நான் உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணப்போகிறேன்

பிரசங்கியார் ஒருவர், மிகவும் தாழ்மையானவர். இவரை போதகர் ஒருவர் பிரசங்கிக்க அழைத்திருந்தார். பிரசங்கியாரும் ஒப்புதல் அளித்தார் மற்றும் ஒரு வாரம் பிரசங்கிக்க எந்த கோரிக்கையும் வைக்கவும் இல்லை. பொதுவாக விருந்தினர் வந்தால் தங்க ஒரு அறையை வைத்திருப்பார்கள்; அந்த அறையில் பிரசங்கியாரை தங்க வைக்க அழைத்து சென்றனர்; ஆனால் அந்த அறையோ அழுக்காகவும், சிலந்தி வலைகளாலும், மேஜை தூசி நிறைந்திருந்ததாகவும், கழிப்பறை சுத்தமின்றியும் காணப்பட்டது, அது  இரயில் பயணத்தை விட மோசமாக இருந்தது. இப்படி ஆயத்தம் செய்யப்படாத அறையைக் கண்டதும் அவருடன் வந்திருந்த நண்பர் மகிவும் வருத்தப்பட்டார், அவர் போதகரை சந்தித்து ஏன் சுத்தம் செய்யவில்லை என கோபித்தார். அதற்கு அந்த போதகர் சர்வ சாதாரணமாக; "அவர் ஒரு எளிய மற்றும் தாழ்மையான மனிதராயிற்றே. அவர் குறை எதுவும் சொல்ல மாட்டார்" எனக் கூறினார். பிரசங்கியார் எதுவும் எதிர்பார்க்க மாட்டார் என்பதாக தன்னுடைய விருந்தோம்பல் குறைபாடு, சீஷத்துவமின்மையை மற்றும் ஆயத்தமின்மையை நியாயப்படுத்தினார்.  இருப்பினும், ஒரு சிலர் விருந்தினர்களை கவனிப்பதில் வல்லவர்களாகவும் மற்றும் நல்ல கலைத்திறனோடு ஆயத்தம் செய்வதிலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். பயணக் களைப்போடு வரும் போது இப்படி தயாராக இருக்கும் இடங்களைக் கண்டவுடன் புத்துணர்ச்சியாவதோடு தங்களுக்காக ஆயத்தம் செய்தவர்களின் மேல் நன்றிக் கடமைப்பட்டவர்களாகி விடுகிறார்கள். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கலக்கமடைந்த சீஷர்களிடம் கூறினார்; "ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்" (யோவான் 14:2). பல ஸ்தலங்கள் இருப்பதாக ஆண்டவர் கூறினார்.  அதாவது அனைத்து கோத்திரத்தாரும், மொழி மற்றும் தேசம் எனக் கடந்து அனைவருக்கும் இடமளிப்பதற்கும் மற்றும் இலட்சக்கணக்கான மற்றும் கோடிக்கணக்கான இடங்கள் இருப்பதாகவும் ஆண்டவர் தெரிவித்தார். 

1) அன்பு:
பிள்ளைகளின் வருகையை எதிர்பார்க்கும் பெற்றோர்கள் அன்புடன் தயாராகிறார்கள்.  விருந்தளிப்பவர்கள் தங்கள் விருந்தினர்களுக்காக அன்புடன் தயார் செய்கிறார்கள்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்தில்  விருந்தளிப்பவராக இருக்கிறார், அவர் தன் ஜனங்களுக்காக அல்லது பிள்ளைகளுக்காக அன்போடு ஆயத்தம் செய்கிறார்.

2) திட்டம்:
கர்த்தராகிய இயேசு தனது பிள்ளைகளுக்காக ஒரு நித்திய வாசஸ்தலத்தை வடிவமைத்துள்ளார்.  உண்மையில், ஒவ்வொரு நபரின் விருப்பம், ரசனை மற்றும் ஆவல்களை தேவன் அறிவார்.

3) அவருடன்:
அது ஒரு  நித்திய வீடு. பரலோகம் என்பது தங்கத் தெரு அல்லது முத்துக்களால் ஆன வாயில்கள் அல்லது தேவதூதர்கள் என்பது மட்டுமல்ல;  அது நம் இரட்சகரோடும் எஜமானரோடும் வாழ்வதாகும்.  

4) எதிர்பார்க்கும் விருந்தளிப்பவர்:
கர்த்தராகிய இயேசு அனைத்து விசுவாசிகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார். முடிவுபரியந்தம் நிலைநிற்பவர்களே  இரட்சிக்கப்படுவார்கள் (மத்தேயு 24:13), அங்கு அவரோடு காணப்படுவார்கள். 

5) பாதுகாப்பான இடம்:
தேவன் ஆயத்தம் செய்யும் இடம் தீங்கற்றது, பாதுகாப்பானது மற்றும் சுத்திகரிக்கப்பட்டது.  "தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்" (வெளிப்படுத்தின விசேஷம் 21:27)

விருந்தளிப்பவரான பரலோகத்தின் தேவனாம் என் ஆண்டவருக்கு நான் நன்றியுள்ளவனா/நன்றியுள்ளவளா?

~ Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions bible study

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download