கபால்மோச்சன் மேளா என்பது ஹரியானா மாநிலத்தில் லட்சக்கணக்கானோர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடும் வருடாந்திர திருவிழா கூட்டமாகும். இதில் கலந்து கொள்ள ஹரியானா சுற்றியுள்ளரும், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற பல மாநிலங்களிலிருந்தும் ஜனங்கள் வருகிறார்கள். வேதாகமத்தை விநியோகிக்க அல்லது விற்பதற்காக ஒரு குழுவினர் மேளாவிற்கு வருகை தந்தனர். 1980களின் பிற்பகுதியில் ஒரு வருடத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ஏற்பாடு பிரதிகள் விநியோகிக்கப்பட்டன. அடுத்த ஆண்டும், அதைக் காட்டிலும் அதிகமாக விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்த்து, கையிருப்பில் இருந்து செலவழித்தும் ஆயத்தம் செய்தார்கள். விற்கச் சென்றவர்களில் பெரும்பாலானோர் கூறியது என்னவென்றால், முந்தைய ஆண்டு வாங்கியவர்களே இந்த ஆண்டும் வந்து பரிசுத்த வேதாகமத்தை வாங்கிச் சென்றார்கள். அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த அவர்கள், அப்படியா; அவர்கள் வாங்கிப் போன வேதாகமத்தை என்ன செய்தார்கள் என்று கேட்டார்கள். அவர்கள் அந்த வேதாகமத்தை ஒரு புதிய வெல்வெட் துணியால் நன்கு பொதிந்து வைத்து, வழக்கமாக வழிபடும் தெய்வங்களுடன் சேரத்து வைத்து வழிபட்டனர். அவர்களில் யாருமே அதை படிக்கவில்லை, ஆனால் வணங்கினர் என்றனர். எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் எருசலேமிலிருந்து தனது ரதத்தில் ஏசாயா புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். உயர் கல்வியறிவு பெற்றிருந்தாலும், அவன் படித்ததை எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை, மேலும் பிலிப்புவிடம்; "ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்? என்று சொல்லிக் கேட்டான்" (அப்போஸ்தலர் 8:31).
1) சென்றடைய வேண்டும்:
இலக்கிய வடிவில் புதிய ஏற்பாடு அல்லது ஆடியோ வேதாகமம் மூலம் அநேகரை சென்றடைய வேண்டும் என விசுவாசத்துடன் பணி செய்கிறோம். ஆனால் மக்கள் அதை அணுகுவதற்கு உதவுவதில்லை, அவர்கள் படிக்க அல்லது கேட்க ஊக்குவிக்கப்பட வேண்டும். மேளாவைப் பார்வையிட்டவர்கள், புதிய ஏற்பாட்டின் பிரதிகளை வைத்திருந்தாலும், அதைப் படிக்கவில்லை.
2) கற்பிக்கப்பட வேண்டும்:
எத்தியோப்பியாவின் நன்கு படித்த மந்திரியால் ஏசாயாவின் செய்தியைப் புரிந்துகொள்ளவோ அல்லது உள்வாங்கிக் கொள்ளவோ முடியவில்லை. அவனால் ஒவ்வொரு வார்த்தையையும், வாக்கியத்தையும் படிக்கவும், புரிந்துகொள்ளவும் முடியும், ஆனால் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. படித்தவர்களால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், எளியவர்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும்? எத்தியோப்பியன் சொன்னது போல், தனிப்பட்ட தொடர்பு அல்லது விளக்கம் இன்றியமையாததாகிறது.
3) பயிற்றுவிக்கப்பட வேண்டும் :
அவர்களுக்குப் புரிய வைப்பது போதாது அல்லது புரிந்துகொள்வது மட்டும் போதாது, அவர்கள் கற்றுக் கொள்ளும் சத்தியங்களைக் கொண்டு அவர்களின் மனதை ‘புதுப்பிக்க’ அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அதனால் அவர்கள் தேவனுடைய வார்த்தையில் தங்களை சரிபடுத்துவதன் மூலம் ஆவிக்குரிய பக்குவத்தில் வளர முடியும்.
4) முன்மாதிரிகள் வேண்டும்:
புதிய விசுவாசிகள் பின்பற்றுவதற்கு மாதிரிகளைக் கொண்டிருக்க விரும்புகிறார்கள். நற்செய்தி என்பது ஒரு தத்துவம் அல்லது கோட்பாடு மட்டுமல்ல, வாழ்க்கை.
நான் நற்செய்தி சென்றடைய, கற்பிக்க, பயிற்றுவிக்க உதவுகிறேனா மற்றும் நல் மாதிரியாக செயல்படுகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran