"கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு பெரிய பரிவர்த்தனை சலுகையைப் பெற்றுக் கொள்ள மக்களை அழைத்தார். பாவம், துக்கம், கவலைகள், வியாதிகள், தாழ்வு மனப்பான்மை, அடிமைத்தனம், பயம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு, பாரங்களைச் சுமக்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் அனைவரும் அவரிடம் வந்து, அவருடைய நுகத்தை அதாவது தேவனுடைய பாரத்தை எடுத்துக் கொள்ள அழைக்கிறார்; ஏனெனில் அவரின் பாரம் எளிதாகவும், இலகுவாகவும் உள்ளது (மத்தேயு 11:28). மோசே பிரமாணத்திலிருந்து பரிசேயர்கள் 613 விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பிரித்தெடுத்து, அவற்றைக் கடுமையாகப் பின்பற்றினார்கள். ஒரு யூதருக்கு சுமக்க முடியாதபடி மிகக் கடினமாக இருந்தது. "இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்?"
(அப்போஸ்தலர் 15:10).
விநியோகம்:
ஒரு நுகம் இரண்டு மாடுகளுக்கு சுமையை சமமாக விநியோகிக்கிறது மற்றும் பிரிக்கிறது. இருப்பினும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நுகம்/சுமையின் கனமான பகுதியை எடுத்து கொண்டு தனது சீஷர்களுக்கு லேசான பகுதியைக் கொடுக்கிறார். ஒருவேளை, விகிதம் 99.99:0.01 ஆக இருக்கலாம். சில சமயங்களில், நுகத்தடியே மிகவும் கனமாக இருப்பதால், அதை சுமந்து செல்லும் விலங்கு சரிந்துவிடும்; நுகம் எளிதானது, விபத்துகளோ பாதகமான விளைவுகளோ இல்லை என்பது தேவனின் வாக்குத்தத்தம்.
இலகுவான சுமை:
தேவன் தனது அருட்பணியின் ஒரு பகுதியாக நிறைவேற்ற வேண்டிய பணிகளை அல்லது பொறுப்புகளை நமக்குத் தருகிறார். ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் வழங்கும் பணிகள் மாறுபடலாம் ஆனால் சுமைகள் லேசானது.
இழந்ததற்கான சுமை:
அனைத்து விசுவாசிகளும் இந்த சுமையை சுமக்க வேண்டும். ஒருவரும் கெட்டுப் போகாமல் அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே தேவனின் விருப்பமாக இருக்கிறது (2 பேதுரு 3:9). இது ஒரு ஆவிக்குரிய சுமையாகும், ஆம் பரலோகத்திலுள்ள பிதாவையும் தேவதூதர்களையும் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் சந்தோஷப்படுத்துவதே இதன் நோக்கமாகும். "மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது" (லூக்கா 15:10).
இரக்கம் என்னும் சுமை:
கர்த்தர் தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தில் ஆவிக்குரிய பாரத்தை பலமுறை வெளிப்படுத்தினார். மனித உருவில், ஆண்டவர் தனது சரீரத்திற்கு இளைப்பாறுதல் மற்றும் ஓய்வை விரும்பினார். எனினும், ஒரு கூட்டம் அவரிடம் வந்தது. அப்போது அவர் அவர்களைக் கண்டு இரங்கி, அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போன்றவர்கள் என்றார் (மத்தேயு 9:36). கர்த்தர் சத்தியத்தை அறியாத திரளான மக்களைக் காணும்போது தம்முடைய சீஷர்களின் இருதயங்களில் இரக்கத்தை விரும்புகிறார்.
ஜெப சுமை:
கெத்செமனே தோட்டத்தில் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோர் தேவனுடன் ஜெபிக்க அழைக்கப்பட்டனர். இருப்பினும், அவர்களால் ஒரு மணி நேரம் விழித்திருந்து ஜெபிக்க முடியவில்லை (மத்தேயு 26:40).
தாராள மனப்பான்மை என்னும் சுமை:
கிறிஸ்தவ சீஷத்துவம் மற்றும் ஒழுக்கம் என்பது மற்றவர்களுக்கு சேவை செய்ய நமது எல்லா வளங்களிலும் (நேரம், திறமை, பொக்கிஷங்கள், அறிவு, தாலந்துகள், தொடர்புகள், செல்வாக்கு எனப் போன்றவை) தாராளமாக இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட மெகா பரிமாற்றச் சலுகையை நான் பயன்படுத்திக் கொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்