ஒரு இளைஞன் ஒரு திருச்சபைக்கு மாலை ஆராதனைக்கு வந்தான். ஒரு முக்கிய பிரசங்கியார் பேச இருந்ததால் சபை நிரம்பி வழிந்தது. அந்த நாட்களில், யாரும் அவரைப் பார்த்ததில்லை, அவருடைய பெயரை மட்டுமே கேட்டிருக்கிறார்கள். முன் வரிசையில் ஒரே ஒரு இருக்கை மட்டுமே இருந்தது, ஆனால் அழுக்கு ஜீன்ஸ் மற்றும் ஜாக்கெட்டுடன் ஒரு நபர் அந்த இருக்கைக்கு அருகில் அமர்ந்திருப்பதாக வரவேற்பாளர் கூறினார். அந்த இளைஞன் அந்த இருக்கையை ஏற்று, அந்த நபரின் அருகில் அமர்ந்தான். அங்கு அமர்ந்திருந்த பெரும்பாலான உறுப்பினர்களுக்கும் மற்றும் வரவேற்பாளருக்கும் விருந்தினர் தான் பிரசங்கியார் என்பது தெரியாது. வேதாகமம் மனத்தாழ்மையைக் கற்பிக்கிறது, மோசே போன்ற தலைவர்கள் அந்த நல்லொழுக்கத்தை எடுத்துக்காட்டுகின்றனர். விசுவாசிகள் கிறிஸ்துவின் சிந்தையைக் கொண்டிருக்க வேண்டும் என்று பவுல் அறிவுறுத்துகிறார் (பிலிப்பியர் 2:5-8). மனத்தாழ்மை என்பது லத்தீன் வார்த்தையிலிருந்து உருவானது, அதாவது ‘பூமியிலிருந்து (தரை மட்டும் தாழ்த்துதல்)’ என்று அர்த்தம். அவர் வானத்திலிருந்து, மண்ணிலிருந்து படைக்கப்பட்ட சாவுக்கேதுவான பாவமுள்ள மனிதர்களுக்கு மத்தியில் அது கூடாரமாக இருந்தாலும் அங்கே வாசம் செய்தார்.
அடையாளமற்றவர் (அநாமதேயம்):
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து முப்பது வருடங்களாக அடையாளமற்றவராக அதாவது அறியப்படாதவராக வாழ்ந்தார். அவர் தோன்றியபோது, மற்ற பாவிகளைப் போல ஞானஸ்நானம் பெற வரிசையில் நின்று கொண்டிருந்தார். அவர் தன்னை யார் என்று வெளிப்படுத்தாதவராகவும் மற்றும் பாவிகளுடன் அடையாளப்படுத்துவதும் என தேவ குமாரனின் மனத்தாழ்மையைக் காட்டுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம் அவர் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளுதல், சுய விளம்பரம் மற்றும் சுய மகிமை ஆகியவற்றை நிராகரித்தார். அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.
தேவ சித்தம் மாத்திரமே:
தேவன் தனக்கான விருப்பங்களைக் கொண்டிருக்கவில்லை. பிதாவின் விருப்பத்தை நிறைவேற்றினார். ஞானஸ்நானம் பெற்று எல்லா நீதியையும் நிறைவேற்றுவதே தேவனின் சித்தம். அதாவது தார்மீக பாவிகளுடன் அடையாளம் காணவும், அவர்களில் ஒருவராகவும், ஒரு மனிதனால் ஞானஸ்நானம் பெறவும், என ஒரு பாவியைப் போல் நடந்தார். தேவனின் குமாரன் தேவ சித்தத்திற்கு முன்னுரிமை அளித்தார் மற்றும் கெத்செமனே தோட்டத்தில் வெளிப்படுத்தப்பட்ட அவரது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் தெரிவுகளை ஒதுக்கி வைத்தார்.
சுயாதீன சரணடைவு:
நாசரேத்திலிருந்து, கர்த்தர் ஞானஸ்நானம் பெறுவதற்காக யோவான் ஸ்நானகனிடம் வருவதற்கு 65 கிமீ பயணம் செய்ய வேண்டியிருந்தது, மேலும் இஸ்ரவேல் தேசத்திற்கு உலகின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியாக அடையாளம் காணப்பட்டார். கிறிஸ்துவைத் தேடிய யோவான் ஸ்நானகன் அல்ல. அவர் வழித்தோன்றலாக அனுப்பப்பட்டார். அந்தச் சலுகை, தெரிவு, சுயாட்சி ஆகியவற்றைக் கூட விட்டுக்கொடுக்க ஆண்டவர் தயாராக இருந்தார்.
அவருடைய சித்தத்தைச் செய்து, என் சுயாதீன விருப்பத்தை விட்டுக்கொடுப்பதற்காக, நான் அடையாளமற்ற நபராக இருக்க தாழ்மையுடன் இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்