால் ஆவிக்குரிய ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பலவீனமாக இருந்தான்.  இவனிடம் இருக்கும் ரகசியத்தை அறிந்து அதை எதிரிகளிடம் சொல்ல தெலீலாள் முயற்சி செய்கிறாள் என்பதை அவன் அறிந்திருந்தும், தன் ஆபத்தில் அந்த ரகசியத்தை உடைத்தான்.

ஐயோ பாவமான ஹீரோ:
 தேவனுடைய ஆவி தன்னை விட்டுப் பிரிந்ததை அவன் உணரவில்லை.  தனது சொந்த பலத்தில் எதிரிகளை வெல்ல முயன்றான் ஆனால் கைது செய்யப்பட்டான்.  கடைசியில், இஸ்ரவேலின் நியாயாதிபதியாக இருந்த அவன் எதிரிகளுக்கு கேலிக்கூத்தானான்.

தற்கொலை செய்த ஹீரோ:
ஒரு பெரிய ஆளுமை, அவமானப்படுத்தப்பட்டு, தன்னை துன்புறுத்தியவர்களுடன் சேர்ந்து இறக்க, இரக்கத்திற்காக தேவனிடம் ஜெபித்தான். அந்த ஜெபத்தை தேவன் கேட்டார். "சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன் வலதுகையினாலும், மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு, என் ஜீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்" (நியாயாதிபதிகள் 16:29‭-‬30).  

 நான் எப்போதும் அவர் பிரசன்னத்தில் இருக்க கவனமாக இருக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்

 



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download