வல்லமையற்ற தேவபக்தி

தேவபக்தியுள்ளவர்கள் போலவும் ஆவிக்குரியவர்கள் போலவும் பாசாங்கு செய்யும் ஆனால் பரிசுத்தம், நன்மை மற்றும் ஆசீர்வாதங்களின் வல்லமையைக் காட்டாத மக்களைப் பற்றி பவுல் கூறுகிறார் (2 தீமோத்தேயு 3:5). அவர்கள் கள்ளப் போதகர்களாகவும், கள்ள தீர்க்கதரிசிகளாகவும், போலியான மேசியாவாகவும், போலியான மதத் தலைவர்களாகவும் இருக்கலாம்.  இன்று, தீமோத்தேயுவிடம் பவுல் விவரித்தபடியே மக்களின் விவரம் தெரிகிறது.

1) குணாதிசயம்:
இந்த மக்கள் சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்கள் மற்றும் சிற்றின்ப நாட்டங்களிலும் ஈடுபடுகிறார்கள்.  அவர்கள் பரிசுத்தமற்றவர்கள், தேவனின் பரிசுத்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை.  அவர்கள் தங்கள் ஆசைகள் அல்லது கோரிக்கைகளில் பிடிவாதமாக இருப்பதால், அவர்கள் தணியா தாகத்தோடு காணப்படுவார்கள். எதிலும் திருப்தியடையவதுமில்லை, போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் என்பதை அவர்கள் அறிவதில்லை (1 தீமோத்தேயு 6:6).

2) அணுகுமுறை:
ஜீவனுள்ள தேவனின் உண்மையான உறவு இல்லாமல், தங்களை ஆவிக்குரியவர்களாக காட்டிக் கொள்ளும் மக்களின் மனப்பான்மை பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது; பெருமை, கர்வம், அகங்காரம், அலட்சியப்போக்கு என்பனவாம். மேட்டிமை எண்ணம் கொண்டவர்களாலும், சுயத்தை முடுக்கிவிட்டு தங்கள் முடிவுகளில் திமிர்த்தனத்தை காண்பிக்கிறவர்களாகவும் காணப்படுகிறார்கள். இன்னும் சிலர் பாகுபாடு காட்டப்படுகிறார்கள், ஒதுக்கப்படுகிறார்கள், கேலி செய்யப்படுகின்றனர் மற்றும் ஒடுக்கப்படுகிறார்கள்.

3) உறவுகள்:
மற்றவர்களுடனான அவர்களின் உறவு தவறானது.  குடும்ப உறவுகளில் கூட துஷ்பிரயோகம். அவர்கள் தேவனுக்கோ அல்லது பிறருக்கோ நன்றியோடு இருப்பதில்லை. மரபுகள் அல்லது தேவையற்ற வைராக்கியத்தால் அவர்கள் கண்மூடித்தனமாக இருப்பதால் இயல்பான பாசம் இல்லை.  அவதூறாகப் பேசி, மற்றவர்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகிறார்கள். கொடுமைகளில் ஈடுபடுவது அவர்களின் பழக்கம்.  அதனால் உலகம் முழுவதும் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது.  அவர்களின் வணிக உறவுகளில் ஏமாற்றுதல் மற்றும் துரோகம் காணப்படும். உடலுழைப்பற்ற குற்றங்களும் அதிகரித்துள்ளன.  பெற்றோரை கனவீனம் செய்வதைக் குறித்து பத்து கட்டளைகள் எச்சரிக்கின்றன, ஆனால் வயதானவர்கள் கைவிடப்படுகிறார்கள்.

4) சுயநலம்:
அவர்கள் செல்ஃபி கலாச்சாரத்தில் சுய வளர்ச்சியை விரும்புபவர்கள்.  அவர்களின் முன்னுரிமை பணமே தவிர மக்கள் அல்ல. சிற்றின்பமும் பொழுதுபோக்கை விரும்புவதுமாக இருப்பார்கள், நல்லது செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. வளர்ச்சி அல்லது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமற்ற பொழுதுபோக்கிற்காக ஸ்மார்ட்போன்களை ஒவ்வொரு கணமும் பயன்படுத்தப்படும் நிலைதான் காணப்படுகிறது. 

5) பாசாங்கு:
எப்பொழுதும் கற்றலும் சத்தியத்தின் அறிவை ஒருபோதும் அடைய முடியாது.  அவர்கள் படிப்பாளிகள், அறிவாளிகள், அறிவுஜீவிகள் என்பதுபோல பாசாங்கு செய்கிறார்கள், ஆனால் சத்தியம் தெரியவில்லை.  யந்நேயும் யம்பிரேயும் பார்வோனின் அரசவையில் மந்திரவாதிகளாக இருந்தனர், அவர்கள் போலி அற்புதங்களைச் செய்து மோசேயை எதிர்த்தனர்.  உண்மையில், அவர்கள் பார்வோனை சத்தியத்தை அறிந்து கொள்வதிலிருந்து தடுத்தனர்.  அவர்களின் எதிர்ப்பிற்குக் காரணம் சிதைந்த மனம் மற்றும் விசுவாச பரீட்சையில் தகுதி பெறாததுமாகும் (2 தீமோத்தேயு 3:8).

தேவ வல்லமையை மனநிறைவுடனும், தேவபயத்துடனும் நான் உணர்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download