"கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்" (எஸ்றா 7:10). எஸ்றாவைப் போலவே, தேவனுடைய வார்த்தையைப் படிக்க தீர்மானம் தேவை.
அணுகுமுறை:
வேதாகமத்தைப் படிப்பது என்பது உள்ளான நபரின் விருப்பத்தின் தீர்மானம் அல்லது முடிவு. இது தேவனுக்கு பயப்படும் பயத்திலிருந்து அல்லது வானத்திற்கும் பூமிக்கும் தேவனானவரிடமிருந்து ஏற்படும் பயத்திலிருந்து உருவாகிறது. நோக்கம் என்னவெனில் கீழ்ப்படிதல், அதாவது நல்ல இலக்கியத்தை அனுபவிப்பதற்காகவோ அல்லது அறிவைப் பெருக்குவதற்காகவோ அல்ல, ஆனால் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்திற்குக் கீழ்ப்படிவதாகும். உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் ஒரே ஒரு புத்தகமான வேதாகமம் மாத்திரமே, அதன் ஆக்கியோனான பரிசுத்த ஆவியானவர் உடனிருந்து புரிதலுக்கு உதவுகிறார். எனவே, வேதாகமத்தின் நுண்ணறிவை வழங்குமாறு அவரிடம் கோருவது என்பது பொருத்தமானது மற்றும் அவசியமானது.
செயல்பாடு:
தேவனுடைய வார்த்தையைக் கேட்கவும் கற்றுக்கொள்ளவும், ஆயத்தம் தேவை. முதலாவதாக, இன்று தேவன் பேசுவதைக் கேட்க ஆவிக்குரிய ஆயத்தங்களான ஜெபம், ஒரு எதிர்பார்ப்பு, கேட்பதற்கு தயாரான நிலை மற்றும் விசுவாசம் என எல்லாம் அவசியம். இரண்டாவதாக, வேதாகமத்தைப் படிப்பதன் நோக்கம் மனதைப் புதுப்பிப்பதாகும். வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்திற்கு எதிரான உலகின் கருத்துக்கள், கலாச்சார விழுமியங்கள் மற்றும் மரபுகள் ஆகியவற்றால் மனம் நிரம்பியுள்ளது; அதையெல்லாம் எப்படி கணிணி, ஸ்மார்ட்போன் போன்றவற்றில் தேவையில்லாததை அழிப்பதுபோல நம் எண்ணங்களில் இருந்து நீக்கப்படுவது அவசியம். அதற்குப் பதிலாக வேதாகமத்திலிருந்து நல்ல புதுமையான எண்ணங்களால் நிரப்பப்பட வேண்டும், நல்ல புதுப்பிக்கப்பட்டதாக நம் மனதை நிறைவு செய்ய வேண்டும். மூன்றாவதாக, குறிப்புகளை எடுக்க பேனாக்கள், குறிப்பேடுகள் எனப் போன்றவற்றை எழுதுவதற்கு தேவையானவற்றை வைத்திருப்பது எப்போதும் நல்லது. முடிந்தால், ஆய்வு வேதாகமங்கள், ஒத்திசைவுகள் மற்றும் விளக்கவுரைகளைப் பயன்படுத்தவும்.
பயன்படுத்துங்கள்:
சத்தியம் ஒரு நபரை மாற்றுகிறது, எப்போது என்றால் சத்தியத்தை நம் வாழ்வில் பயன்படுத்தும் போதும் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் போது மட்டுமே மாற்றம் அடைய முடியும். உதாரணமாக, சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக நம் எரிச்சல் தணிய வேண்டும் என்று பவுல் எழுதுகிறார் (எபேசியர் 4:26). இந்தக் கொள்கையை அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். யாருடன் நாம் அடிக்கடி கோபப்படுகிறோம், ஏன், எவ்வளவு நேரம் கோபப்படுகிறோம் என்பதை ஆராயுங்கள். பிறகு, அந்த கோபத்தைத் தூண்டும் காரியங்களைத் தவிர்க்க வேண்டும்; அப்படியே கோபப்பட்டாலும் அது சில மணிநேரங்களில் மறைந்துவிட வேண்டும். இந்தப் பயன்பாடு கற்பிப்பதன் மூலம் குடும்ப உறுப்பினர்களுக்கும் நீட்டிக்கப்படலாம். இதை செயல்படுத்தி காட்டும் போது அது பிரசங்கமாக மாறலாம்.
நான் தேவ வார்த்தையைப் படிக்கிறேனா, பயிற்சி செய்கிறேனா, கற்பிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்