தாழ்வு மனப்பான்மை என்பது ஒரு நபரின் அன்றாட வாழ்வில் போதுமான அளவு அல்லது பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகளால் வகைப்படுத்தப்படுகிறது, ஏனெனில் அந்த நபர் உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ அல்லது ஆன்மீக ரீதியாகவோ அல்லது நிதி ரீதியாகவோ மற்றவர்களை விட தாழ்ந்தவர் என்ற நம்பிக்கையின் காரணமாக தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டிருக்கலாம், ஆனால் அத்தகைய நம்பிக்கை உண்மையின் அடிப்படையிலானதாக அல்லது கற்பனையின் அடிப்படையிலானதாக இருக்கலாம். சில நேரங்களில் இப்படிப்பட்ட தாழ்வு மனப்பான்மையுள்ள நபர்கள் மூலம் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நாடுகள் என ஆபத்தான விளைவுகளைக் கண்டுள்ளது. சவுல் தாழ்வு மனப்பான்மைக்கு பலியான நபரில் ஒரு சிறந்த உதாரணம், அது அவரது வாழ்க்கையையும், அவரது குடும்பத்தையும், இஸ்ரவேல் தேசத்தையும் அழித்துவிட்டது. சவுலின் அறிக்கை அவரது பரிதாபகரமான தாழ்வு மனப்பான்மையை நமக்கு காட்டுகிறது (1 சாமுவேல் 22:8).
பொறாமை:
சவுல் ராஜா தேவ அழைப்பிலும், இஸ்ரவேலின் முதல் ராஜாவாக அவனுடைய பதவியிலும் நிம்மதியாக இல்லை. கோலியாத்தை ஒன்றுக்கு ஒன்று போரில் தோற்கடித்த ஒரு இளைஞனின் சாதனையால் அவன் பயம் கொண்டான். தாவீதின் வெற்றியை பெண்கள் கொண்டாடியபோது, சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று வேற பாடினார்கள், அது இன்னும் சவுலுக்கு பதட்டத்தைக் கொடுத்திருக்கும், மனச்சோர்வடைய செய்திருக்கும் (1 சாமுவேல் 18:7).
சதி:
தாவீது என்ற ஒரு வாலிபனை ஒரு பயங்கரவாதி போல் கருதி பின்தொடர தனது இராணுவத்தையே திரட்டினான். ஆசாரியர்கள் வாழ்ந்த நோப் நகரில், தாவீது ஏன் அங்கு வந்தான் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், நீங்கள் எல்லாரும் எனக்கு எதிராகச் சதி செய்தீர்கள் என்று ஆசாரியர்களை சவுல் குற்றம் சாட்டினான். பதட்டம் கொண்ட நபர் தன்னை அறியாதவர்கள் மட்டுமல்ல, இயற்கை உட்பட அனைவரும் தனக்கு எதிரானவர்கள் என்று நினைக்கிறார்கள். பின்னர் சவுல் எண்பத்தைந்து ஆசாரியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நோபில் கொன்றுவிடுகிறான் (1 சாமுவேல் 22:18-19).
இரகசியங்கள்:
தன் மகன் யோனத்தான் தாவீதுடன் உடன்படிக்கை செய்ததாகவும், அது வேண்டுமென்றே அவனிடமிருந்து மறைக்கப்பட்டதாகவும் சவுல் கூறினான். இது ஒரு தனிப்பட்ட ஒப்பந்தமாக இருக்கலாம், அது யாருக்கும் தெரியாது. ஆனாலும் சவுல் தனக்கு யாரும் விசுவாசமாக இல்லை என்று குற்றம் சாட்டுகிறான்.
விசுவாசம்:
தன் செயல்கள் அநியாயமோ அல்லது நீதியற்ற செயல்களோ தன் மகன் யோனத்தான் தன் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று சவுல் எதிர்பார்த்தான். இருப்பினும், யோனத்தான் உண்மையின் பக்கம் நின்றான். இது விசுவாசமின்மை என்று சவுல் நினைத்தான். பல கலாச்சாரங்களில், உண்மை குருட்டுத்தனமானதாகவும் அல்லது சத்தியம் அல்லது விசுவாசம் கருத்தில் கொள்ளாததாகவும் அல்லது பாராட்டப்படாததாகவும் இருக்கின்றது.
வருத்தம் தெரிவிப்பார் இல்லை:
சவுல் தன் துயரத்திற்கு யாரும் இரங்கவில்லை என்று உணர்ந்தான்.
கிறிஸ்துவிற்குள் திடமாக இல்லாதவர்கள் / பாதுகாப்பை உணராதவர்கள் தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்படுவார்கள்.
நான் கிறிஸ்து இயேசுவிற்குள் பாதுகாப்பை இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்